ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு காலம்

ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு கோடைகால சூரியகதிர் திருப்பம் மற்றும் குளிர்கால சூரியகதிர் திருப்பத்திற்கு இடைப்பட்ட காலம் (தட்சிணாயணம்) என்பது ஒரு சிறப்புமிக்க முக்கியத்துவம் நிறைந்த காலமாகும். சாதனா பாதை என அறியப்படும் இந்த காலம், சிறப்பான கிரகிப்புக்கான ஒரு காலமாகும். யோகக் கலாச்சாரத்தில், குறிப்பாக வட அரைக்கோளத்தில் இந்தக் காலம், சாதனா செய்வதற்கான உகந்த காலமாகவும், ஆன்மீகம் இயல்பான ஒரு செயல்முறையாக மாறும் காலமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில், ஆன்ம சாதனை மிகச்சிறப்பான பலன்களை வழங்குகிறது.

எளிதான உள்நிலை மாற்றத்திற்கான காலம்

Sadhanapada – Rising Through Sadhana

 

இந்த உலகில் ஒருவர் முழுமையாக இயங்குவதற்கு தேவைப்படும் பல்வேறு அம்சங்களில் முக்கியமானவையாக தெளிவும் சமநிலையும் இருக்கின்றன. சமநிலையான வாழ்க்கை வாழ்வதில், ஒருவரின் வெளியுலக செயல்பாடுகளின் தன்மைகளைக் காட்டிலும், ஒருவரின் உள்நிலையில் என்ன நடக்கிறது என்பது பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. சாதனா பாதை ஒவ்வொருவருக்கும் தங்கள் மனம் மற்றும் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கும், எவ்வித வாழ்க்கை சூழலையும் எதிர்கொள்வதற்கு துணைநிற்கும் வகையிலான ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்துக்கொள்வதற்குமான சாத்தியங்களை வழங்கும் ஒரு காலம்!

யோக சாதனாவை தீவிரப்படுத்துவதற்கான காலம்

Sadhanapada – Rising Through Sadhana

 

சத்குரு முதல்முறையாக 2018ல் சாதனா பாதை காலத்தில் ஈஷா யோகா மையத்தின் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுற்றுச்சூழலில் பங்கேற்பாளர்கள் தங்கியிருப்பதற்கான வாய்ப்பினை வழங்கினார். 21 நாடுகளிலிருந்து வருகைதந்த 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், தங்கள் உள்நிலை பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

Sadhanapada – Rising Through Sadhana

 

இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக பங்கேற்பாளர்கள் தினசரி யோகப் பயிற்சிகள் மற்றும் தன்னார்வத்தொண்டுகள் உள்ளடக்கிய ஆழமான சாதனாவை மேற்கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு 2018-2019 சாதனா பாதையில் பங்கேற்றவர்கள் தங்களது அனுபவங்களை நமக்காக இங்கே பகிர்கின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர்களுக்கு உத்வேகமாக இருந்த விஷயங்களையும், இந்நிகழ்ச்சியில் அவர்கள் பெற்ற அனுபவங்களையும் இங்கே அறியலாம்.

அக்ஷய் வகேலா (மும்பை):

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சரிசெய்யவேண்டியது என்னை மட்டுமே என்ற புரிதலை, இங்கே செலவிட்ட காலம் எனக்கு வழங்கியுள்ளது! இதற்கு முன்பு நான் புறச்சூழலை குறை கூறிக்கொண்டு இருந்தேன்.

சாதனா பாதை எனது வாழ்வின் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இது என் வாழ்வில் நான் எடுத்த ஒரு சிறந்த முடிவு. இந்நிகழ்ச்சி எனக்கு அளித்துள்ள பிரம்மாண்ட அனுபவத்தை என் வாழ்வு முழுமையிலும் வேறு எவரும் அளிக்கமுடியாது. நிகழ்ச்சிக்கு முன்னதாக நான் மும்பையில் இருந்தேன். அங்கே நான் எப்போதும் பதட்டத்துடனும் மன அழுத்தத்துடனும் இருந்தேன். நான் ஒருபோதும் மும்பை மக்களின் வாழ்க்கை முறையை விரும்பியதில்லை! அப்போது அந்த வாழ்க்கையைத் தாண்டி வேறொன்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அங்கிருந்து நான் வெளியேற வேண்டுமென்றே எப்போதும் நினைத்தேன்.

