தீட்சை என்றால் சில குறிப்புகள் அல்ல. உங்களது ஆகாய உடலைத் தொடுவதே அதன் நோக்கம். அந்த உடலை தொட்டுவிட்டால், அது 100% உத்திரவாதம் என்று அர்த்தம். ஏனென்றால் வாழ்வோ சாவோ எதுவும் இதனை எடுத்து விட முடியாது. எந்த விதமான வாழ்க்கை வாழ்ந்தாலும், எவ்வளவு முட்டாள்தனமாக வாழ்ந்தாலும், அந்த விதை இறக்காத விதமாகத்தான் தீட்சை அளிக்கப்படுகிறது.

என்னுடைய உயிர்சக்தியை அளிக்கும்போது, மக்கள் இப்படி இருந்தால், அந்த கணத்திலேயே அது என்னிடம் திரும்பி விடும்; பயனில்லாமல் போய் விடும்.

தியானநிலையின் அடிப்படை தன்மையே உங்களின் உடல் மற்றும் மன அமைப்பின் செயல்பாடுகளிலிருந்து தூரப்படுத்திக் கொள்வது. இந்த நிலையில்தான் ஒருவரின் சக்திநிலை மீது தாக்கம் எற்படுத்த முடியும். ஒருவரை எளிய செயல்முறையான ஷாம்பவி மஹாமுத்ராவிற்கு தீட்சை கொடுப்பதற்கே, அவர்களிடம் இருபது முப்பது மணிநேரம் பேச வேண்டும். ஏனென்றால் அப்போதுதான், அவர்கள் தங்கள் உடல், மனம், உணர்வுகளைப் பற்றி அதீத விழிப்பாக இருக்க மாட்டார்கள். அப்போதுதான் அவர்களுக்கு தீட்சையளிக்க முடியும். இல்லையென்றால் அவர்களுடைய சக்திநிலை திறந்த நிலையில் இருப்பதில்லை.

நாம் எப்போதும் அவர்களை வகுப்புகளில் கூறுபவற்றை எழுத வேண்டாம் என்று சொல்கிறோம். எழுதும்போது உங்கள் மனதோடு பெரிதும் அடையாளம் கொள்வீர்கள். நீங்கள் நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் எழுத மாட்டீர்கள்; உங்கள் மனதில் எது உங்களுக்கு முக்கியமாக தோன்றுகிறதோ அதைத்தான் எழுதுவீர்கள். இப்படிச் செய்வதால் உங்களுக்கு வழங்கப்படும் அனைத்தையும் அழிக்கிறீர்கள். நானும் பல வழிகளில் எழுத வேண்டாம் என்று சொல்கிறேன். இதனால் என்னை படிப்பறிவில்லாத முட்டாள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில், அவர்களுக்கு சேகரிக்க மட்டும்தான் தெரியும். இவர்களெல்லாம் முற்காலத்தில் இருந்த வேட்டைக்காரர்கள் மற்றும் சேகரிப்பவர்களை போன்றவர்கள். இவர்கள் எங்கு சென்றாலும் எதையாவது சேகரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். இதையும் தாண்டி இன்னொரு பரிமாணம் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

என்னுடைய பிரச்சனை என்னவென்றால், குறிப்பிட்ட வகுப்பில் ஒருவர் திறந்த நிலையில் இல்லாமல் இருந்தாலும், நான் மேலும் மேலும் பேசுவேன்; அவரை ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட செய்வேன்.

இந்த மாதிரியான எந்த முட்டாள்தனமும் இன்றி இருந்தால், அவர்கள் வகுப்புக்குள் வந்த பத்து நிமிடத்திற்குள் அவர்களுக்கு நான் தீட்சை கொடுப்பேன். நீங்கள் சற்றே வளர்ச்சியடைந்திருந்தீர்கள் என்றால் என்னால் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும், பாருங்கள். 15நிமிட சூன்ய தியானத்திற்கு தீட்சை அளிப்பதற்கு 45-50 மணிநேரம் நாம் பேச வேண்டியுள்ளது. இது அர்த்தமற்றதுதான். ஆனால் இது இன்றி நாம் செயல் செய்ய முடியாது. இதெல்லாம் உடலிலிருந்து மனதிலிருந்து உங்கள் அடையாளத்தை எடுப்பதற்கே; உங்களது எண்ணம், உணர்வு, உடலே உங்களுக்கு பெரிதில்லை; மெதுவாக அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்த பின், அவர்களது சக்திநிலை திறந்த நிலையில் இருக்கும். இல்லையென்றால் அதற்கு வாய்ப்பே இல்லை.

உங்கள் உடல் மற்றும் மனதின் இயக்கத்திலேயே நீங்கள் அடையாளம் கொண்டால், உங்கள் சக்திநிலையும் அந்த வடிவத்திலேயே ஒட்டிக் கொள்ளும். இப்படி இருந்தால் மனிதனால் புதிய பரிமாணங்களை அறிந்து கொள்ள முடியாது.

இந்த உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், நிலவில் இருந்தாலும், நான் உங்களுக்கு தீட்சை வழங்குவேன். 

இந்த அடையாளத்தை தளர்த்துவதற்கு, மறைந்து போவதற்கு அல்ல, நிறைய செயல் செய்ய வேண்டியிருக்கிறது. சற்று தளர்த்துவதற்கே பல மணிநேர செயல் தேவையிருக்கிறது. இது மிகவும் கொடூரமான செயல்-ஏதாவது செய்வதற்கு முன்னால் உங்கள் உடலையும் மனதையும் தூரப்படுத்த வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் அதனை நிகழ விட மாட்டார்கள். என்னுடைய உயிர்சக்தியை அளிக்கும்போது, மக்கள் இப்படி இருந்தால், அந்த கணத்திலேயே அது என்னிடம் திரும்பி விடும்; பயனில்லாமல் போய் விடும்.

என்னுடைய பிரச்சனை என்னவென்றால், குறிப்பிட்ட வகுப்பில் ஒருவர் திறந்த நிலையில் இல்லாமல் இருந்தாலும், நான் மேலும் மேலும் பேசுவேன்; அவரை ஏதோ ஒரு விதத்தில் ஈடுபட செய்வேன்.

அதனால் உங்களை உங்கள் உடல், மனம், எண்ணம், உணர்விலிருந்து இடைவெளிப்படுத்திக் கொண்டால், இது மிகவும் எளிதாக நடக்கும். நீங்கள் வகுப்பிற்கு வர வேண்டும் என்று கூட அவசியமில்லை. உங்கள் வீட்டில், இந்த உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், நிலவில் இருந்தாலும், நான் உங்களுக்கு தீட்சை வழங்குவேன். எல்லாம் எளிதாக நடக்கும்.

சத்குரு App...இப்போது தமிழில்

  • சத்குருவுடன் தொடர்பில் இருங்கள். எங்கேயும் எப்போதும்
  • நெருப்பாய் தகிக்கும் உங்கள் கேள்விகளுக்கான விடையை சமீபத்திய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களில் பெறுங்கள்
  • வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய தியானம் இலவசமாக
  • ஈஷா நிகழ்ச்சிகள் பற்றி அறிந்திடுங்கள்!