மாற்றங்களை வரவேற்க உதவும் எளிமையான ஐந்து வழிகளை நமக்கு வழங்குகிறார் சத்குரு.

#1 பாயும் முன்.. தேவை கவனம்

ஒரு முறை முடிவெடுத்து இறங்கி விட்டால் அதன் பிறகு திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இருக்க கூடாதுதானே.

நாம் இப்போது இருக்கும் நிலையை மாற்ற, நம்மை paayum-mun-gavanam-thevai-picநாமே கரைத்துக்கொண்டு புத்துயிராக பார்க்க தயார் என்றதுமே நம்முன் பல வாய்ப்புகள் திறக்கிறது. தேர்ந்தெடுக்க பல வாய்ப்புகள் இருந்தாலே குழப்பம்தானே. இருக்கும் வாய்ப்புகளில் இருந்து நீங்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்வதற்கே ஒரு குறிப்பிட்ட பயிற்சி தேவைப்படும். இப்போது பிரச்சனை என்னவென்றால் மக்கள் எதிலாவது குதித்துவிட்டு அதன்பிறகு தங்கள் மனதிடம் ஆலோசனைக்கு செல்கிறார்கள். இது எப்படி வேலை செய்யும்? நீங்கள் என்ன செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே போதுமான கவனம் செலுத்திப் பார்க்க வேண்டும்தானே. ஒரு முறை முடிவெடுத்து இறங்கி விட்டால் அதன் பிறகு திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இருக்க கூடாதுதானே. எப்போதும் கவனம் பின்னாலேயே சென்று கொண்டிருந்தால் வாழ்க்கை எப்படி முன்னேற்றமாக போகமுடியும்.?

#2 உள்ளதை உள்ளபடி பாருங்கள்

seeing-things-as-they-are-image-unsplash-@brunusஇப்போது நீங்கள் ஒரு தொழிலைப் பற்றி யோசிப்பதாக இருந்தால், எது சரியாக வேலை செய்யவில்லையோ அதை கைவிடுவது என்பது சுலபமானது, தவிர்க்கவும் முடியாத ஒன்று. எப்படியும் அது தானாகவே நடந்துவிடும். ஆனால் எது வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறதோ அதை கைவிட்டு, அதிலிருந்தே வேறொன்றை புதிதாக உருவாக்குவதற்கு தீர்க்கமான தொலைநோக்குப் பார்வையும், தைரியமும், ஒருவிதமான பைத்தியக்காரத்தனம்கூட உங்களுக்குள் இருந்தால்தான் முடியும். முற்றிலுமாக வேறொரு நிலையில் இருந்து வாழ்க்கையைப் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம். மற்றவர்களின் பார்வையில் புலப்படாத ஒன்றை காண்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஷணமும் இப்போது பிறந்த குழந்தையாக அனைத்தையும் உங்களால் பார்க்க முடிந்தால் எல்லாவற்றையுமே தெள்ளத்தெளிவாக நீங்கள் பார்க்கலாம். தெளிவான பார்வை இருக்கும்போது, வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் சுலபமாக கடந்துசெல்ல முடிகிறதுதானே.

நீங்கள் இப்போது பார்க்க வேண்டியது, நிறுவனமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட மனிதராக இருந்தாலும் சரி, நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ அதை அப்படியே விட்டுவிலக உங்களுக்கு போதுமான திறன் இருக்கிறதா என்பதைதான். அதிலும் "முற்றிலுமாக இறந்துவிட்டு" மீண்டும் புதிதாக துவங்க போகிறீர்களா அல்லது "கொஞ்சமாக இறந்து" மறு துவக்கத்தை ஏற்படுத்தப் போகிறீர்களா என்பது, ஒருவர் தான் இருக்கும் சூழ்நிலையின் யதார்த்தங்களை நன்றாக தெரிந்துகொண்டபிறகு அந்த ஷணத்தில் எடுக்க வேண்டிய முடிவு.

