காயத்ரி மந்திரம் - ஒரு சக்திவாய்ந்த செயல்முறை (Gayathri Mantram Tamil)

கேள்வி : ஒருவரின் உச்சபட்ச நல்வாழ்விற்கு காயத்ரி மந்திரத்தை எப்படி பயன்படுத்துவது?

சத்குரு: காயத்ரி மந்திரம்ங்கறது ரொம்ப சக்திவாய்ந்த ஒரு செயல்முறை – ரொம்ப வித்தியாசமான இயல்புடையது. இது முழுசா ஒருத்தரோட உள்நிலை வளர்ச்சியோ அல்லது ஆன்மீக வளர்ச்சியை நோக்கி இருக்கற ஒரு விஷயம் இல்ல. இதுல பல அம்சங்கள் சேர்ந்திருக்குது. அதனால இதை பொதுவா எல்லா குடும்பஸ்தருக்கும் சொல்லிக் கொடுத்தாங்க. அதன் மூலமா தீவிர ஆன்மீக நோக்கத்துல இல்லாதவங்களுக்கு - அவங்களோட நல்வாழ்க்கைக்கு, ஆரோக்கியத்துக்கு, வெற்றிக்கு, வாழ்க்கையோட பிற அம்சங்களுக்கு ஒரு உதவியா இருக்கும்ங்கறதுக்காக கத்துக் கொடுத்தாங்க.

காயத்ரி மந்திரம், தீவிர ஆன்மீக சாதகருக்கானதுன்னு நம்மால சொல்ல முடியாது. தன்னோட வாழ்க்கையில ஆன்மீக சாதனையும் ஒரு அம்சமா வச்சுருக்குற குடும்பஸ்தர்களுக்கானது இது. முறைப்படி தீட்சை பெற்றா, இது ஒரு சாத்தியம்.

காயத்ரி மந்திரம், தீவிர ஆன்மீக சாதகருக்கானதுன்னு நம்மால சொல்ல முடியாது. தன்னோட வாழ்க்கையில ஆன்மீக சாதனையும் ஒரு அம்சமா வச்சுருக்குற குடும்பஸ்தர்களுக்கானது இது. முறைப்படி தீட்சை பெற்றா, இது ஒரு சாத்தியம். நாம பொதுவா இங்க இந்த மாதிரி விஷயம் எல்லாம் செய்ய மாட்டோம், ஏன்னா லிங்கபைரவி தேவியை தவிர்த்து, இங்க இருக்குற ஆன்மீக செயல்முறை எல்லாம் சடங்குகள் இல்லாததா இருக்குது. ஒரு செயல்முறையை ஒருத்தருக்கு உள்நோக்கி திருப்புறது அப்டிங்கறது; வெளிநிலையில பண்ற செயல்முறையை விட பண்பட்டது, சூட்சுமமானது.

உள் பரிமாணத்தை உருவாக்க, வெளியில செய்ற செயல்முறையை பயன்படுத்துனோம்ன்னா, அதுல என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாதுன்னு சில கால வரையறைகள், இட கட்டுப்பாடுகள் இருக்கும். வெளியில செய்ற செயல்முறையில ஈடுபட்டிருக்கும் போது, நீங்க 24 மணி நேரமும் ஆன்மீகம் சார்ந்து இருக்க முடியாது.

சக்திநிலையில் வழங்கப்படும் உதவி

அது ஒரு நல்ல உதவியா மட்டும்தான் இருக்க முடியும். நான் ஒரு நல்ல உதவினு சொல்லும்போது, அத பண்றதுக்கு வேற பல வழிகள் இருக்குது. எல்லாத்துக்கும் மேல இங்க நம்மால தீட்சை கொடுக்கப்பட்டவங்களுக்கு நாம முற்றிலும் வேற விதத்துல உதவி கொடுக்குறோம். அவங்க அதை வேண்டி பெறணும். அவங்க எங்க இருந்தாலும் சரி, அவங்களுக்கு அந்த உதவி இருக்குது. உதவி வழங்குறதுங்கறது, ஈஷா ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மூலமான்னு இல்ல, அவங்க எங்க இருந்தாலும் சக்திநிலையில உதவி இருக்குது.

