இஞ்சி 10 மருத்துவ பலன்கள்! - பாகம் 1
இதயத்தை பலப்படுத்தும் இஞ்சி! - பாகம் 2

பாகம் 3:

இஞ்சியானது மஞ்சளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகும். பீட்டா-கரோட்டின், கேப்சைசின், காஃபிக் ஆசிட் மற்றும் கர்குமின் போன்ற பலவித கூட்டுப்பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஞ்சியிலுள்ள ஜிஞ்சிரால், ஷோகால் மற்றும் சிங்கரோன் போன்ற கூட்டுப்பொருட்களிலிருந்து இஞ்சி --- பிரித்தெடுக்கப்படுகிறது.

இஞ்சிரால் என்பது பச்சை இஞ்சியில் உள்ள உயிர்ப்புள்ள ஒரு கூட்டுப்பொருளாகும். மேலும், மிளகாய் மிளகிலுள்ள கூட்டுப்பொருளான கேப்சைசினுடன் தொடர்புடையது. ஜிங்கரோன் என்பது ஜிஞ்சராலை சமைக்கும்போது கிடைக்கும் பொருளாகும். ஜிஞ்சரால் உலரும்போது கிடைக்கும் பொருள் ஷோகால்.

பிறப்பிடமும் வாணிப வழித்தடமும்

தென் ஆசியாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் பெரும்பாலும் காணப்படும் இஞ்சி, இந்திய துணைக்கண்டத்தை பிறப்பிடமாக கொண்டது என அறியப்படுகிறது! பலவகை பாரம்பரிய ரகங்களில் இந்தியாவில் அதிகப்படியாக விளையும் இஞ்சி செடிகள், இப்பகுதிகளில் இஞ்சி செடிகள் நீண்டகாலமாக இருந்துவந்துள்ளதை காட்டுகிறது!

கி.பி முதலாம் நூற்றாண்டில் மிளகு போன்ற ஆசிய வியாபார பொருட்களுடன் இஞ்சியும் முதன்முதலில் ஆசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது! 2000 வருடங்களுக்கு முன் அரபு வணிகர்கள் மத்திய கிழக்கு பகுதிகளுக்கும், செங்கடலை கடந்து கிரேக்கம் மற்றும் ரோமானிய தேசத்திற்கு கொண்டு சென்றனர்.

இறக்குமதி செய்யப்படும் இஞ்சியை அலெக்ஸாண்ட்ரியாவில் கரையிறக்குவதற்காக வரி விதிக்கப்பட்டதை பண்டைய ரோமானிய பதிவுகள் காட்டுகின்றன. ரோமாபுரியின் வீழ்ச்சிக்கு பின் இஞ்சியின் உபயோகம் 11ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் இல்லாமல் இருந்தது! அதன்பின் மீண்டும் இஞ்சி உபயோகித்திற்கு வந்தது! இஞ்சி சமையலுக்கான பொருளாக மட்டும் அவர்களை கவரவில்லை; பலவித மருத்துவ குணங்களாலும் வாணிப மதிப்பினாலும் அவர்கள் அதனை பெரிது விரும்பினர்.

1128ல் பிரெஞ்சு காரர்களான மெர்செல்லியர்கள் இஞ்சி இறக்குமதிக்கு வரி விதித்தனர்; அதனைத் தொடர்ந்து 1296ல் பாரிஸிலும் வரி விதிக்கப்பட்டது! 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் ஒரு ஆடுக்கு பண்டமாற்றாக ஒரு பவுண்டு இஞ்சி வழங்கப்பட்டது! 14ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பரவிய இஞ்சி உபயோகம், மிளகிற்கு அடுத்தடியாக முக்கியமான சமையல் பொருளாக மாறியது!

இடைக்காலங்களில், இனிப்பு பலகாரங்களில் சேர்ப்பதற்காக பதப்படுத்தப்பட்ட வடிவத்தில் இஞ்சி இறக்குமதி செய்யப்பட்டது! இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்கள் இஞ்சி பிரியராக இருந்தார் என்று சொல்லப்படுகிறது! தற்போது கிறிஸ்துமஸ் விழாக்களில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஒரு வழக்கமாக மாறியிருக்கும் ஜிஞ்சர்பிரெட் விற்பனையாளர்கள் அவரால்தான் ஊக்குவிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது! இந்த மருத்துவ குணமிக்க செடி ஐரோப்பாவிலிருந்து ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்களுடன் புதிய இடத்திற்கு வந்தது! அதன்பின் மேற்கு ஐரோப்பிய பூர்வகுடிகளுடன் அமெரிக்காவில் குடிகொண்டது!

இன்று உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் பெருமளவில் இஞ்சி பயிர்செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் இந்தியா சீனாவுக்கு அடுத்தயாக பெரும் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் ஏற்றுமதியாளராகவும் பெரும்பங்கு வகிக்கிறது.

கரீபியன் தீவுகள் இஞ்சி உற்பத்தியில் குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது. குறிப்பாக ஜமைக்காவில் இந்தியாவில் விளையும் இஞ்சிக்கு நிகரான தரத்துடன் இருக்கிறது. பிரேசில் போன்ற தென்அமெரிக்க நாடுகள் மற்றும் நைஜீரியா மற்றும் சியாரா லியோன் போன்ற ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை இஞ்சி உற்பத்தி செய்கின்றன. ஆஸ்திரேலியாவிலும் ஃபிஜி தீவிலும் இதே அளவிற்கு விளைவிக்கப்படுகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சில கவனிக்க வேண்டிய குறிப்புகள்:

இஞ்சியை நன்கு இடித்து சாறெடுத்து 15 நிமிடங்கள் ஒரு டம்ளரில் வைத்திருக்கவும்.

