சனிக்கிழமைகளில் யாரேனும் இறந்துவிட்டால், அந்தப் பிணம் தனியாகப் போகாது என்று பலபேர் சொல்லிக் கேட்டிருக்க முடியும். இது உண்மையா? இதற்கு சத்குரு சொல்லும் விளக்கம் இங்கே...

சத்குரு:

பூமி அன்னையின் காலண்டரில் கிழமைகள் என்பதே கிடையாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நிலவின் நடமாட்டத்தை வைத்து மாதத்துக்கு முப்பது நாள் என்று பிரித்ததிலாவது அர்த்தம் இருக்கிறது. மாதத்தை நான்கு வாரங்களாகப் பிரித்ததற்கோ, வாரத்தை ஏழு நாட்களாகப் பிரித்ததற்கோ எந்த அர்த்தமும் இல்லை.

நம் வசதிக்காக ஒவ்வொரு நாளுக்கு ஒரு பெயர் கொடுத்தோம். அவ்வளவுதான். சனி என்ற வார்த்தை மீது இந்த கலாச்சாரத்தில் மனிதன் கொண்ட வெறுப்பின் காரணமாக அந்த தினத்தில் நிகழும் மரணத்தைக் கூட மிரட்சியுடன் பார்க்கிறான். மற்றபடி, இதில் அனுபவரீதியாக உண்மையும் இல்லை.

ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு, தங்களைத் திரும்பிப் பார்க்க வைக்க சிலர் இப்படி எதையாவது உளறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி உலவ விட்ட அபத்த வாக்கியங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.

சந்தேகமிருந்தால், சனிக்கிழமை தவிர, மற்ற தினங்களில் ஒரு பிணத்துக்கு மேல் வருவதில்லையா என்று சுடுகாட்டில் கேட்டுப் பாருங்கள்.

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!