சத்குருவின் பார்வையில் தமிழ் பழமொழிகள் (Proverbs in Tamil)
வாழ்க்கையின் சூட்சுமங்களை சுருக்கமாகச் சொல்லிப் புரிய வைப்பவை பழமொழிகள். இவற்றில் உண்மை இருக்கிறதா? உண்மையில் பழமொழிகள் சொல்ல வருவது என்ன? சத்குருவின் பார்வையில்...
தமிழ் பழமொழிகள் விளக்கம் (Proverbs in Tamil)
நெய் இல்லாத உண்டி பாழ்; நீறில்லாத நெற்றி பாழ்!
'நெய்யில்லாத உணவும், திருநீறில்லாத நெற்றியும் பாழ்' என்ற பழமொழி கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு விதத்தில் இது உண்மை போலத் தோன்றினாலும், இன்னொரு பக்கம், இதற்கு எதிராக சமூகத்தில் பல பழக்க வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. இதன் பின்னணியில் உள்ள ஆழமான உண்மையைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...
மரத்திலிருக்கும் பலாக்காயை விட, கையில் இருக்கும் கலாக்காயே மேல்!
தன் தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்களைப் பார்த்து சொல்லப்படும் ஒரு பழமொழி இது. இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார் என்பதை அறிந்துகொள்வோம்...
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்!
காதல் இல்லாத திரைப்படங்களும், டூயட் பாடாத ஹீரோக்களும் இல்லையென்றே சொல்லலாம். உண்மையான காதல் என்று திரைப்படங்கள் கூறும் காதலை, கைதட்டி கண்ணீர்விட்டு ரசிக்கும் நாம், நிஜ வாழ்க்கையில் காதல் என்ற உணர்வை எந்த அளவிற்கு உணர்கிறோம்? தமிழ் பழமொழி சொல்வதுபோல், அறுபதே நாட்களில் முடிந்துவிடக் கூடியதா காதல்? சத்குருவின் வித்தியாசமான கண்ணோட்டம் இங்கே!
திக்கற்றவனுக்கு தெய்வம்தான் துணையா?
வாழ்க்கையில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, திசை தெரியாமல் திண்டாடும் மக்களுக்காக சொல்லப்பட்ட பழமொழி, "திக்கற்றவருக்குத் தெய்வமே துணை" என்பது. இதைப் பற்றிய விளக்கத்தை சத்குருவிடம் கேட்டபோது...
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
பள்ளிக்கூட பாட புத்தகத்தில் படித்த பழமொழிகளில், "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பதை அத்தனை எளிதாய் மறந்துவிட முடியாது. இதற்கு சத்குரு தரும் விளக்கமென்ன? தொடர்ந்து வாசியுங்கள்...
மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் வெண்கலம்!
மருமகள் சிறு தவறு செய்தாலும் அதனைப் பெரிதாக்கி அவள் மீது பழிசுமத்தி மகிழ்வாள் மாமியார் என்பதை "மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் வெண்கலம்" என்ற பழமொழி சொல்கிறது. இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...
பொம்பளை சிரிச்சாப் போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு!
"எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!" என்று அன்றே பாரதி கும்மியடித்து ஆடச் சொல்லிவிட்டான். இருந்தாலும் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தும் சில பிற்போக்குவாதிகள் இன்றும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு உணர்த்துவதற்காக, இந்தப் பழமொழயில் ஏதேனும் உண்மை உள்ளதா என சத்குருவிடம் கேட்டபோது...
பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்!
"நேரம் சரியில்லேன்னா அப்படிதாம்ப்பா... பட்ட காலிலேயே படும்! கெட்ட குடியே கெடும்!" சோதனை மேல் சோதனைகளை சந்தித்து நொந்து போயிருப்பவரிடம், இப்படி சொல்லிவிட்டு சோகமான முகபாவத்துடன் கடந்துபோகும் மனிதர்களை இன்றும் பார்க்க முடிகிறது. இப்படிச் சொல்வதில் உண்மை உள்ளதா? சத்குருவிடம் கேட்டபோது...
தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும்
"தொட்டில் பழக்கம் சுடுகாடு முட்டும்!" இந்த பழமொழியில் சொல்வதுபோல் சில பழக்கங்களை கடைசிவரை நம்மில் பலரால் விட முடிவதில்லை. பலர், பழக்கதோஷமாகச் செய்யும் சில செயல்களை தங்களின் அடையாளமாகவும் தங்களின் பாணியாகவும் கருதுகிறார்களே இதுபற்றி சத்குரு சொல்வதென்ன?! விளக்கம் தருகிறது இந்த பதிவு!
பகையாளியை உறவாடிக் கெடு!