இப்போது புதிதாக பிறந்த உயிராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு எதைப்பற்றியும் எந்த முன்முடிவும் இருக்காது. பிறந்த குழந்தையைப் போல நீங்களும் எல்லாவற்றையும் பார்க்க ஆர்வத்துடன் விருப்பமாக இருப்பீர்கள். இப்படி நீங்கள் இருக்கமுடிந்தால், எதிலும் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கையை கடந்து செல்லமுடியும். பிறந்த பச்சிளம் குழந்தைகூட சில நாட்களில் தனக்கு தெரியும் என்று நினைக்க துவங்கி விடுகிறது. எனக்கு தெரியும் என்று நினைக்கத் துவங்கியதுமே தடுமாற்றம் வந்துவிடும். ஒவ்வொரு ஷணமும் இப்போது பிறந்த குழந்தையாக அனைத்தையும் உங்களால் பார்க்க முடிந்தால் எல்லாவற்றையுமே தெள்ளத்தெளிவாக நீங்கள் பார்க்கலாம். தெளிவான பார்வை இருக்கும்போது, வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் சுலபமாக கடந்துசெல்ல முடிகிறதுதானே.

வாழ்க்கையை அதன் தன்மையில், எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்க்க முடிந்தால், வாழ்க்கையை கையாள தேவையான புத்திசாலித்தனம் செயல்படத் துவங்கும். வாழ்க்கையை அப்படியே அதன் தன்மையில் பார்க்க முடியாதபோது, உங்கள் புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக செயல்படுகிறது.

ஒரு துப்பறியும் கதை…

ஒருமுறை, ஷெர்லாக் ஹோம்ஸ் தனது உதவியாளர் வாட்சனுடன் மலைப்பகுதிக்குச் சென்று கூடாரம் அமைத்து தங்கினார். இரவு வந்தது, இருவரும் உறங்கினர். நடு இரவில் மெதுவாக வாட்சனின் தோள்களில் இடித்தார் ஷெர்லாக் ஹோம்ஸ். கண்திறந்து பார்த்த வாட்சனிடம்,

"உனக்கு இப்போது என்ன தெரிகிறது?" என்று கேட்டார்.

படுத்திருந்த வாட்சன், அப்படியே கண்திறந்து பார்த்து, தெளிவான பரந்த வானமும் எண்ணற்ற நட்சத்திரங்களும் தெரிகிறது என்றான்.

இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது என்றார் ஷெர்லாக் ஹோம்ஸ்.

நாளைய தினம் இந்த குளிருக்கு இதமான வெயிலாக இருக்கும் என்று எனக்கு தெரிகிறது.. உங்களுக்கு? என்றான் வாட்சன்.

எப்போதும் எனக்கு துணையாக இருக்கும் எனதருமை நண்பா.. நம் கூடாரத்தை யாரோ திருடிச்சென்று விட்டார்கள் என்று எனக்கு தெரிகிறது என்றார் ஷெர்லாக் ஹோம்ஸ்.

எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்த்தால் மட்டுமே வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திலும் நீங்கள் வெற்றிகரமாக கடந்து செல்ல முடியும். நீங்கள் எதை வெற்றிகரமாகச் செய்ய விரும்பினாலும் அதற்கு உங்கள் தகுதி மட்டுமே போதாது, ஒவ்வொன்றையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற தெளிவும் தேவை. அடிப்படையில், நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்பது உங்களைச் சுற்றி இருக்கும் யதார்த்தங்களை நீங்கள் எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