மனிதர்கள் எங்க இருந்தாலும் அவங்களுக்கு இந்த உதவி கிடைக்க செய்ய முடியும்ன்றதால, நாம சடங்குகள் மூலமா உதவி பண்றதில்ல. சடங்குகள் மூலமா உதவுறது - இந்த தேசத்துல ரொம்ப காலமா இருந்து வந்துருக்கற ரொம்ப பிரபலமான ஒரு வழக்கம். ரொம்ப காலம்ன்னா குறிப்பா கடந்த ஆயிரம் வருஷங்களா - குறிப்பா ஆதிசங்கரர் இதை பெரிய அளவுல செஞ்சாரு. ஏன்னா, அவர் வந்த சமயத்துல பொதுமக்களோட நிலை கொஞ்சம் தாழ்ந்து இருந்ததால, அவர் எல்லாருக்கும் மொத்தமா ஏதாவது கத்து குடுக்கணும்ன்னு நினைச்சாரு.

ஆதிசங்கரர், Adi Shankara

இப்போ நாம பெருந்திரளான மக்களுக்கு ஈஷா கிரியா கத்துக்குடுக்குற மாதிரி. காயத்ரி மந்திரம்ன்றது பல அம்சங்கள் கொண்ட ஒரு செயல்முறை. அதோட இயல்பை வச்சு பேசும்போது - இன்றைய காலத்துக்கு அது பொருத்தமில்லாததுன்னு நான் சொல்லலை – அது எப்பவுமே பொருத்தமானது தான். ஆனா அது செயல்பட தேவையான விஷயங்கள்னால, இன்றைய சமூக கட்டமைப்புகள்ல, நவீன காலத்து வாழ்க்கைக்குள்ள அது அந்தளவுக்கு பொருந்தல.

நவீன காலத்துக்கு ஏற்றதா?

இன்றைய உலகத்துல, பெரும்பாலான மக்கள் ஒரே இடத்துலேயே இருக்கறது இல்ல ; இதை நீங்க புரிஞ்சுக்கணும்... நீங்க பின்னோக்கி பார்க்கணும். ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி, நிறைய மக்கள் அவங்க வாழ்நாள் முழுக்க அவங்க தினமும் எழுந்துக்கறதும், திரும்ப தூங்கப் போறதும் ஒரே இடத்துல நடந்துச்சு. ஒரே கட்டடத்துல நடந்துச்சு. வாழ்க்கை முழுக்க ஒரே இடத்துல இருந்தாங்க, வெளிய போகல. வாழ்க்கை அப்டிதான் இருந்துச்சு. ஆனா இன்னைக்கோ வெகு சிலரோட வாழ்க்கைதான் அப்டி இருக்கு. என்னைமாதிரி ஆளுங்க எல்லாம்... நான் ஒரே படுக்கையில ரெண்டு இரவு தூங்குனேன்னா, அது பெரிய அதிர்ஷ்டம்தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்றைய சமூக சூழ்நிலை மாறிடுச்சு, அதனால ஒருசில சடங்குகளும், அதை செய்ற முறைகளும், அது இந்த காலத்துக்கு பொருந்திப்போற அம்சமோ ரொம்பவே குறைஞ்சு போயிருக்கு. இந்த பயிற்சிகள் அர்த்தமற்றதுன்னு நான் சொல்ல வர்ல. ஆனா சமூக சூழ்நிலைகள் மாறியிருக்கு. சமூக சூழ்நிலை மாறிடுச்சு. சூழ்நிலைகள்ல மாற்றம் நடந்திருக்கு. இன்னைக்கு சூழ்நிலைகள் இந்தமாதிரி பயிற்சிகளுக்கு ஏற்றமாதிரி இல்ல. அதனால பயிற்சிகள் உள்முகமா இருந்தா நல்லாயிருக்கும். உள்முகமா இருக்கற பயிற்சிகள் நீங்க எங்க இருந்தாலும் செய்ய முடியும். நம்ம எந்த மாதிரி சூழ்நிலைகள்ல இருக்குறோம், எந்த மாதிரி மனிதர்கள் கூட இருக்குறோம் அப்டின்னு எதையும் நாம சார்ந்து இருக்க தேவையில்ல.

