இதயத்தை பலப்படுத்தும் இஞ்சி!
இஞ்சியின் வரலாற்று செய்திகளோடு பல்வேறு மருத்துவ பலன்களையும்கொண்ட முதல்பதிவின் தொடர்ச்சியாக, சர்க்கரை வியாதி மற்றும் இதய நோய்கள் போன்ற முக்கிய நோய்களுக்கு இஞ்சி வழங்கும் பலன்கள் குறித்து இந்த இரண்டாம் பகுதியில் காணலாம்!
இஞ்சி 10 மருத்துவ பலன்கள்! - பாகம் 1
பாகம் 2 :
#6. நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்ற வியாதியில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலினின் சுரப்பை அதிகரிக்கும் குணம் உள்ளது.
இஞ்சியில் சர்க்கரை நோயை தடுக்க மட்டுமல்லாமல் அதை குணப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சியில், 2ம் தர சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் கலக்கும் க்ளைசெமிக்கை(Glycemic) சமநிலைப்படுத்தும் குணம் உள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ‘ப்லான்டா மெடிக்கா’ என்ற பத்திரிக்கையில் வெளியான இந்த ஆய்வின்படி இஞ்சிச் சாற்றினால் இன்சுலினின் உதவியில்லாமலே, தசை அணுக்கள் க்ளுக்கோசை உறியக்கூடிய தன்மையை பெறுகிறது என்றும் இத்தன்மை இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்றும் வெளியிட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 30 நாட்கள் காய வைத்த இஞ்சியைப் பொடியை 3 கிராம் அளவு உட்கொண்டால், ரத்தத்தில் க்ளுகோசின் அளவு, ட்ரைக்ளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் கணிசமாக கட்டுப்படுத்தலாம் என்று மற்றொரு மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.
சுருக்காமாகச் சொன்னால் கணைய நீரை இரத்தத்தில் விடுத்து, கார்போஹைட்ரேட்டுகளை ஜீரணித்து வளர்ச்சிதை மாற்றங்களை சரிவர நடத்தி, கொழுப்புச் சத்தை உபயோகிக்க இஞ்சி உதவுகிறது. இஞ்சி க்ளுகோசை சிறிது சிறிதாக பிரித்து, ரத்தத்தில் கலக்க விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாகாமல் பாதுகாக்கிறது.
இஞ்சிக்கு சர்க்கரை வியாதியை தடுக்கும் குணமும் இருப்பதாக மேலும் பல ஆய்வுகளும் கூறுகின்றன. சர்க்கரை வியாதி உள்ளவரின் ஈரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளையும் பாதுகாக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. கண்ணில் உண்டாகும் புரை என்ற சர்க்கரை நோயால் உண்டாகும் ஒரு வித வியாதியையும் வராமல் தடுக்கும் குணம் இஞ்சிக்கு உண்டு.
#7. இதயத்தை குணப்படுத்தும் - பல விதமான இதய சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை குணமாக்கும்.
அதிகப்படியான பொட்டாசியம், மாங்கனீசு, குரோமியம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிமத் தன்மைகளை கொண்ட இஞ்சி, அழற்ச்சிகளை நீக்கும் குணம் மிகுந்தது. பல காலமாக இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மை மிக்கது இஞ்சி.
Subscribe
சீன மருத்துவத்தில், இதயத்தை பலப்படுத்தும் மருத்துவ குணம் இஞ்சிக்கு உண்டு என்பதால் இஞ்சியிலிருந்து எடுத்த ஒருவித எண்ணையை இருதய நோய்களை குணப்படுத்த உபயோகிக்கின்றனர்.
இந்த மூலிகையில் உள்ள ஒரு வித கணிமம் கொழுப்புத்தன்மையை குறைக்க, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, ரத்த நாளத்தில் உள்ள அடைப்புகளை நீக்க என்று பல இருதய நோய்களை குறைக்கும் மற்றும் நீக்கும் தன்மை கொண்டுள்ளதாக நவீன ஆய்வுகளும் கூறுகின்றன.
#8. மூச்சு சீரின்மையை குணமாக்கும் தன்மை - ஆஸ்துமா போன்ற வியாதிகள் குணமடையும்.
இஞ்சியிலுள்ள தன்மைகள் மூச்சு சீரின்மையை சரி செய்யக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காச நோய் உள்ளவர்களுக்கு உகந்த மருந்து என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. நுரையீரலில் ப்ராண வாயுவை எடுத்துச் செல்லும் தசைகள் அழற்சியுற்று, எதிர்ப்பு சக்தியை இழந்து, மூச்சு விட சிரமமாக இருக்கும் நிலையை காச நோய் என்று சொல்லுவார்கள்.
