சத்குரு: மேளதாளத்தின் ஒலி, பட்டாசு வெடி சத்தம், அலறல், இடி, இலைகளின் சலசலப்பு மற்றும் பல லட்சம் பிற ஒலிகள் - இவை அனைத்தும் மனிதர் அனுபவங்களில் பங்கு வகிக்கின்றன. ஒலி என்பது அடிப்படையில் ஒரு அதிர்வு; அதேபோல் நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ, எதைத் தொடுகிறீர்களோ அவையும் அதிர்வுகள்தான். படைப்பாக நீங்கள் அறிந்த அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அதிர்வாகவே இருக்கின்றன. ஒலி மற்றும் மெளனத்திற்கு இடையில் எது இருக்கிறதோ, அதிர்வுக்கும் அசைவின்மைக்கும் இடையில் எது இருக்கிறதோ அது பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அது பல வழிகளில் சிறப்பிக்கப்பட்டும், அடையாளப்படுத்தப்பட்டும் இருக்கிறது. பாரம்பரியமாக, இதை சிவன் மற்றும் சக்தி என்று அழைக்கிறோம். வேறு சில கலாச்சாரங்கள் இதை யின் மற்றும் யாங், ஆண் தன்மை மற்றும் பெண் தன்மை, தர்க்கம் மற்றும் உள்ளுணர்வு அல்லது வெறுமனே இது மற்றும் அது என்று குறிப்பிடுகின்றன. இது மற்றும் அதுவாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் அவை மேலோட்டமான நிகழ்வுகள்.

தியானலிங்கம் ஒரு ஏணி போன்றது. தியானலிங்கத்திற்கு ஏழு வளையங்கள் உள்ளன. ஆனால், அவை ஒரு ஏணியின் படிகள் போன்றவை. மனித அமைப்பிலும் ஏழு படிகள் உள்ளன. ஒவ்வொன்றுமே அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது

தியானலிங்கம் இது மற்றும் அது என்பதனுடைய ஒரு அற்புதமான வெளிப்பாடு என்றாலும், தியானலிங்கமானது இது மற்றும் இது என்பதில் தான் வேரூன்றியுள்ளது. நானும் அப்படித்தான், நீங்களும் அப்படித்தான். ஒவ்வொன்றுமே அப்படித்தான். நீங்கள் உங்களை ஒரு ஆண் என்று குறிப்பிடலாம், ஆனால் அடிப்படையில், நீங்கள் இரண்டுமாக இருக்கிறீர்கள். இருவரும் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இருக்க முடியாது, ஏனெனில் அவை இரண்டும் ஒரே அடிப்படையில் வேரூன்றியுள்ளன. இது பூ மற்றும் பழம் போன்றது. இது மண் மற்றும் மரம் போன்றது – இரண்டும் ஒன்றுதான், ஆனால் வேறுபாடு கொண்டது. இரண்டு எதிர் எதிர் விஷயங்களை நாம் ஒன்றிணைக்க முடிந்தால், இவை இரண்டும் ஒரு ஏணியின் இரண்டு கால்கள் போன்றவை. ஒருவர் ஏற ஏணியின் இரண்டு கால்களும் தேவை. அதே நேரத்தில், இரண்டு இருப்பதாக நீங்கள் நம்பினால், நீங்கள் ஏற முடியாது; அங்கு இருப்பது ஒன்றுதான், ஒரே ஒரு ஏணி மட்டுமே.

