Wisdom
FILTERS:
SORT BY:
பிரபஞ்சத்தில் நிகழும் அசைவுகள் அனைத்தும் மேலோட்டமானவை. உண்மையானது எப்போதும் அசைவின்றி இருக்கிறது.
தியானம் என்பது திறன் சார்ந்த விஷயமல்ல, உங்கள் விருப்பம் சார்ந்த விஷயம்.
எண்ணங்களும் உணர்ச்சிகளும் வெவ்வேறு விஷயங்கள் அல்ல. நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்களோ அப்படித்தான் நீங்கள் உணரவும் செய்கிறீர்கள்.
உங்களை நீங்களே உணராதபோது மட்டும்தான் பிறர் கருத்துகள் உங்களுக்கு முக்கியமாகிறது.
உங்களுக்குள் நிறைவை உருவாக்கிட முடிந்த விதங்களிலெல்லாம் முயன்றுபார்த்து எதுவும் உண்மையாகவே வேலை செய்வதில்லை என்று நீங்கள் உணர்ந்திருந்தால், நீங்கள் "இப்போது யோகா" எனும் நிலைக்கு வந்துவிட்டீர்கள் என்று பொருள்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒருவித தனித்திறமை உள்ளது; ஆனால் இன்னொருவரைப் போல இருப்பதற்கான முயற்சியில் பல நேரங்களில் அவர்கள் அதை அழித்துவிடுகின்றனர்.
வாழ்க்கை என்பது வரமோ சாபமோ இல்லை, அது வெறுமனே ஒரு நிகழ்வு. அதில் நீங்கள் நன்றாக சவாரி செய்தால் அழகாகவும் அற்புதமாகவும் ஆகிறது, மோசமாக சவாரி செய்தால் அசிங்கமாகவும் சித்திரவதையாகவும் ஆகிறது.
பாரம்பரியம் என்பது முந்தைய தலைமுறைகள் செய்ததையே செய்துகொண்டிருப்பதல்ல, அவர்களது அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது.
நீங்கள் எந்த அளவு பாதுகாப்பைத் தேடுகிறீர்களோ அந்த அளவு பாதுகாப்புணர்வின்றி இருப்பீர்கள். உண்மையான பாதுகாப்பு என்பது எதைப்பற்றியும் கவலையற்ற நிலையில் மட்டும்தான் உள்ளது.