கிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம்

9 கிராமப்புறப் பள்ளிகள் 5200 மாணவர்கள் 2900 மாணவர்களுக்கும் மேல் முழுமையான கல்வித்தொகையில்! கணினி வசதியுடன், ஆங்கில வழிக்கல்வி நுண் ஊட்டசத்துக்கள் நிறைந்த இலவச மதிய உணவுs

ஈஷா சமூகநலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு சிறந்த உயர்தர ஆங்கில வழிக்கல்வியை வழங்குவதற்காக ஈஷா வித்யா பள்ளிகள் செயல்படுகின்றன. 60% குழந்தைகளுக்கு சிறப்பு டியூசன் பயிற்சி, நோட்டு புத்தகங்கள் மற்றும் பாட புத்தகங்கள் உட்பட முழுமையான உதவித்தொகைக்காக தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் நன்கொடை செய்து உதவுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது இயங்கிவரும் 9 ஈஷா வித்யா பள்ளிகளில் சுமார் 5200 குழந்தைகள் பயில்கிறார்கள். முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்லும் பெரும்பான்மை குழந்தைகளுக்கு ஒரு ஒளிமயமான எதிர்கலாத்திற்கான நம்பிக்கையாக ஈஷா வித்யா உள்ளது.

பாடக் கல்வியை தாண்டி குழந்தைகள் தங்கள் திறமையை முழுமையாய் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு செயல்முறைகளுடன் கல்வி வழங்கப்படுவதோடு, மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழலும் ஏற்படுத்தித் தரப்படுகிறது. ஈஷா வித்யா மூலமாக கிராமப்புற மாணவர்கள் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைகளிலிருந்து மேம்பாடு பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.