யோகான்றது நூறு சதவீதம் உள்நிலை சம்பந்தப்பட்டது. எதை நீங்க காயத்ரி மந்திரம்ன்னு சொல்றீங்களோ, இல்ல வேற சில செயல்முறைகள் இருக்குது - யோகால இதை நாம தந்த்ர யோகான்னு சொல்வோம். தந்த்ரான்னு நான் சொல்றப்போ, இன்னைக்கு தந்த்ராங்கற வார்த்தைக்கு ரொம்ப மோசமான ஒரு அர்த்தம் கற்பிக்கப்படுது, குறிப்பா மேற்கத்திய நாடுகள்ல. தந்த்ரான்ற வார்த்தையை உச்சரிச்சாலே மக்கள் தடையில்லாத கட்டுப்பாடு இல்லாத உடல் இன்பம்ன்னு நினைக்கிறாங்க. தாந்த்ரீகம்ன்னா தொழிற்நுட்பம்.

தாந்த்ரீகம்… சில உண்மைகள்!

தாந்த்ரீகத்துல நிறைய வகைகள் இருக்குது. வெளியில இருந்து ஒரு பொருளை உபயோகப்படுத்தி செய்ற தொழிற்நுட்பத்துக்கு தாந்த்ரீகம்ன்னு சொல்வோம். வெளி பொருளை உபயோகப்படுத்தாம செய்ற தொழிற்நுட்பத்துக்கு, முழுமையா உள்நோக்கிய தொழிற்நுட்பத்துக்கு யோகான்னு சொல்வோம்.

யோகா, Yoga

யோகா, Yoga

நீங்க ஒரு தாந்த்ரீக செயல்முறை செய்யணும்ன்னா - தற்சமயம் தேவி கோவில்ல ஒரு ஆரத்தி நடக்குது - அது ஒரு வகையான தாந்த்ரீகம். பூஜை நடக்குது, அது ஒரு வகையான தாந்த்ரீகம். அபிஷேகம் நடக்குது, அது தாந்த்ரீகம். நீங்க குறிப்பிட்ட தாக்கம் ஏற்படுத்துறதுக்குன்னு சில உத்திகள், இல்ல தொழிற்நுட்பங்கள் இருக்குது. ஆனா இப்ப நீங்க தாந்த்ரீகம் பண்ணணும்ன்னா உங்களுக்கு தேவியோட ஒரு உருவம் தேவை, நிறைய கட்டுப்பாடுகள் இருக்குது.

லிங்கபைரவி ஆரத்தி, Linga Bhairavi Arati

லிங்கபைரவி மஹா ஆரத்தி, Linga Bhairavi Maha Arati

மக்கள் தாங்களாவே எதுவும் செய்ய விருப்பம் இல்லாம இருக்குறாங்க, அவங்களுக்காக மத்தவங்க செய்யணும்ன்னு நினைக்கிறாங்கன்னா, அப்போ தாந்த்ரீகம் உபயோகம் உள்ளதா இருக்கும். அதனால அதை எப்படி பயன்படுத்தணும்ன்னு தெரிஞ்ச ஒருத்தர் அதை மத்த எல்லாருக்காகவும் செய்வாரு. தாந்த்ரீகத்துல ஒரு ஆபத்து என்னன்னா, அதை தவறா பயன்படுத்துறது. நம்ம நாட்டுல அபாரமான தாந்த்ரீக கலாச்சாரம் இருந்திருக்கு. கடந்த ரெண்டு தலைமுறையில நாம அதை அழிச்சிட்டோம், ஏன்னா இது அந்த அளவுக்கு தவறா பயன்படுத்தப்பட்டு ரொம்ப அசிங்கமாயிடுச்சு. அது இல்லாம இருக்குறதே நல்லதுன்னு நினைச்சிட்டோம். அதனால கடந்த ரெண்டு தலைமுறையா, சடங்கு சாம்பிரதாயம் கொண்ட வாழ்க்கை முறையை தவிர்த்திருக்கோம், ஏன்னா அது அந்த அளவுக்கு ரொம்ப தவறா பயன்படுத்தப்பட்டு இருக்குது.

