மித்தாலி ராஜ்: நமஸ்காரம் சத்குரு, தினசரி நம்மை எதிர்த்து வரும் கருத்துக்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் வலிமையை நமக்குள் எப்படி உருவாக்குவது என்ற உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

சத்குரு:

என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம், என்று நாம் செய்யும் செயலுக்கு தெளிவுசேர்க்க முனைவதே சிறந்தது.

நமஸ்காரம் மித்தாலி. மக்கள் எல்லாவற்றைப் பற்றியும் கருத்துக்கள் வைத்திருக்கிறார்கள், ஆனால் அது உங்களுக்கும் எவருக்கும் ஒரு பொருட்டாக இருக்கத் தேவையில்லையே! நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றிய தெளிவு நம்மிடம் இல்லாதபோது மட்டும்தான், அவர்கள் கருத்துக்கள் நம்மை பாதிக்கும். பிறர் கருத்துக்களை எதிர்கொள்ள முயன்று போராடுவதற்கு பதில், என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம், என்று நாம் செய்யும் செயலுக்கு தெளிவுசேர்க்க முனைவதே சிறந்தது. இந்த தெளிவு நமக்குள் வந்தால், பிறர் கருத்துக்கள் ஒரு பொருட்டாக இருக்காது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மக்கள் எப்போதும் நம்மைப் பற்றி கருத்துக்கள் வைத்திருக்கிறார்கள், அது அவர்களின் உரிமை. கன்னட துறவி அக்கமகாதேவி சொன்னது போல,"வீட்டை மலையிலும் காட்டிலும் கட்டிவிட்டு, இப்போது விலங்குகளுக்கு அஞ்சுகிறீர்கள் - நீங்கள் அங்கு சென்றிருக்கக் கூடாது. வீட்டை கடைத்தெருவில் கட்டிவிட்டு, கடைத்தெருவின் கூச்சலுக்கு அஞ்சுகிறீர்கள் - நீங்கள் இருப்பதற்கு அது சரியான இடமில்லை."

நீங்கள் ஒரு சமுதாயத்தில் வாழும்போது, பிறர் என்ன சொல்வார்கள் என்று அஞ்சுகிறீர்கள். அது சமுதாய வாழ்க்கையின் ஒரு அங்கம். எப்போதும் யாராவது ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இன்று சமூக ஊடகங்களால் அது பெரிதுபடுத்தப்பட்டுள்ளது, ஆனால் மக்கள் எப்போதும் கருத்துக்கள் வைத்துவந்துள்ளார்கள்.

நீங்கள் பந்தை நன்றாக எதிர்கொண்டால் போதும், அனைவரின் கருத்துக்களும் மாறுவதை கவனிப்பீர்கள்.

ஒரு காலத்தில், மூன்று அல்லது நான்கு பேரின் கருத்துக்களுடன் நீங்கள் போராட வேண்டியிருந்தது. இன்று நீங்கள் 50 லட்ச மக்களின் கருத்துக்களுடன் போராடவேண்டும், ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இதில் எந்த பிரச்சனையுமில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் நாம் என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம், என்று நமது வாழ்க்கையில் முழுமையான தெளிவைக் கொண்டுவருவது மிகவும் முக்கியம். நம்மிடம் இந்தத் தெளிவு இருந்தால், கருத்துக்கள் பறக்கும், கருத்துக்கள் மாறவும் செய்யும்.

நீங்கள் அற்புதமாக பந்தை அடிப்பவர் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் பந்தை நன்றாக எதிர்கொண்டால் போதும், அனைவரின் கருத்துக்களும் மாறுவதை கவனிப்பீர்கள்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

YAT18_Newsletter-650x120