அதன் கசடுகளை விட்டுவிட்டு தெளிவான சாறை மட்டும் எடுத்து குளிர்சாதன பெட்டியில் 5-6 நாட்கள்வரை வைத்திருக்கவும்.

  • 2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இஞ்சி கொடுக்கப்படக்கூடாது.
  • பொதுவாக, இளைஞர்கள் 4 கிராம்களுக்கு மேல் ஒரு நாளில் இஞ்சியை எடுத்துக்கொள்ளுதல் கூடாது. (சமையலில் சேர்க்கப்படுவதையும் சேர்த்து)
  • கர்ப்பிணி பெண்கள் தினமும் 1 கிராமிற்கு மேல் இஞ்சி எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
  • உலர்ந்த அல்லது பச்சையான இஞ்சியை கொண்டு இஞ்சி டீ செய்து ஒருநாளைக்கு 2 வேளைகள் குடித்து வரலாம்.
  • கடுமையான எரிச்சலைக் குறைப்பதற்காக பாதிக்கப்பட்ட இடத்தில் இஞ்சி எண்ணெயை ஒருநாளுக்கு சில முறைகள் மசாஜ் செய்யலாம்.
  • மற்ற வடிவத்தில் எடுத்துக்கொள்வதைவிட இஞ்சி மாத்திரைகள் நல்ல பலன் தரக்கூடியதாக உள்ளன.
  • பிற மருந்து பொருட்களுடன் இயைந்து இஞ்சி செயல்புரிகிறது, இரத்தசோகை போன்றவற்றையும் சேர்த்து.
  • மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னர் இஞ்சி மாத்திரைகளை உட்கொள்வது பக்க விளைவுகளை தவிர்க்க உதவும்.

மருத்துவ குணத்துடன் சில உணவு செய்முறை

இஞ்சி பானங்கள்

செய்முறை # 1: இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

  • இஞ்சியை நன்கு இடித்து சாறெடுத்து 15 நிமிடங்கள் ஒரு டம்ளரில் வைத்திருக்கவும்.
  • அதன் கசடுகளை விட்டுவிட்டு தெளிவான சாறை மட்டும் எடுத்து குளிர்சாதன பெட்டியில் 5-6 நாட்கள்வரை வைத்திருக்கவும்.
  • 2 தேக்கரண்டி இஞ்சி சாறோடு 2 தேக்கண்டி தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வரவும்.

ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் தொடர்ந்து 48 நாட்களுக்கு இதனை எடுத்து வரலாம்.

செய்முறை # 2: ஜுரணக் கோளாறுகளை குணமாக்குகிறது

  • புத்தம் புதிய இஞ்சியை நன்கு கழுவி எடுத்து அதன் மேற்தோலினை நீக்கிவிடவும்.
  • இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, பெரியவாயுள்ள பாத்திரத்தில் போட்டு தேனில் ஊறவைக்கவும்.
  • பாத்திரத்தின் மூடியை மெல்லிய வெள்ளைப் பருத்தி துணியால் மூடி சூரிய வெளிச்சத்தில் 12 நாட்கள்வரை வைக்கவும்.
  • பின் தினமும் 2-4 துண்டுகள்வரை காலை மற்றும் மாலையில் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுகள் சரியாகும்.

செய்முறை # 3: சளித்தொல்லைகள் சரியாகும்

4 தேக்கரண்டி இஞ்சி சாறு, 4 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக்கொள்ளவும். இது சளியால் உண்டாகும் ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பிற்கு நல்ல தீர்வாகும்.

இஞ்சி - எலுமிச்சை தேநீர்

இந்த ஆரோக்கிய தேநீரானது உங்களுக்கு தெம்பும் புத்துணர்ச்சியும் தருவதோடு, காஃபைனினால் உண்டாகும் எந்தவித பக்க விளைவுகளும் அற்றதாக இருக்கிறது.

ஒரு பாத்திரத்தை 4.5 கப் அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைக்கவும்.

2 இஞ்சித்துண்டுளோடு 25-30 துளசி இலைகளைச் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ளவும்.

இடித்து வைத்த கலவையை கொதிக்கும் நீரில் சேர்க்கவும், அதோடு 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை (தேவைப்பட்டால்) சேர்க்கலாம்.

2-3 நிமிடங்களுக்கு கொதிக்க தொடர்ந்து கொதிக்கவிடவும்.

பின் கப்களில் டீயை ஊற்றிஅதோடு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறையும் தேவையான அளவு சர்க்கரையையும் கலந்து சூடாக பரிமாறலாம்.

தர்பூசணி-இஞ்சி-மின்ட் பானம்

இஞ்சி, தேன் மற்றும் தர்பூசணி கலந்த கோடைக்கு ஏற்ற ஒரு குளிர் பானம் உங்களுக்காக!

தேவையான பொருட்கள்

  • தர்பூசணி பழத்தின் கால்பங்கு
  • 1 சிறிய இஞ்சித்துண்டு
  • 1/4 கப் புதிய மின்ட் இலைகள்
  • உப்பு தேவையான அளவுக்கு
  • மிளகு தூள் ருசிக்காக
  • 3 தேக்கரண்டி தேன்

செய்முறை:

தர்பூசணி பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கி, வெட்டி வைத்துக்கொள்ளவும்.

தர்பூசணி பழத் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போடவும்.

இஞ்சி தோல் நீக்கி, இடித்து ஜாரில் போடவும்.

மின்ட் இலைகளை சேர்த்து, உப்பு, மிளகுத்தூள் மற்றும் தேன் கலக்கவும்.

அனைத்தையும் சேர்த்து கூழாகும் வரை அரைக்கவும், பின் வடிகட்டி வழியாக ஊற்றி வைக்கவும்.

பின் குவளைகளில் ஊற்றி பரிமாறலாம்.