மரணம் பற்றிய சத்குரு வாசகங்கள்! (Death Quotes in Tamil)

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சுவாசத்தோடும் உங்கள் கல்லறைக்கு நெருக்கமாகச் செல்கிறீர்கள். ஆனால் உங்கள் ஒவ்வொரு சுவாசத்தோடும் நீங்கள் விடுதலைக்கு நெருக்கமாகவும் செல்ல முடியும்.

ஒருவரையொருவர் உண்மையாக, ஆழமாக நேசித்திருப்பவர்களே, தங்கள் அன்பானவர்களின் இழப்பை நேர்த்தியாகக் கையாளுவர்.

உரிய நேரத்தில் நிகழும் மரணம் பேரிழப்பு அல்ல. மிக அதிகமான பிறப்புகள்தான் உண்மையான பேரிழப்பு.

Death Quotes in Tamil, மரணத்தையும் வரமாக்கும் சத்குருவின் வாசகங்கள்!

எப்போது மரணம் குறித்த விழிப்புணர்வு உங்களிடம் தொடர்ந்து இருக்கிறதோ, அப்போது உங்கள் ஆன்மீகத் தேடல் சஞ்சலம் இன்றி நிகழும்.

உயிர் இருப்பதைப் போலவே மரணமும் இருக்கிறது. இந்த உண்மை விழிப்புணர்வில் இருந்தால், உங்கள் வாழ்வை முழுமையாகவும் தீவிரமாகவும் வாழலாம்.

எனக்குப் பாதுகாப்பு அவசியமில்லை என்று கருதும் ஒருவரே உண்மையில் பாதுகாக்கப்பட்டவர்.

பெரும்பாலானவர்களுக்கு, வாழ்க்கையும், வாழ்க்கை அனுபவங்களும் வேறுபாடானவை. ஆனால் மரணம் நிச்சயமானது. இந்த நிச்சயத் தன்மைதான் மக்களை விழித்தெழச் செய்யும்.

மரணம்தான் உயர்ந்த ஓய்வுநிலை. வாழ்க்கை நகர வேண்டுமெனில் அதற்கு குறிப்பிட்ட அளவு பதட்டம் தேவைப்படுகிறது.

உங்கள் வாழ்க்கை எவ்வளவு வலுவற்றதாக இருக்கிறது என்பதையும் அது எந்த நேரத்திலும் தலைகீழாக மாறி விடலாம் என்பதையும் உணர்ந்தீர்கள் என்றால், நீங்கள் இந்த பூமியில் மிக மென்மையாக நடந்து கொள்வீர்கள்.

மரணம் குறித்து மனிதர்களுக்கு இவ்வளவு பயம் இருக்கக் காரணம், அவர்களுக்கு உடலைத் தாண்டி எதுவும் தெரியவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உயிர் தன்மையின் துடிப்பு, மரணத்தின் நிச்சலனம் - முழுநிறைவுக்கு இரண்டுமே அவசியம். வாழும் மரணம்தான் இந்தபிரபஞ்சத்தின் இயல்பு.

உங்கள் வாழ்வு நிலையற்றது என்று தொடர்ந்து நினைவில் வைத்திருந்தால், இந்த பூமியின் மேல் நீங்கள் மென்மையாகவும், அறிவுபூர்வமாகவும் நடப்பீர்கள்.

வாழ்க்கை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு நகரும்பொழுது கடக்கும் இடைப்பட்ட நிகழ்வுகள்தான் பிறப்பும் இறப்பும்.

இறப்பு என்பது பிரபஞ்சத்தினுடைய வேடிக்கை விளையாட்டு. இந்த வேடிக்கை உங்களுக்கு புரிந்துவிட்டால், மறு பக்கத்தில் விழுவது அற்புதமாய் இருக்கும்.

வாழ்க்கை நிச்சயமற்றது. மரணம் மட்டுமே நிச்சயமானது.

யார் ஒருவர் இறப்பதற்கு தயாராய் இருக்கிறாரோ, அவரால்தான் முழுமையாய் வாழவும் முடியும்.

மரணம் என்பது அறியாதவர்களின் கட்டுக்கதை. உயிர், உயிர், உயிர் மட்டுமே இருக்கிறது. அது ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்துக்கு நகர மட்டுமே செய்கிறது.

நீங்கள் ஒரு நாள் இறப்பீர்கள் என்ற விழிப்புணர்வுடன் இருந்தால், உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் முற்றிலுமாக அவசியமானதன்றி வேறெதையும் நீங்கள் செய்ய மாட்டீர்கள்.

பிறப்பைக் கொண்டாடுவதைப் போல் இறப்பைக் கொண்டாட நமக்கு தெரியவில்லை என்றால், இந்த உயிர் பற்றி நமக்குத் தெரியவில்லை என்று அர்த்தம்.

மரணம் நம் வாழ்க்கையில் ஒரு முறைதான் நிகழும். அதை நாம் நல்ல விதமாக நடத்துவது முக்கியம்.

வாழ்பவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒருகுறிப்பிட்ட காலம் வரை இறந்தவருக்குள் ஏதோவொன்றை உட்புகுத்த முடியும்.