sadhguru-wisdom-article-dhyanalinga-big-zero

எனவே, தியானலிங்கம் ஒரு ஏணி போன்றது. தியானலிங்கத்திற்கு ஏழு வளையங்கள் உள்ளன. ஆனால், அவை ஒரு ஏணியின் படிகள் போன்றவை. மனித அமைப்பிலும் ஏழு படிகள் உள்ளன. ஒவ்வொன்றுமே அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேள்வி என்னவென்றால், “நீங்கள் ஏறுவீர்களா அல்லது ஏறமாட்டீர்களா?” என்பதுதான். ஏற்கனவே அப்படி படிகளில் ஏறிய ஒருவரின் வெளிப்பாடாக தியானலிங்கம் இருக்கிறது. இதனால் இப்போதைக்கு ஏறுவது குறித்து கவலைப்படாதவர்களுக்கு தியானலிங்கம் குறைந்தபட்சம் ஒரு ஊக்க சக்தியாக இருக்கமுடியும். ஆனால், எல்லாமே ஒன்றில் மட்டுமே வேரூன்றியுள்ளது, இது மற்றும் இது. அதை ஒன்று என்று அழைப்பது தவறு. ‘இது மற்றும் அது’ என்பது ஒன்று மற்றும் இரண்டு என்றால், பிறகு ‘இது மற்றும் இது’ என்பது ஒரு பெரிய பூஜ்ஜியம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முழு எண்களின் அமைப்பும் பூஜ்ஜியத்தில்தான் வேரூன்றியுள்ளது. உங்களிடம் பத்து விரல்கள் இருப்பதால் பூஜ்ஜியம் உருவானது என்று அர்த்தம் இல்லை. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என்று எண்ணி, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்ததாக அர்த்தம்கொள்ள வேண்டாம். எதையோ போட்டு அதை நிரப்பியிருக்கலாம். ஆனாலும் நாம் பூஜ்ஜியத்தைக் கொண்டு வந்தோம். அதை நாம் கண்டுபிடித்ததால் அல்ல, எண்கள் பூஜ்ஜியத்தில் வேரூன்றி இருக்கிறது என்ற காரணத்தால்.

முழு படைப்பும் பூஜ்ஜியத்தில் அல்லது ஒன்றுமில்லா தன்மையில் வேரூன்றியுள்ளது. பூஜ்ஜியத்தின் பரந்த தன்மையை எந்த எண்ணுடனும் ஒருபோதும் பொருத்த முடியாது. ஏனென்றால், ‘எதுவாக இல்லையோ அது’ எல்லையற்றது. ஒரு எண் என்றால் அது எல்லையுடையது. நீங்கள் அதை இலட்சம் கோடி என்று அழைக்கலாம், ஆனால் இன்னும் அது எல்லைக்கு உட்பட்டே உள்ளது. இன்று ஒரு லட்சம் ரூபாயில் வாங்கக்கூடியதை பத்து ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு காலம் இருந்தது. என் தந்தை, ஒரு மருத்துவர். அவரது பேரனுக்கு ஐ.டி நிபுணராக வேலை கிடைத்தபோது அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால், அவன் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்துடன் தொடங்கினாரன். என் தந்தை கொஞ்சம் திகைத்துப் போனார். ஏனென்றால், அவர் ஒரு டாக்டராகத் தொடங்கியபோது, அவருக்கு சம்பளமாக நூறு ரூபாய் கிடைத்தது. அவர் கூறினார், “நான் தொடங்கியபோது எனக்கு நூறு ரூபாய் மட்டுமே கிடைத்தது. ஆனால், பெரிதாக எதற்கும் இலாயக்கில்லாத இவனுக்கு சம்பளம் முப்பதாயிரத்தில் தொடங்குகிறது!” ஆனால், அன்று நூறு ரூபாய்க்கு வாங்கியதை இன்று முப்பதாயிரம் கொடுத்தாலும் வாங்க முடியாது. எனவே, எண்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். இது ஒருமுறை பிரான்சிஸ்கோவில் நடந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக உடையணிந்த ஒரு இளைஞன் தெருவில் நடந்து கொண்டிருந்தான். முற்றிலும் அழுக்கான தோற்றமுள்ள ஒரு மனிதர் இளைஞனிடம் வந்து, “நான் காபி குடிக்க விரும்புகிறேன், இரண்டு டாலர்கள் தர முடியுமா?” என்று கேட்டார். அந்த இளைஞனின் நாசி சுருண்டுபோய், ஒரு டாலர் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே காபியைப் பெற முடியும்போது, “இரண்டு டாலர்களைக் கேட்க உங்களுக்கு எவ்வளவு தைரியம்? அதற்கு அந்த மனிதர் புன்னகைத்து, “நீங்களும் என்னுடன் சேர்ந்து குடிப்பீர்கள் என்று நான் நினைத்தேன்” என்றார்.