#3 கவனம் - வெற்றியின் திறவுகோல்

வாழ்க்கை மிக எளிமையானது. இங்கே பிறப்பது என்பது உங்கள் வேலை இல்லை. உங்களுக்காக இதை வேறு யாரோ செய்துவிட்டார்கள். உணவை உள்ளே அனுப்பியதும் உடல் வளர்ந்து விடுகிறது. மனதளவில் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க உங்களைச் சுற்றிலும் பல செயல்முறைகள் இருக்கிறது. ஆனால் இவை எதிலும் சிக்கிக் கொள்ளாமல் வெறுமனே வாழ்க்கையை மட்டுமே பார்த்தால் எல்லா வாய்ப்புகளும் திறந்தே இருக்கிறது. எதுவுமே இங்கே மறைத்து வைக்கப்படவில்லை. 'வாழ்க்கை ஒரு புரியாத புதிர்' என்ற வாசகமே போலியானது, அப்படி எதுவும் இங்கே இல்லை. எல்லாமே திறந்தே இருக்கிறது. மக்கள் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு செல்வதால் எல்லாமே புதிராகத் தெரிகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஒரு மனிதன் தன் கட்டுப்பாடுகளை கடந்து செல்ல, நிலையான கவனம் என்பது ஒரு முக்கியமான தன்மை. உங்களின் கவனம் எப்படி இருக்கிறது, உங்கள் கவனிக்கும்திறன் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே நீங்கள் சூழ்நிலையை எப்படி கையாள்கிறீர்கள் என்பது அமைகிறது.

நீங்கள் ஆசைப்படுவது எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் எவ்வளவு. ஆழமாக ஈடுபட்டுபோகிறீர்கள் என்பதை தீர்மானிப்பதில் உங்கள் கவனம் செலுத்தும் திறனே முக்கிய இடம் பெறுகிறது. நீங்கள் எவ்வளவு ஆழமாக கவனம் செலுத்தி பார்க்கிறீர்களோ அவ்வளவு தெளிவும், அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு வழியும் பிறக்கிறது…

சமீபத்தில், இப்போது வெற்றிகரமாக இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சிலருடன் பேசினோம். அவர்கள் சொன்னது இது: நாங்கள் கல்லூரியில் படித்தபோது யாரெல்லாம் பெரிய அளவில் வளர்வார்கள் என்று நினைத்தோமோ அவர்கள் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் அப்போது குழப்பத்துடன், அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் வெளிவந்த எங்களைப் போன்றவர்கள் பெரும் போராட்டங்களை சந்தித்தோம்… ஆனால் இப்போது நாங்கள் ஏதோ சாதித்திருக்கிறோம். ஆனால் எதிர்பார்த்த அளவு அவர்கள் பெரிதாக வளரவில்லை.

எப்படி இது நடந்தது என்று அவர்களிடமே கேட்டேன். தங்களுக்குள் ஆலோசனை செய்தவர்கள் ஒன்றை கவனித்தார்கள். யார் புத்திசாலிகளாக பார்க்கப்பட்டார்களோ, அவர்களை பெரிய நிறுவனங்கள் கல்லூரிக்கு வந்து நேரடியாக தேர்வு செய்ய, அவர்களும் சௌகரியமான வேலை, பெரிய சம்பளம் என்று அப்படியே இருந்துவிட்டார்கள். ஆனால் என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்த இவர்கள் வெளியே இருந்த சூழ்நிலையை கவனிக்க, ஒருசிலர் தங்களது அற்புதமான சொந்த யோசனைகளைக் கொண்டு புதிதாக நிறுவனத்தை துவங்கி வெற்றிகரமாக இருக்கிறார்கள். ஒருசிலர் வாழ்க்கை சூழ்நிலைகளில் பாடம் கற்றுக் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். எதுவுமே உறுதியாக இல்லாத நிலையில் அவர்கள் எல்லாவற்றையுமே கவனிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; மொத்த உலகையும் கவனித்து இருக்கிறார்கள். சௌகரியமான வேலையே போதும் என்று இருந்துவிட்ட அந்த புத்திசாலியான மாணவர்களைவிட இவர்கள் நூறு மடங்கு வளர்ந்திருக்கிறார்கள்.

மனித விழிப்புணர்வு என்பது சாமான்யமானது அல்ல, போதுமான கவனம் கொடுத்தால் மொத்த பிரபஞ்சமும் உங்களுக்கு பலன் கொடுத்தே ஆக வேண்டும், வேறு வழியே இல்லை.

