ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அருள் வடிவம், நாம் வாழும் காலத்திலேயே நம்முடன் வாழும் மகத்தான யோகி, குரு - சத்குரு அவர்கள்.

கேள்வி: சத்குரு, குருவாக இருந்தால் அதற்கு விளைவுகள் உள்ளது என்றும் ஞானம் அடைந்தவர்களுள் பெரும்பாலானோர் குருவாக இருக்க முடிவெடுப்பதில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள். மற்றொரு உயிருக்குத் துணைசெய்ய தேர்தெடுப்பத்தால், அப்படியென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும்?

சத்குரு:

ஞானம் அடைந்தவர்கள் பலர் புத்திசாலிகள்; சிலர்தான் முட்டாள்கள், அவர்கள்தான் குருவாக ஆகின்றனர். அல்லது அறியாமையில் இருக்கும் சில புத்திசாலிகளும் குருவாக ஆகின்றனர். ஞானோதயம் அடைந்து முட்டாளாக இருந்தால் குருவாகலாம் அல்லது ஞானோதயம் அடையாமல் புத்திசாலியாக இருந்தாலும் குருவாகலாம்.

ஒரு விஷயம் என்னவென்றால் உங்களை பிணைப்பவற்றை விடுத்து எல்லையில்லாத தன்மையை அடையும் வாய்ப்பிருக்கும்போது, உடலோடு இருக்க தேர்ந்தேடுப்பதே ஒரு முட்டாள்தனம். சமுதாய தளத்தில் மனித உயிர் சம்பந்தப்பட்ட வரையில் உடலோடு இருப்பது தேவையாக இருக்கலாம். உயிர் அடிப்படையில் (existential ) அது ஒரு முட்டாள்தனம். இதுதான் ஒரு குருவின் நிலை.

குருவாக இருக்க தேர்ந்தேடுக்கும்போது, அவரே பின்வாங்கிய ஒன்றினை, மக்களுக்கு வழங்க விழைகிறார். இதில் பல அம்சங்கள் உள்ளன. ஒரு விஷயம் என்னவென்றால், குருவாக இருக்க விழைந்தாலும் தனிமையான சூழ்நிலையில் வாழ்வதையும் அவர் தேர்ந்தெடுக்கலாம். ஒரு சில வாய்ப்புகள் பொருந்திய சில ஆன்மீக சாதகர்களுக்கு மட்டும் தொடர்பில் இருக்கும் வண்ணம் இருக்கலாம். அனைத்து தரப்பினரையும் ஏற்றுக்கொள்ள தேவையில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பல குருமார்கள் இப்படித் தனித்த நிலையில்தான் இருந்தார்கள். குருவாக இருக்க தேர்ந்தெடுத்த பலரும் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் முட்டாளாக இருக்கவில்லை. அவர்கள் தனியாகவே இருந்தார்கள். ஒருவித திறன்களும், வாய்ப்புகளும் பொருந்திய சிலரை மட்டுமே அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இப்படி அவர்கள் ஒருநிலையில் முட்டாளாக இருந்தாலும் வேறு அனைத்து நிலையிலும் புத்திசாலியாக இருந்தார்கள். இப்போது உங்களிடம் வரும் அனைவரையும் - அவர்களுக்கு தாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம்? என்ன செய்கிறோம் என்பதுகூட புரிந்திருக்காது. இவர்களை ஏற்று ஏதோவொன்று செய்ய முயல்வது - இதில் நிறைய விளைவுகள் உள்ளன. ஏனென்றால் குருவாக இருப்பது என்பது மக்களுக்கு வெறும் ஆலோசனை அளிப்பது கிடையாது. ஆலோசனை மட்டுமே வழங்குகினால், நீங்கள் குருவாக இருக்க முடியாது.

குருவாக இருப்பது - என்னவாக இருப்பினும், ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி - அவர்களை ஒரு குறிப்பிட்ட பாதையில், குறிப்பிட்ட திசையில் செலுத்த நீங்கள் விழைகிறீர்கள்.

இது நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட இலக்கை அடைய விரும்புவது என்றில்லை. இதற்குத்தான் ஒவ்வொரு உயிரும் ஏங்குகிறது. ஒவ்வொரு உயிரும் தன்னுடைய உச்சநிலையை அடைய விரும்புகிறது. ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இது தங்கள் விழிப்புணர்வில் இருப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு உயிரும் தெரிந்தோ தெரியாமலோ தன்னுடைய உச்சநிலையை அடையவே விழைகிறது.