"பகையாளியை உறவாடிக் கெடு!" என்ற பழமொழியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது; பகையாளியை உறவாடிக் கெடுத்துவிட முடியுமா?" இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்ட போது, பழமொழி சொல்லப்பட்ட காலகட்டத்தையும், அது இன்றைய சூழ்நிலையில் பொருந்துமா என்பதையும் விளக்குகிறார்.
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு!
அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி; ஓடிப் போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் குரு - இந்த பழமொழி எந்த அளவிற்கு உண்மை? சத்குருவிடம் இதைப் பற்றி கேட்டபோது..
உழவுக்கு ஏற்ற மாடு வாங்கியவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற மனைவியைக் கட்டியவனும் இல்லை!
பழமொழிகள் ஏன் சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ந்தால், அர்த்தங்கள் தெளிவாக விளங்கும். மேலே சொல்லப்பட்டுள்ள பழமொழிக்கு சத்குரு தரும் விளக்கம் என்ன? தொடர்ந்து படியுங்கள்...
விடியா மூஞ்சி வேலைக்குப் போனால், வேலை கிடைத்தாலும், கூலி கிடைக்காது!
புன்னகை இல்லாத முகத்தையும், உற்சாகம் இல்லாத மனத்தையும் கொண்டிருப்பதால் வரும் பாதிப்பு என்ன என்பதைச் சொல்லும் பழமொழி இது. சத்குருவின் விளக்கம் இங்கே...
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்
நம்மிடம் யாரேனும் கோபப்பட்டு கத்தினால், நாம் எரிச்சலைடைந்து கத்துவது வழக்கம்தான். இதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள், “கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்" - என்ற அஸ்திரத்தை எடுத்துவிட்டு நம்மை சமாதானப் படுத்துவர்கள். அப்படியென்றால் கோபம் ஒரு மேன்மையான குணமா? - இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...
காய்த்த மரமே கல்லடி படும்!
கனிந்த பழங்களைக் கொண்டிருக்கும் மரத்தின் மீதுதான் கற்கள் வீசப்படும். கல்லடி படக்கூடாது என்பதற்காகக் கனிகள் கொடுக்காமல் இருக்க முடியுமா? சத்குரு என்ன சொல்கிறார்?
நிறைகுடம் தளும்பாது!
வாழ்க்கையில் யார் நிறைகுடம் போல் தளும்பாமல் வாழ்வார்கள்? மனிதர்கள் குறைகுடம் போல் தளும்புவதற்குக் காரணம் என்ன? சத்குரு விளக்குகிறார்.
கடவுள் எழுதியதை யாராலும் மாற்ற முடியாது!
வாழ்க்கையே விதிப்படிதான் நடக்கிறதா? நம் முயற்சியால் எதையும் மாற்ற முடியாதா? சத்குரு என்ன சொல்கிறார்?
ஆமை புகுந்த வீடு உருப்படாதா?
"ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்ற பழமொழியினால், ஆமை என்றாலே துரதிர்ஷ்டவசமானது என்ற எண்ணம் நமக்கு வந்துவிட்டது. ஒரு சிறிய ஆமைக்கு மனிதனின் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவிற்கு சக்தி உள்ளதா? இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது...
ஐந்து பெண் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்!
"ஐந்து பெண் பெற்றால், அரசனும் ஆண்டியாவான்!" என்ற ஒரு பேச்சு வழக்கத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் ஏதும் உண்மை இருக்குமா? பெண் பிள்ளை பெற்றவர்கள் பாவமா? சத்குரு இதற்கு என்ன சொல்கிறார்?! வாருங்கள் கேட்போம்!
பெண்புத்தி பின்புத்தியா?
பாரதியாரோ, "எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்..." என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி என்றும் பழமொழி உண்டு. ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் கேட்டபோது...
சனிப் பிணம் தனியாகப் போகாதா?
சனிக்கிழமைகளில் யாரேனும் இறந்துவிட்டால், அந்தப் பிணம் தனியாகப் போகாது என்று பலபேர் சொல்லிக் கேட்டிருக்க முடியும். இது உண்மையா? இதற்கு சத்குரு சொல்லும் விளக்கம் இங்கே...
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறக்குமா?
குறுகிய கண்ணோட்டம் கொண்ட சிலர், அப்பனைப் போலவே வந்து வாய்த்திருக்கிறான் என குழந்தைகளை மட்டம் தட்டுவதைப் பார்க்கிறோம். அப்பாவைப் போலவேதான் மகன் இருப்பான் என்ற நினைப்பு சரியா? இங்கே சத்குரு என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்!
ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்!
"மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்! மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் மணமகன் தன் தாயையோ, தந்தையையோ இழக்க நேரிடும்." என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான பழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றுதான். இதைப் பற்றிய சத்குருவின் பார்வை இங்கே...
Subscribe