பூஜ்ஜியத்தின் முக்கியத்துவம்

எவையெவை எதிரெதிர் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவை படைப்பின் உருவாக்கத்தில் சேர்ந்து செயல்படுகின்றன. நீங்கள் விரும்பும் அளவுக்கு இதை நீங்கள் விளையாடலாம். ஆனால், படைப்பின் ஒத்தத் தன்மையை நீங்கள் கவனிக்கத் தவறினால், படைப்பின் இருமையில் உங்களை நீங்கள் இழந்துவிட்டால், பிறகு உங்கள் நாடகம் தொடங்கும். ஆனால், நீங்கள் நாடகத்தின் இயக்குநராக இருக்கமாட்டீர்கள்; நாடகத்தில் நடிக்கும் ஒரு நடிகராக மட்டுமே இருப்பீர்கள், அது சோகமான நாடகமாகவும் இருக்கலாம்! நீங்கள் ஒரு ஹீரோ அல்லது கதாநாயகியாக இருந்தாலும் அது ஒரு சோகமான நாடகமாக இருக்கலாம் - யாருக்குத் தெரியும்? பொதுவாக, மிகவும் பிரபலமான நாடகங்கள் துன்பகரமானவை. ஆனால், நீங்கள் ஒத்தத் தன்மையை அறிந்திருந்தால், இருப்பின் பூஜ்ஜியத்தை நீங்கள் அறிந்திருந்தால், அது உங்கள் அனுபவத்தில் வந்திருந்தால், நீங்கள் நாடகத்தின் இயக்குநராகிவிடுவீர்கள். சோகம் அல்லது நகைச்சுவை, இனி அது ஒரு பொருட்டல்ல. இப்போது நீங்கள் நாடகத்தை இயக்குவதால் நீங்கள் விரும்பியபடி விளையாடலாம். நீங்கள் இருமையுடன் அடையாளம் காணப்பட்டால், நீங்கள் நாடகமாகிவிடுவீர்கள், அப்போது நாடகம் எந்த வழியிலும் செல்லலாம்; குறிப்பாக இயக்குனர் இல்லாதபோது, அது ஒரு சோகமான நாடகமாக இருக்கலாம். பெரும்பாலான நேரம் இயக்குனர் இல்லாத எந்த சூழ்நிலையும் ஒரு சோகமான சூழ்நிலையே. அரிதாகவே அது நன்றாக நடக்கும்.

எனவே, தியானலிங்கத்தின் முன்னிலையில் இருக்க சொல்வதன் காரணம் இதுதான் - ஏழு சக்கரங்களும் அங்கு வெளிப்படுத்திக் கொள்கின்றன. அதனால் முழு வீச்சும், வாழ்க்கையின் உற்சாக மிகுதியும் கிடைக்கிறது. ஆனால் அதேநேரத்தில், அது இன்னும் உங்களை பூஜ்ஜியமாக ஆக்கி விடுகிறது. “ஒன்று, இரண்டு, சா-சா-சா…” என்று நடனமாடவும் நகரவும் நீங்கள் விரும்பும்போது உங்களுக்குத் தெரியும், இயக்கமும் எண்களும் ஒன்றே, அசைவின்மையும் பூஜ்ஜியமும் ஒன்றே என்பது. நீங்கள் பூஜ்ஜியத்தின் பார்வையிலிருந்து நகர்ந்துவிட்டால், எண்கள் உங்களை விழுங்கிவிடும். எதற்குள் சிக்கினோம் என்றே உங்களுக்குத் தெரியாது. நீங்கள் தொடர்ந்து பூஜ்ஜியத்தின் பார்வையிலேயே இருந்துகொண்டு எண்களுடன் விளையாடுகிறீர்கள் என்றால், அப்போது எண்கள் அழகானவை. எண் அமைப்பை பூஜ்ஜியம் இல்லாமல் கற்பனை செய்துபாருங்கள், சிறிய விஷயங்களுக்கும் கிறுக்கு பிடித்துவிடும். இது நிறைய பேருக்கு நடக்கிறது. ஒன்று, இரண்டு என்று எண்ண, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு மட்டுமே எண்ணினார்கள், அதற்குமேல் ஒன்றும் வரவில்லை. ஆனால், ஏற்கனவே அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். ஒன்று, இரண்டு என இரண்டு வரை எண்ணுவதே மிகவும் சிக்கலாக மாறியது எதனால் எனில், நீங்கள் பூஜ்ஜியத்தின் பார்வையை இழந்ததுதான்.