தாந்த்ரீகம் எப்படி கையாளப்பட வேண்டும்?

உள்நிலையில செய்ற செயல்முறையில ஒரு பாதுகாப்பு என்னன்னா, அதை யாரும் தவறா பயன்படுத்த முடியாது - நீங்கதான் செஞ்சாகணும். யாரோ உங்களுக்கு தீட்சை குடுக்கலாம், யாரோ ஒரு சக்தி வாய்ந்த செயல்முறையை உங்களுக்குள்ள விதைக்கலாம், அவ்ளோதான். அதை யாரும் தவறா பயன்படுத்துறதுக்கு வாய்ப்பு இல்ல. அதே நேரத்துல நாம எல்லாத்தையும் தூக்கி எரியவும் தேவையில்ல. இது குப்பையோட சேர்த்து விலையுயர்ந்ததையும் வீசுற மாதிரி ஆயிடும். நீங்க எல்லாத்தையும் வெளிய தூக்கிப்போட தேவையில்ல. தாந்த்ரீகத்தை கவனமா முறைப்படி கையாண்டா, அது சரிதான். ஆனா தாந்த்ரீகம்ன்னாலே உடலுறவு தான் அப்டிங்கற எண்ணத்தை நீங்க அழிச்சிடணும். உடலுறவுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல. இது வெளியில இருந்து ஒரு பொருளை பயன்படுத்துறது பத்தினது. அது எதுவா இருந்தாலும் சரி. ஏன்னா யோகிகளும், தாந்தீரகவாதிகளும் விஞ்ஞானிகளைப் போன்றவங்க. அவங்க எதையும் எப்டி வேலை செய்ய வைக்கறதுன்னுதான் பார்ப்பாங்க.

வரலாற்றின் குறிப்பிட்ட சமூகத்தோட, இல்ல குறிப்பிட்ட காலத்தோட நீதி நெறிமுறைகளுக்குள்ள அடங்காம அவங்க இருப்பாங்க. அதனால அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு பேர் வந்திருக்கலாம் - அதனாலதான் அவங்களுக்கு இந்த பேர் வந்துச்சு. இல்லாட்டி இதுக்கும் உடலுறவுக்கும் சம்பந்தமே இல்ல. தாந்த்ரீகம்ன்னா வெளிபொருளை உங்க நலனுக்காக பயன்படுத்துறது எப்டின்னு கத்துக்கறது. உங்க நலனுக்காக மட்டும் இல்ல, பெரிய அளவுல மக்கள் நலனுக்காகவும் தான். காயத்ரி மந்திரம் அந்த வகையை சேர்ந்தது – அதுல எந்த தவறும் இல்ல. ஆனா அது இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றதான்னு மட்டும் பார்க்கணும்.

மந்திரங்களை முறையின்றி பயன்படுத்துவதன் ஆபத்து

மந்திரங்கள் ரொம்ப சக்தி வாய்ந்தது. ஆனா அதை முறையா பயன்படுத்தணும், முறையா தீட்சை பெற்று பயன்படுத்தணும். சக்தி வாய்ந்த ஒலிகளை தவறா பயன்படுத்துறது பெரிய பிரச்சனையை உருவாக்கலாம். நான் அமெரிக்கால இருந்தப்போ ஒரு பெண்மணியை நம்ம நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வந்திருந்தாங்க. அது ஏழு நாள் வகுப்பு. அந்த பெண்மணி என்கிட்ட வர்றதுக்கு ஆறு, ஏழு, இல்ல எட்டு மாசத்துக்கு முன்னாடி தன்னோட குரலை இழந்திருந்தாங்க.