சமீபத்தில் அமெரிக்க பத்திரிக்கையான ரெஸ்பிரேட்டரி ஸெல் அண்ட் மாலிகுலார் பையாலாஜியில் வெளியான ஒரு விஷயம் இஞ்சி இரண்டு விதமாக காச நோயை குணப்படுத்துகிறது என்று விளக்கியது. முதலில் ஜவ்வு போல இருக்கும் காற்றோட்டமான தசைகளில் அடைத்து இருக்கும் என்சைம்களை நீக்கவும், இரண்டாவதாக காற்று வழிகளை தளர்த்தும் மற்ற என்சைம்களை தூண்டிவிடவும் செய்கிறது.
ஊக்கமருந்திலோ அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகளிலோ இருக்கும் சில குணங்கள் இஞ்சியில் உள்ளது. அதாவது ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோய்-எதிர்ப்பு சக்தி மற்றும் வலி நிவாரண குணங்கள்தான் இஞ்சியை ஒரு இயற்கை மருந்தாக பார்க்கத் தூண்டுகிறது.
#9. தடுப்பாற்றல் - இருமல் மற்றும் ஜலதோஷத்தை தடுக்கும்.
ஜலதோஷம் மற்றும் ஜுரத்திலிருந்து தடுக்கும் அற்புதமான ஆற்றல் கொண்டது இஞ்சி. மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுக் குழாய் அழற்சிகளை ஆற்றும் குணம் கொண்ட இஞ்சி, இருமல், தொண்டை அழற்சி மற்றும் ப்ரொங்கைடிஸ் போன்ற உபாதைகளை குணமாக்கும்.
ஜலதோஷத்தினால் உண்டாகும் சைனஸ் போன்ற அடைப்புகளிலிருந்தும், நுண்ணிய பல ரத்த நாளங்களையும் தூய்மைப்படுத்துகிறது இஞ்சி. இஞ்சிச் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறும் தேனும் கலந்து குடிப்பதால் ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்ற அன்றாடம் வரும் நோய்களிருந்து விடுதலை என்று கீழை மற்றும் மேலை நாடுகளில் காலம் காலமாக வழங்கப்படுகிறது.
இஞ்சியில் தெர்மோஜெனிக் எனும் வெப்ப ஆக்க குணம் இருப்பதால், உடலை சூடாக வைத்திருப்பதில் இது உதவுகிறது. முக்கியமாக வேர்வை நாளங்களை திறந்து வேர்வையை வெளியேற்றுவதனால், இது உடலை டி-டாக்ஸிஃபை (detoxify) செய்து, ஜலதோஷத்துக்குண்டான குணக்கேடுகளை நீக்கி, பாக்டீரியா மற்றும் பல தொற்று நோய்களிலிருந்து விடுதலை அளிக்கிறது.
சமீபத்திய ஜெர்மானிய ஆய்வு ஒன்று வேர்வையில் வீரியமான கிருமிநாசினி ஒன்று இருப்பதாகவும் அதை ‘டெர்மிஸைடின்’ என்றும் பெயரிட்டனர். இது வேர்வை சுரப்பிகளில் உருவாகிறது என்றும், வேர்வை மூலமாக தோல் வழியே வெளியேற்றப்பட்டு, ஈ-கோலி மற்றும் ‘கேண்டிடா அல்பிகன்ஸ்’ போன்ற கிருமிகளிலிருந்து காப்பாற்றுகிறது என்று வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் விட, இஞ்சியில் உள்ள இந்த தன்மைகள் அடர்ந்த நிலையில் இருப்பதால், உடல் அதை இலகுவாக உறிஞ்சிக் கொள்ளுகிற படியால், அதை அதிக அளவில் எடுத்துக் கொள்ள தேவையில்லை.
#10. வீரியமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் - டிஎன்ஏ சிதைவை தாமதமாக்கும்
ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் என்பது சில அடிப்படை மூலக்கூறுகளிலிருந்து - அதாவது மூப்பு மற்றும் பல வயதினால் ஏற்படும் சிதைவுகள், புற்று நோய், இருதய நோய், சர்க்கரை வியாதி, மூட்டு வியாதி, அல்ஜெமெர் - போன்ற வியாதிகளிலிருந்து காப்பதற்கு மிக முக்கியமான ஒரு கனிமம்.
எல்லாவிதமான இயற்கை திரவியங்களுக்குள்ளும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது என்றாலும், இஞ்சியில் கூடுதலாக அதன் வீரியம் உள்ளதாகத் தெரிகிறது. 25 வெவ்வேறு வகையான ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் இஞ்சியில் உள்ளது. இதனாலேயே பல மூலக் கூறுகளிலிருந்தும், பல உடல் உறுப்புகளை இஞ்சி பாதுகாக்கிறது.
(இஞ்சியின் பலன்கள் அடுத்த பதிவிலும்..)