தியானலிங்கம் - எல்லைக்குட்பட்டது மற்றும் எல்லையற்றது என இரண்டுமாக

எனவே, தியானலிங்கம் என்பது எண்களை மிகைப்படுத்தி எதிரொலிக்கும் ஒரு சாத்தியமாக இருக்கும், அதேநேரத்தில் அங்கே பூஜ்ஜியத்தின் இருப்பும் மகத்தானது. அதன் முன்னிலையில், வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தை அறிந்துகொள்வது மிகவும் எளிமையாகிறது. அதுதான் அடிப்படை பரிமாணம் மற்றும் இருப்பின் மிகப்பெரிய பரிமாணம். இந்த முழு நாடகமும் வெறும் ஐந்து கூறுகளைக் கொண்டது. வாழ்க்கையின் பல்வேறு வகைகளைப் பாருங்கள், அகிலத்தின் அளவைப் பாருங்கள், இவற்றுக்கு காரணம் வெறும் ஐந்து பொருட்கள்தான். இந்த படைப்பு ஒரு தலைசிறந்த படைப்பு அல்லவா? வெறும் ஐந்து பொருட்களுடன், நீங்கள் எத்தனை விஷயங்களைச் செய்ய முடியும் என்பது நம்பமுடியாத ஒன்றாக உள்ளது.

உண்மையில், எண் முறையைப் பொறுத்தவரை, நாம் இரண்டுக்கு பதிலாக ஒரு கையால் எண்ணியிருக்கலாம். “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,” அல்லது “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, பத்து” என்று சொல்லியிருக்கலாம் - இங்கேயே ஒரு பூஜ்ஜியத்தைச் சேர்த்திருக்கலாம். அப்படியும் அது வேலை செய்திருக்கும். உங்களிடம் பூஜ்ஜியம் இருக்கும் வரை, நீங்கள் விரும்பும் வழியில் அதைச் செயல்படுத்தலாம். எண் அமைப்புடன் இது அவ்வாறு உள்ளது; இது உங்கள் வாழ்க்கையிலும் அப்படித்தான். உங்கள் வாழ்க்கையின் வரம்பற்ற பூஜ்ஜியத்துடன் நீங்கள் தொடர்பில் இருக்கும் வரை, அதை எந்த வழியிலும் செயல்படச் செய்யலாம்.

இப்போது உங்கள் மனதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நீங்கள் பூஜ்ஜியத்தின் பார்வையை இழந்துவிட்டீர்கள். எனவே இன்று என்ன, நேற்று என்ன, நாளை என்ன என்று உங்களுக்குத் தெரியாது. அத்தகைய ஒரு எளிய விஷயம், ஆனால் அது அனைத்தும் கலந்துவிட்டது. நேற்றைய விஷயங்கள் இன்னும் உங்களுக்குள் வாழ்கின்றன. ஏன் நேற்று மட்டும்? முன்பிறவி வாழ்க்கை முட்டாள்தனம் கூட இன்னும் உங்களுக்குள் வாழ்கிறது. நாளை நடக்க இருக்கும் விஷயங்கள் கூட உங்களை ஏற்கனவே தொந்தரவு செய்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று இன்னும் உங்களை காயப்படுத்துகிறது; நாளைக்குப் பிறகு நடக்கக்கூடிய ஒன்று ஏற்கனவே உங்களைத் தொந்தரவு செய்கிறது.

பூஜ்ஜியத்தின் பார்வையை நீங்கள் இழந்தவுடன், இன்று என்ன, நேற்று என்ன, நாளை என்ன என்று உங்களுக்குத் தெரியாது - இது அனைத்தும் கலந்துவிட்டது. ஒருமுறை, சங்கரன் பிள்ளை மனநல மருத்துவரிடம் சென்று பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். மணிக்கணக்கில் கேட்டபின், மனநல மருத்துவர் அவரிடம், “பாருங்கள், நீங்கள் சொன்ன விஷயங்கள் எதுவும் உண்மையில் நடக்கவில்லை” என்று கூறினார். உடனே சங்கரன் பிள்ளை, “இல்லை, அதை என்னிடம் சொல்லாதீர்கள்! நான் அதை தெரிந்து கொண்டால் பிறகு அவை ஏன் நடக்கவில்லை என்று நான் கவலைப்படுவேன்!” என்றார். மக்கள் தங்கள் பிரமைகளை அனுபவிக்கிறார்கள்; அது ஒரு பெரிய பிரச்சினை. நீங்கள் பூஜ்ஜியத்தின் பார்வையில் இருந்தால், எண்கள் என்பது ஒரு எண் விளையாட்டு என்பதாக மட்டுமே இருக்கும். இல்லையெனில், அது மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே செல்லும். இது கோடி கோடிகளுக்குச் சென்று உங்களை பைத்தியத்தனத்திற்கு இட்டுச் செல்லும்.