சுத்தமாவே குரல் போயிடுச்சு; அவங்க எல்லா டாக்டரையும், எல்லா நிபுணர்களையும் பார்த்திருந்தாங்க. அவங்களால ஒரு வார்த்தை கூட பேச முடியல. எந்த சத்தமும் இல்லாம, அவங்க பேச முயற்சிக்கும் போது காத்து மட்டும் தான் வரும். நிபுணர்களால அவங்க குரல்வளையில எந்த பிரச்சனையையும் கண்டுபிடிக்க முடியல. எல்லாம் சரியாதான் இருக்குது, ஆனா அவங்களால பேச முடியல.

சக்தி வாய்ந்த ஒலிகளை தவறா பயன்படுத்துறது பெரிய பிரச்சனையை உருவாக்கலாம்.

எதுவும் இல்லன்னா அப்ப ஏதோ தசை வளர்ச்சியா இருக்கலாம், இல்ல இது இருக்கலாம், அது இருக்கலாம், இப்டி சொன்னாங்க. கார்டிசன்ஸ் எடுத்துக்கலாம்; அது எடுக்கலாம், இது எடுக்கலாம்ன்னு சொன்னாங்க. யாரோ சர்ஜரி பண்ணலாம்ன்னு சொன்னாங்க. வேற எதுவும் இல்லைன்றதால, அவங்களுக்கு வெட்டி திறந்து பார்க்கணும்.

அப்புறம் என்கிட்ட கூட்டிட்டு வந்தாங்க. நான் அவங்களை பார்த்தேன். "ஏதாவது பயிற்சி செஞ்சீங்களா"ன்னு கேட்டேன். "ஏதாவது ஆன்மீக பயிற்சி, இல்ல மந்திரங்கள் ஏதாவது செஞ்சீங்களா"ன்னு கேட்டேன். "சரி, இந்த நிகழ்ச்சியில இருங்க, நாம பார்க்கலாம்"ன்னு சொன்னேன். ஒரு நாள், ரெண்டு நாள், மூணு நாள் ஆச்சு, அவங்களுக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு. குரல் இன்னும் திரும்ப வர்ல. நானும் அவங்க குரல்வளையைப் பத்தி ஒரு வார்த்தை கூட பேசல. நாலாவது நாள் அவங்க ரொம்ப கவலையா ஆயிட்டாங்க.

மறுபடியும் என்கிட்ட வந்தாங்க. நான் மறுபடியும் அவங்கக்கிட்ட, “நீங்க ஏதாவது மந்திரங்கள் பயிற்சி செஞ்சீங்களா?”ன்னு கேட்டேன். அவங்களை நான் பார்க்குறப்போ அவங்க ஏதோ செஞ்சிருக்கணும்ன்னு எனக்கு தோணுச்சு. அவங்களை பார்க்கும்போது ஏதோ செஞ்சிருக்காங்கன்னு எனக்கு தெளிவா தெரியுது. அவங்க "இல்ல"ன்னாங்க.

சரி, "ஏதாவது மந்திரத்தோட தாக்கத்துக்குள்ள வந்தீங்களா?"ன்னு கேட்டேன். "சக்தி வாய்ந்த மந்திரங்கள் செய்ற இடத்துக்கு எங்கையாவது போனீங்களா, அந்த தாக்கத்துக்குள்ள வந்தீங்களா?"ன்னு கேட்டேன், "இல்ல"ன்னாங்க. கடைசி நாள் அவங்களுக்கு ரொம்ப கோபமாயிடுச்சு. திரும்ப அவங்க என்னை சந்திச்சாங்க. நான் சொன்னேன், "நீங்க கட்டாயமா ஏதோ செஞ்சிருக்கீங்க. இல்ல ஏதோ மந்திரத்தோட தாக்கத்துக்குள்ள வந்திருக்கீங்க"ன்னு சொன்னேன்.

“கடந்த ஒண்ணு ஒன்றரை வருஷத்துல நீங்க என்ன செஞ்சீங்க, எங்க எல்லாம் போனீங்கன்னு எனக்கு சொல்லுங்க”ன்னு சொன்னேன். அவங்க… அவங்களால பேச முடியல, எழுதி காமிச்சாங்க. காயத்ரி மந்திரம் செஞ்சேன்னு சொன்னாங்க. “ஓ! எங்க இருந்து கத்துக்கிட்டீங்க?”ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க, “நான் இந்தியாவுக்கு போயிருந்தேன். அங்க ஒரு CD வாங்குனேன். வேலைக்கு போகும்போதெல்லாம் – அட்லாண்டா ட்ராபிக்ல… அவங்க வேலைக்கு போய் சேர ரெண்டு ரெண்டரை மணி நேரம் ஆகும். ட்ராபிக்ல மாட்டிக்குவாங்க. அப்டியே காயத்ரி மந்திரம்.