வெவ்வேறு மக்கள் இதனை பல்வேறு விதங்களில் தங்கள் மனதில் புரிந்துகொள்கிறார்கள். இந்த உச்சநிலை பலவற்றாக இருக்க முடியாது. அது ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இதனை அடைய ஒவ்வொருவரின் தயார்நிலையைத் தாண்டியும், அவர்களை அந்த திசையில் செலுத்துவதற்கு; அதில் நிலைத்திருக்க செய்வதற்கு பெருமளவில் உயிர்சக்தியை முதலீடு செய்யவேண்டும்.

இதை பலவாறாக புரிந்துகொள்ள முடியும். நான் உண்மையில் இதனை விளைவு என்று அழைக்கமாட்டேன். இதனால், உடலளவில் விளைவுகள் ஏற்படலாம்.

sadhgurusamyamapic

ஒருகாலத்தில் சம்யமா வகுப்பில் பங்கேற்க மக்களை அனுமதிப்பதற்கு, நானே அவர்களிடம் நேர்காணல் செய்து, யார் யார் அந்த செயல்முறைக்கு திறந்த நிலையில் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும் அனுமதிப்பேன். ஆனால் இப்போது சம்யமாவில் பங்கேற்பதற்கு முன்பு செய்யவேண்டிய மூன்று வகுப்புகளை அமைத்திருக்கிறோம். இந்த வகுப்புகளை முடித்திருந்தால் அவர்களை அனுமதிக்கிறோம். இந்த வகுப்புகளின் பலத்தை நம்பி இவ்வாறு செய்கிறோம். ஆனால், இவற்றை முடித்த அனைவரும்கூட ஒரே விதமான விருப்பத்துடனும், தயார்நிலையிலும் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அவர்களை அனுமதிக்கிறோம். இதற்கு பல விளைவுகள் உள்ளன. பூரணத்துவம் என்பது முக்கிய நிலையில் இல்லை. ஆனால் உடலளவில் விளைவுகள் ஏற்படலாம். சில விஷயங்களை சரியாக கவனிக்காவிட்டால், அதன் விளைவுகள் உடலில் நிகழும்.

மக்களை குறிப்பிட்ட உயரத்திற்கு, உச்சத்திற்கு எழுப்பினால் - எப்படியிருந்தாலும் உடல் தொய்ந்து போகத்தான் போகிறது. அதனை நீங்கள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் உடல் தொய்ந்து போகத்தான் போகிறது. அதை சரியான விதத்திலாவது பயன்படுத்துங்களேன்.

மக்கள் தாங்கள் எப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் என்று அறியாமல், அதற்கு உகந்தவற்றை செய்யாவிட்டால், உடலமைப்பில் தொந்தரவுகள் ஏற்படலாம். ஏனென்றால், தன்னுடைய உயிர்சக்தியை ஈடுபடுத்தாமல் மக்களை அவ்வாறு தியானத்தன்மையில் இருக்க வைக்க முடியாது.

ஏழு நாட்களும் சில எளிய செயல்முறைகளால் மக்களை உயர்ந்த சக்திநிலையில் வைத்திருக்க முடியாது. செயல்முறைகள் எளிதானவைதான்; அதில் புதியது ஒன்றும் இல்லை. உலகில் பல மக்களும் இதையேத்தான் செய்கிறார்கள். ஆனால், எங்கும் இதுபோன்ற வீரியத்தில், தெம்பில் சக்திநிலை மக்களை சுற்றி இருப்பதில்லை. ஏனென்றால், இது செயல்முறையால் ஏற்படுவதில்லை. உங்களையே அனைவரும் பெறக்கூடிய விதம் அர்ப்பணிக்க வேண்டும். அங்கு சூழ்நிலை ஒரே திசையில் உகந்த நிலையில் அமையவிட்டால், உடலளவில் பெரிய அளவு விளைவுகள் ஏற்படலாம். இது பிரச்சனையில்லை.மக்களை குறிப்பிட்ட உயரத்திற்கு, உச்சத்திற்கு எழுப்பினால் - எப்படியிருந்தாலும் உடல் தொய்ந்து போகத்தான் போகிறது. அதனை நீங்கள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் உடல் தொய்ந்து போகத்தான் போகிறது. அதை சரியான விதத்திலாவது பயன்படுத்துங்களேன். என்ன சற்று விரைவாக உடல் தொய்ந்து போகும், அவ்வளவுதான். விபரீத விளைவுகள் இல்லை; உடலளவில் மட்டுமே.

ஜூலை 27ல் ஆதியோகி முன்னிலையில், சத்குருவுடன் குரு பௌர்ணமி கொண்டாட்டத்தில் இணையுங்கள்! ஈஷா யோகா மையத்தில் நேரடியாகவோ அல்லது நேரடி இணைய ஒளிபரப்பு மூலமாகவோ கலந்துகொள்ளுங்கள்!

நேரடி ஒளிபரப்பில் இணைந்திடுங்கள்

சத்குரு App... இப்போது தமிழில்! இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்... இலவசமாக