அப்போதுதான் திடீரென சாதனா பாதை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்த 6 மாத காலத்தை எனது பயிற்சிகளை தீவிரப்படுத்தவும், எனது வாழ்க்கையின் உணரும்தன்மையை ஆழப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென நினைத்தேன். எனது குடும்பத்தாரும் மற்றவர்களும் என்னைத் தடுப்பதற்கு முயற்சி செய்தபோதும், எனது உடல்நிலை வளர்ச்சிக்காக நேரம் செலவிடுவது முக்கியம் என்பதை அவர்களிடம் புரியவைத்தேன். எனக்குள் தெளிவும் சமநிலையும் வருவதற்கு என் வாழ்வின் சரியான தருணத்தில் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

இதுவரை சாதனா பாதை ஒரு தென்றலைப் போல கடந்து சென்றுள்ளது. மாதங்கள் நாட்களைப் போல கடந்துள்ளன. என் வாழ்வில் இந்த ஏழு மாதங்கள்தான் நான் முழுமையான ஆனந்தத்திலும் மகிழ்ச்சியிலும் இருந்தவை. மும்பையில் இருக்கும்போது நான் கோபம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால் இங்கு அப்படியில்லை! ஆறுமாத கால ஹட யோகா பயிற்சிக்குப் பிறகு, எனது உடல் ஒரு ரப்பர் வளைவதைப் போல வளைகிறது. இதற்கு முன் நான் செய்ய இயலாத காரியங்களை இப்போது எளிதாக செய்வதற்கு எனது உடல் ஒத்துழைக்கிறது.

நான் உறுதியாகவும் வளையும் தன்மையுடனும் மற்றும் சக்தியால் நிரம்பியும் உள்ளேன். முன்பெல்லாம் நான் காலையில் 10 மணிக்கு எழுந்திருப்பதுதான் வழக்கம். இங்கே நான் அதிகாலை 4:30 மணிக்கே எந்தவித சிரமமுமின்றி எழுந்துவிடுகிறேன். இங்கே நான் புரிந்துவரும் தன்னார்வத்தொண்டு எனது மனதை அமைதியாக்குவதற்கு துணைநிற்பதோடு எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், கூடுதல் சமநிலையுடனும் சாந்தத்துடனும் இருப்பதை உணர்கிறேன். என்னிடம் மட்டுமல்லாமல், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொருவரிடத்திலும் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளதை காண்கிறேன். இங்கே வரும்போது நாங்கள் உடல்நிலையில் மட்டுமல்லாமல் மனநிலையிலும் உணர்ச்சி நிலையிலும் மிகவும் இறுக்கமானவர்களாக இருந்தோம். ஆனால், இப்போது மிகவும் இலகுவான தன்மையுடன் மாறியுள்ளோம்.

சரிசெய்யவேண்டியது என்னை மட்டுமே என்ற புரிதலை, இங்கே செலவிட்ட காலம் எனக்கு வழங்கியுள்ளது! இதற்கு முன்பு நான் புறச்சூழலை குறை கூறிக்கொண்டு இருந்தேன். ஆனால், சாதனா பாதை என்னுடைய எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் உடல் நிலையில் பல்வேறு விஷயங்களை துடைத்துச் சென்றுவிட்டது. உணவு முதல் உறைவிடம் வரை அனைத்தையும் வழங்கி, இந்த சக்திமிக்க இடத்தில் இருப்பதற்கு அனுமதித்து, இந்த மாபெரும் வாய்ப்பினை வழங்கிய சத்குரு அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

லெஷா சாஹ்னே (பஞ்சாப்):

பள்ளி மற்றும் வேலைக்குச் செல்வதை தவிர்த்து, மற்ற எதற்காகவும் என் வாழ்க்கையில் அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கமில்லாத எனக்கு, அதிகாலையில் எழுவது சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது என்னுடைய உடல் அதிகாலை 3:30 மணிக்கெல்லாம் வெகு இயல்பாகவே எழுந்துவிடுகிறது.

