21 வாரங்கள்சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்பானது, பாரம்பரிய ஹடயோகாவில் ஆசிரியராக தேர்ச்சி பெற துணையாக இருக்கும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், தாங்கள் சுயமாக யோகா வகுப்புகளை நடத்த முடியும். ஹடயோகாவின் அடி ஆழங்களை கற்றுணர்ந்து மக்களுக்கு கற்பிப்பதன் மூலம் தற்போது வெகுவாக மறைந்துவரும் பழைமையான யோக அறிவியலை செம்மைப்படுத்த முடியும். இந்த ஹடயோகா ஆசிரியர் பயிற்சியானது, யோகாவை வெறும் உடற்பயிற்சிக்காக அல்லாமல், இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை தன்மையை உணர்தலை நோக்கமாகக் கொண்டு கற்றுக்கொடுக்கப்படுகிறது.