தியானலிங்கத்தின் அதிசயம்

ஒன்றுமற்றதிலிருந்தே கோடிக்கணக்கான பால்வெளிகள் வெளிப்படுகின்றன, பிறகு அவை எந்த நேரத்திலும் அந்த ஒன்றுமற்றதற்குள் சென்று அவையும் ஒன்றுமற்றதாக மாறிவிடுகின்றன. இன்னும் என்ன அதிசயம் வேண்டும்? நீங்கள் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால், அது ஒரு மனிதனாக மாறுகிறது. இன்னும் என்ன அதிசயம் வேண்டும்? நான் மூச்சை வெளிவிட்ட பிறகு, மீண்டும் உள்ளிழுக்க வில்லையென்றால், உயிரானது அப்படியே ஆவியாகிவிடும். இன்னும் என்ன அதிசயம் வேண்டும்?

எனவே, தியானலிங்கம் என்பது ஒரு கருவியாக இருக்கிறது. அங்கு நீங்கள் ஐந்து கூறுகளை வைத்து விளையாடுகிறீர்கள் என்றாலும், அடிப்படையில் அது ஒரு பெரிய பூஜ்ஜியமாகும். ஒன்றுமற்றதிலிருந்தே அனைத்தும் வந்தது, அனைத்தும் சென்று சேருவதும் அந்த ஒன்றுமற்றதில்தான். எல்லாம் பூஜ்ஜியத்திலிருந்தே வருகிறது, எல்லாம் பூஜ்ஜியத்திற்கே திரும்பிச் செல்கிறது. தியானலிங்கம் என்பது ஒரு வலுவான நினைவூட்டல், வாழ்க்கையின் உற்சாகம் மிகுந்த வெளிப்பாடு. அதேநேரத்தில் அந்த ஒன்றுமற்றதைப் போல் அசைவின்மை உடையதாகவும் இருக்கிறது. ஒன்றுமற்றதன் அசைவின்மை மற்றும் ஒவ்வொன்றின் உற்சாகம் ஒரே இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது - அதுதான் தியானலிங்கத்தின் அதிசயம். நான் “அதிசயம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, நான் இந்த பாத்திரத்தைத் திறந்து ஒரு குட்டி யானை வெளியே வந்தால், அது ஒரு அதிசயம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது ஒரு அதிசயம் அல்ல. யானைகளின் உற்பத்தியை யானைகளுக்கு விட்டுவிடுவோம். நீங்கள் அவற்றை பாத்திரங்களிலிருந்து வெளியே இழுக்க வேண்டியதில்லை.

ஒன்றுமற்றதிலிருந்தே அனைத்தும் தோன்றின என்னும் அதிசயத்தை ருசிக்கும் அளவுக்கு உணர்திறன் இல்லாத மனங்கள் மட்டுமே ஒன்றுமற்ற சாதாரண அற்புதங்களைத் தேடும். அதிசயம் என்றால் உடனே அவர்கள் நினைப்பது, "நீங்கள் எனக்கு ஒரு தங்கச் சங்கிலியை வரவழைத்துக் கொடுக்க முடியுமா?" என்பதுதான். முட்டாள் மனங்கள் மட்டுமே இத்தகைய அற்புதங்களைத் தேடும். ஏனென்றால், அவர்கள் இருப்பின் மிகப்பெரிய அதிசயத்தை தவறவிடுகிறார்கள். ஒன்றுமற்றதிலிருந்தே கோடிக்கணக்கான பால்வெளிகள் வெளிப்படுகின்றன, பிறகு அவை எந்த நேரத்திலும் அந்த ஒன்றுமற்றதற்குள் சென்று அவையும் ஒன்றுமற்றதாக மாறிவிடுகின்றன. இன்னும் என்ன அதிசயம் வேண்டும்? நீங்கள் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால், அது ஒரு மனிதனாக மாறுகிறது. இன்னும் என்ன அதிசயம் வேண்டும்? நான் மூச்சை வெளிவிட்ட பிறகு, மீண்டும் உள்ளிழுக்க வில்லையென்றால், உயிரானது அப்படியே ஆவியாகிவிடும். இன்னும் என்ன அதிசயம் வேண்டும்? இவை எல்லாமே பிரம்மாண்டமான அதிசயங்கள். நீங்கள் அதைப் பார்க்க முடியவில்லை, அதனால் தங்கச் சங்கிலிகளைக் கேட்கிறீர்கள், என்னவோ நீங்கள் ஏற்கனவே சங்கிலியால் பிணைக்கப்படவில்லை என்பது போல. நீங்கள் ஏற்கனவே நன்றாக சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளீர்கள், என்னை நம்புங்கள்.