சாதனா பாதை துவங்குவதற்கு முன்னதாக அதுகுறித்த பல்வேறு தயக்கங்கள் என்னிடம் இருந்தன. நிகழ்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் என்னுடைய உடலினை உறுதிப்படுத்துவதில் சிரமமும், குழந்தைப் பருவத்திலிருந்து என்னிடமிருந்த பழக்கவழக்கங்களில் இருந்து வெளிவருவதற்கு போராட வேண்டியும் இருந்தது. குறிப்பாக, பள்ளி மற்றும் வேலைக்குச் செல்வதை தவிர்த்து, மற்ற எதற்காகவும் என் வாழ்க்கையில் அதிகாலையில் எழுந்திருக்கும் வழக்கமில்லாத எனக்கு, அதிகாலையில் எழுவது சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது என்னுடைய உடல் அதிகாலை 3:30 மணிக்கெல்லாம் வெகு இயல்பாகவே எழுந்துவிடுகிறது. என்னுடைய 30 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு, இப்போது உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும், சாதனா செய்யும்போது அது நமக்குள் எப்படி வேலை செய்கிறது என்பதையும் இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்.

நான் என்னுடைய கணவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். நாங்கள் இருவரும் இங்கே இவ்வளவு நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடித்து இருக்க முடியுமா என்பதை அறிய விரும்பினோம். நாங்கள் அதனைச் செய்துவிட்டோம். இந்தக் காலம் எங்களுடைய வாழ்வில் ஒரு மகத்தான காலம். மேலும், அவருடன் எனது உறவுநிலை ஒரு பிரமாதமான விதத்தில் மேம்பட்டுள்ளது. மேலும் தெளிவும் கூடியுள்ளது.

இந்த ஆசிரமச் சூழல் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த இடத்தில் யோகப் பயிற்சிகள் செய்வது மிகவும் அற்புதமானவை. குளிர்கால சூரியகதிர் திருப்பம் எனக்கு இங்கே என்னுடைய விடுதி வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையில் அறியாத பல்வேறு சின்னஞ்சிறு விஷயங்களையும் கற்றுத்தந்துள்ளது. சாதனா பாதை பங்கேற்பாளர்களுக்கு இது ஒரு பெரிய வரமாகும். இத்தகைய ஒரு பாக்கியத்தை வழங்கிய சத்குருவை எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றியமைக்கக்கூடிய, ஒரு திருப்புமுனையாக, வாழ்வைப் புரட்டிப்போடக்கூடிய இத்தகைய ஒரு படியை தைரியமாக மேற்கொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2019 சாதனா பாதை நிகழ்ச்சிக்கான பதிவுகள் துவக்கம்

சாதனா பாதை உங்களுக்குள் ஒரு புதிய நிலையிலான சமநிலை, தெளிவு மற்றும் உறுதியை கொண்டுவருவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. வாழ்க்கையின் எவ்வித சூழ்நிலையையும் ஒரு அமைதியான தன்மையிலிருந்து எதிர்கொள்ளும் வகையில் ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது. சத்குரு இந்த சாதனா பாதையில் பங்கேற்பதற்கான மாபெரும் வாய்ப்பினை வழங்கவுள்ளார். மேலும் இந்த காலத்தில் ஈஷா யோகா மையத்தில் அதிகமான நேரம் செலவிடுவதற்காகவும் திட்டமிட்டுள்ளார்.

கால அளவு: குரு பௌர்ணமி, 16 ஜூலை 2019 முதல் மஹாசிவராத்திரி, 21 பிப்ரவரி 2020 வரை.
மேலும் தகவலுக்கு: Sadhguru.org/Sadhanapada