நீங்கள் ஆசைப்படுவது எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் எவ்வளவு. ஆழமாக ஈடுபட்டுபோகிறீர்கள் என்பதை தீர்மானிப்பதில் உங்கள் கவனம் செலுத்தும் திறனே முக்கிய இடம் பெறுகிறது. நீங்கள் எவ்வளவு ஆழமாக கவனம் செலுத்தி பார்க்கிறீர்களோ அவ்வளவு தெளிவும், அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு வழியும் பிறக்கிறது… மனித விழிப்புணர்வு என்பது சாமான்யமானது அல்ல, போதுமான கவனம் கொடுத்தால் மொத்த பிரபஞ்சமும் உங்களுக்கு பலன் கொடுத்தே ஆக வேண்டும், வேறு வழியே இல்லை.

 

#4 எது செய்தாலும் உங்கள் உயிரே அதிலிருக்கட்டும்

உங்கள் உடலளவில், மனதளவில் நிகழும் யதார்த்தங்களை மற்றும் சக்திநிலையை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி எடுத்துச் செல்ல முடிகிறதா என்பதுதான்.

நீங்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுத்தாலும், அது நீங்கள் சிறந்த செயலை செய்வதற்காக இல்லை. உலகிலேயே சிறந்த செயலை நீங்கள் செய்யவும் முடியாது. நீங்கள் எதில் இறங்கினாலும், உங்கள் உயிரையே அதில் கொடுத்து ஈடுபட்டால் அது அற்புதமானதாக வளரும். எப்போதுமே மிகச்சிறந்ததை செய்ய முயற்சி செய்யாதீர்கள், ஏனென்றால் மிகச்சிறந்ததை செய்ய வேண்டும் என்று நினைத்தாலே வேறு யாரோ ஒருவரைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என்று உங்கள் வாழ்க்கையை வீணடித்து விடுவீர்கள்.

இன்னொருவரை விட நீங்கள் மேலாகவோ கீழாகவோ இருக்கும் எண்ணம் கூட உங்கள் மனதில் எழ வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் யார் எனும் உங்கள் முழு திறன் வெளிப்பட்டு இருக்கிறதா‌ என்பதை மட்டுமே பார்த்தால் போதும்.

ஒருவேளை நீங்கள் ஒப்பிட்டு பார்ப்பவர் சாதாரணமான நபராக இருந்துவிட்டால் அவரைவிட ஒருபடி அதிகமாக ஏதேனும் செய்துவிட்டு, உங்களை நீங்களே வெற்றிகரமானவராக நினைத்துக் கொள்வீர்கள். இன்னொருவரை விட நீங்கள் மேலாகவோ கீழாகவோ இருக்கும் எண்ணம் கூட உங்கள் மனதில் எழ வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் யார் எனும் உங்கள் முழு திறன் வெளிப்பட்டு இருக்கிறதா‌ என்பதை மட்டுமே பார்த்தால் போதும். யோகா என்பது இதுதான். உங்கள் உடலளவில், மனதளவில் நிகழும் யதார்த்தங்களை மற்றும் சக்திநிலையை உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி எடுத்துச் செல்ல முடிகிறதா என்பதுதான்.

#5 உங்கள் உள் சூழ்நிலை உங்கள் பொறுப்பு

நீங்கள் என்னவாக வேண்டும் என்பது எதேச்சையாக நடக்கலாம் அல்லது உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி நீங்கள் நடத்தலாம். இந்த ஒரு வாய்ப்பு இருக்கிறது. சூழ்நிலைகள் உங்களை என்ன வேண்டுமானாலும் செய்ய நீங்கள் அனுமதிக்கிறீர்கள் அல்லது உங்களுக்குத் தேவையான சூழ்நிலைகளை உங்களுக்கு தேவையானபடி நீங்கள் உருவாக்க முடியும்.

பத்து வருடங்களுக்கு முன் நடந்த ஏதோ ஒன்றைப்பற்றி இப்போதும் கூட மக்களால் துன்பப்பட முடிகிறதா? 

