"எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!" என்று அன்றே பாரதி கும்மியடித்து ஆடச் சொல்லிவிட்டான். இருந்தாலும் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தும் சில பிற்போக்குவாதிகள் இன்றும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு உணர்த்துவதற்காக, இந்தப் பழமொழயில் ஏதேனும் உண்மை உள்ளதா என சத்குருவிடம் கேட்டபோது...

சத்குரு:

பெண்களை சிறுமைப்படுத்தியே வைத்திருக்கும் விருப்பம் ஆண்களிடம் ஆதிகாலம் தொட்டே மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

பொது இடத்தில் ஆண்கள் வாய் விட்டுச் சிரிக்கலாம். ஆனால் ஒரு பெண் சிரித்தால், அவள் கண்ணியமான குடும்பத்திலிருந்து வருபவளாக கருதப்பட மாட்டாள் என்று ஒருதலைப்பட்சமாக ஆணால் தீர்ப்பு எழுதப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வேதனையில் இருப்பவர்களைத்தான் சுலபமாகக் கட்டுப்படுத்தி ஆள இயலும். ஆனந்தமாக இருப்பவர்களிடம் அன்பால் சாதிக்க முடியுமே தவிர, அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்த முடியாது.

பெண்களை அடிமைகளாக வைத்திருக்க விரும்பிய வக்கிரமான ஆண் வர்க்கம், அவளை சிரிக்க எப்படி அனுமதிக்கும்?

சந்தோஷமாகச் சிரிக்கும் பெண்ணுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடியுமே தவிர, அவளைத் தன் ஆளுமைக்குள் வைத்திருக்க முடியாது என்ற அச்சத்தினால்தான் ஆண்கள் இப்படியொரு முட்டாள் மொழியை உலவவிட்டனர் போலும்.

உலகின் ஜனத் தொகையில் பாதிக்கும் மேல் உள்ள பெண்களை வேதனையிலேயே வைத்திருந்தால், ஆண்கள் மட்டும் எப்படி ஆனந்தமாக இருக்க முடியும்?

இந்த பூமியில் அழும் பெண்களே வேண்டாம்!

ஒரு பெண் மட்டுமல்ல. ஆணும் வாய் விட்டுச் சிரித்தால்தான் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கத் தயாராகிவிட்டதாக அர்த்தம்.

என் விருப்பமெல்லாம் ஒன்றுதான்.

பெண்கள் மனம் விட்டு ஆனந்தமாகச் சிரிக்க வேண்டும். அந்தச் சிரிப்பு ஆண்களிடமும், குழந்தைகளிடமும் தொற்றிக் கொள்ள வேண்டும்.

குறிப்பு:

மேலும் பல தமிழ் பழமொழிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன? சத்குருவின் ஆழமான விளக்கத்தை இந்தப் பதிவின் மூலம் படித்து அறியுங்கள்!