கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, வாழ்க்கை விதிப்படி நடப்பதல்ல என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். நமது வாழ்க்கைக்கு 100% சதவிகிதம் நாமே பொறுப்பு. நாம் எப்படி சிந்திக்கிறோமோ அப்படி வாழ்க்கை அமைகிறது. பிறகு எதற்கு நமது கைகளில் ரேகைகள் படைக்கப்பட்டுள்ளன? சில நிபுணர்களால் நமது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் தெளிவாகக் கூறமுடிகிறது. அப்படியென்றால், வாழ்க்கை முன்பே முடிவு செய்யப்பட்டதா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கைரேகை ஜோசியம் உண்மையா? (Kairegai Josiyam in Tamil)

ஒரு இளைஞர் கைகளைத் திறமையாக உபயோகப்படுத்தாமல், கிளி ஜோசியர் முன்னால் கை நீட்டக்கூடாது. பிச்சை கேட்பவர்கள்தான் மற்றவரிடம் கை நீட்டுவார்கள். உங்கள் கையில் நான்கு கோடுகள் மட்டும் இருக்குமளவுக்கு எளிமையானதா உங்களது மனம்? உங்கள் மனதில் இவ்வளவு குறைவாகவா இருக்கிறது? ஒரு எறும்பின் மூளையை ஆராய்ந்து பார்த்தால்கூட இதைவிட அதிகமாக இருக்கிறது.

 மனம், Mind

கோடுகளைப் பார்ப்பதற்கு நிபுணர்கள் தேவையில்லை. அதற்கு தேவையான புத்தகங்களை இரண்டு மணி நேரங்கள் படித்துவிட்டால், ஒரு தொழில் செய்துகொள்ள முடியும். வேறு எதற்கும் திறமை இல்லையென்றால், இறுதியாக அதைத்தான் செய்யமுடியும். பிழைப்பு ஓரளவுக்கு நன்றாகவே நடக்கும். தினமும் இரண்டு பேர் வந்தால் போதுமானது. வாழ்க்கை குறித்த அச்சத்தில் இருப்பவர்களை சற்று அதிகமாக ஏமாற்றலாம். மற்றவர்களிடம் பத்து ரூபாய் வாங்கலாம், அவ்வளவுதான்.

கைகளைப் பயன்படுத்துங்கள்

கைகளைப் பயன்படுத்துங்கள்

கைகளைப் பயன்படுத்துங்கள்

இது உங்களுக்கு தேவையில்லை. மற்றவரிடம் நீட்டுவதற்காக கைகள் படைக்கப்படவில்லை. உங்களது திறமைக்கேற்றவாறு கைகளைப் பயன்படுத்துங்கள், எந்தளவுக்கு என்றால், உங்கள் கையில் இருக்கும் கோடுகள் தேய்ந்துபோகும் அளவுக்கு பயன்படுத்த வேண்டும். மூன்று கோடுகள் முப்பது கோடுகளாக வளர்ச்சியடைய வேண்டும்.

ரேகைகளில் எதுவுமே இல்லையா?

Kairegai Josiyam in Tamil, கைரேகை ஜோசியம்

எனினும், இந்த ரேகைகளில் எதுவும் இல்லையா என்றால், ஏதோ சிறிதளவு ஆரம்பம் இருக்கிறது, ஆனால் முடிவு இல்லை. அது உங்களிடம்தான் இருக்கிறது. மூன்றரை அங்குலம் உள்ள உங்கள் கையளவுக்குள் வாழ்க்கை முடிந்துவிட வேண்டியதில்லை. ஒரு மனிதர், அவரது வாழ்க்கையை முழுமையாக தன் கையில் எடுத்துக்கொள்ள முடியும்.