ஆமாம். எனக்கு வேண்டியது போலவே என் குடும்ப சூழ்நிலையை ஏற்படுத்த நினைக்கிறேன்.. ஆனால், இதற்கு மற்றவர்கள்தான் என்னுடன் ஒத்துழைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது உங்கள் உள் சூழ்நிலையைத்தான். உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி உங்கள் உள் சூழ்நிலையைக்கூட நீங்கள் இன்னும் உருவாக்கவில்லை. இப்படி இருக்கும்போது எப்படி வெளி சூழ்நிலையை உங்களால் உருவாக்க முடியும்? வெளி சூழ்நிலை என்பது நூற்றுக்கணக்கில் காரணங்களும், செயல்களும் சேர்ந்திருக்கிறது, முழுவதும் உங்கள் கைகளில் மட்டும் இல்லை. ஆனால் உள் சூழ்நிலை என்பதை உருவாக்க நீங்கள் மட்டுமே போதும். இது முழுக்க முழுக்க உங்கள் கைகளில்தானே இருக்கிறது. முதலில் உங்கள் உள் சூழ்நிலையை உங்களுக்கு வேண்டிய விதத்தில் உங்களால் உருவாக்க முடியும் என்றால் அதன்பிறகு வெளி சூழ்நிலையை உருவாக்கும் திறனை நீங்கள் அதிகரித்துக் கொள்ளமுடியும்.

பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் எண்ணங்களும் உணர்ச்சிகளுமே பெரும் போராட்டமாக இருப்பதுதான் பிரச்சனையே. நீங்களே ஒரு பிரச்சனையாக இருக்கும்போது எப்படி மற்ற பிரச்சனைகளை உங்களால் கையாள முடியும்? உங்கள் மனதில் நடக்கும் நாடகங்களே பெரிதாக உங்களை பிடித்துக் கொள்கிறது. பத்து வருடங்களுக்கு முன் நடந்த ஏதோ ஒன்றைப்பற்றி இப்போதும் கூட மக்களால் துன்பப்பட முடிகிறதா? நாளை மறுநாள் என்ன நடக்கப் போகிறதோ, அதற்காக இப்போதே துன்பத்தை அழைத்துக் கொள்ளவும் முடிகிறது. தங்கள் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் துன்பமானதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இந்த பூமியில் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள நினைவுதிறன் மற்றும் கற்பனை வளம் எனும் இரண்டு அற்புதமான கருவிகளை கையாள்வதையே சிரமம் என்கிறார்கள்.

இது மனித இயல்பு இல்லை. மனித இயல்பை தங்களின் கைகளில் எடுத்துக் கொள்ளாத மனிதர்களின் இயல்பு இது.

பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் நினைவாற்றலையும், கற்பனை வளத்தையும் எப்படி கையாள்வது என்பதே தெரியாமல் இருக்கிறது. நேற்றோ அல்லது பத்து வருடங்களுக்கு முன் நடந்த எதுவானாலும் அது இந்த ஷணம் உங்களுக்கு நடந்து கொண்டு இருக்கிறதா? இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால், எது இப்போது உண்மையாக இல்லையோ, அதனால் உங்களுக்கு துன்பமாக இருக்கிறது. இல்லாத ஒன்றை கற்பனை செய்து கொண்டு துன்பப்படுபவர்களை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்…பைத்தியம்தானே இது. மக்கள் இதை மனித இயல்பு என்று அழைத்துக் கொள்கிறார்கள். இது மனித இயல்பு இல்லை. மனித இயல்பை தங்களின் கைகளில் எடுத்துக் கொள்ளாத மனிதர்களின் இயல்பு இது.

இந்த மனித உடல் என்பது இந்த உலகில் இருக்கும் மிகமிக நுட்பமான ஒரு இயந்திரம். எல்லா கம்ப்யூட்டர்களையும் உருவாக்கும் திறனுள்ள "சூப்பர்-சூப்பர் கம்ப்யூட்டர்." ஆனால் இதை எப்படி இயக்குவது என்பதற்கான கையேட்டை நீங்கள் படித்து இருக்கிறீர்களா? யோகா என்றால் இந்த கையேட்டை படிக்க கற்றுக்கொள்வது என்று அர்த்தம்.

ஆசிரியர் குறிப்பு : நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

SGAPPTamilBanner