ட்ராபிக் கிளியர் ஆனப்போ, காயத்ரி மந்திரத்தை விட்டுட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்சுருவாங்க. நேரம் இருக்கும்போது திரும்ப சொல்வாங்க. அவங்க அமெரிக்கப் பெண்மணி, அவங்க எப்டி மந்திரங்களை திரும்ப சொல்வாங்கன்னு உங்களுக்கே தெரியும். அந்த CDயே தவறான உச்சரிப்பா இருக்கலாம், நமக்கு தெரியல. போதாததுக்கு அவங்க ஒரு அமெரிக்கர். சமஸ்கிருத வார்த்தைகள் அவங்களுக்கு அவ்ளோ சுலபமா வராது.

நான் அமெரிக்காவைப் பத்தி குறை சொல்லல. நீங்க இந்திய உள்ளூர் பாஷைகள் பேசலன்னா சமஸ்கிருதம் உச்சரிக்கிறது உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.

ஈஷாவில் மீண்டு வந்த குரல் வளம்

எனக்கு என்னன்னு தெரிய வந்தது. அவங்க காயத்ரி மந்திரம் செஞ்சிருக்காங்க, தவறாக செஞ்சிருக்காங்க. “இந்தியாவுல வந்து மூணு மாசம் என்னோட தங்கி இருங்க, நாம ஏதாவது முயற்சி செஞ்சு பார்க்கலாம், ஆனா உத்திரவாதம் இல்ல, முயற்சி செஞ்சு பார்ப்போம்”ன்னு சொன்னேன். அவங்க இங்க வந்தாங்க. நிறைய செயல்முறை / பயிற்சி பண்ண வச்சோம்.

மூணு மாசத்துல அவங்க குரல் எழுவது சதவீதம் திரும்பிடுச்சு. முப்பது சதவீதம் இன்னும் திரும்பல. முப்பது சதவீதம்ன்னா… அவங்கக்கிட்ட “நீங்க பேச எந்த முயற்சியும் எடுக்காதீங்க. ஒரு நாள்ல அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் நீங்க பேசணும். மத்த நேரத்துல பேசக்கூடாது”ன்னு சொன்னேன். கொஞ்ச கொஞ்சமா குணமடைஞ்சாங்க. ஏதாவது உணர்ச்சி வசப்பட்டாங்கன்னா, குரல் போயிடும். கொஞ்சமா உணர்ச்சி வசப்பட்டாங்கன்னாலும், குரல் போயிடும்.

ஒரு வருஷத்துல ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் குணமாயிட்டாங்க. அப்பக்கூட, “கோவப்பட்டா குரல் போயிடுது”ன்னு சொன்னாங்க. “அது நல்லதுதான், அப்டியே இருக்கட்டும்”ன்னு சொன்னேன். நீங்க கோபமா இருக்கும்போது குறைஞ்சபட்சம் உங்க குரலையாவது இழக்கலாம் அப்டின்னு சொன்னேன். மோசமான விஷயங்களாவது சொல்லாம இருப்பீங்க, இல்லையா? மூணு மூன்றரை வருஷத்துல நூறு சதவீதம் குணமடைஞ்சாங்க. ரொம்ப ரொம்ப அரிதா எப்பையாவது தான் குரல் போகும். ஆனா மூணு மூன்றரை வருஷத்துல பயிற்சிகள் பண்ணதுல தொண்ணுற்றொம்பது சதவீதம் குணமானாங்க. அதனாலதான் மந்திரங்களை ரொம்ப கவனத்தோடவும், முறையான குறிப்புகளோடவும், வழிகாட்டுதலோடவும் செய்யணும்.

: Adi Shankara Image from Wikipedia