நம் கலாச்சாரத்தில் அனைத்து மலைகளையும் சக்தி ரூபங்களாக வணங்கிவந்தாலும், கைலாய மலைக்கென்று தனிச்சிறப்பு உண்டு. அதேபோன்ற சிறப்பு தென்கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைக்கும் உண்டு. இந்த வெள்ளியங்கிரி மலையைப் பற்றியும், வெள்ளியங்கிரி யாத்திரை செல்வதால் விளையும் நன்மைகளையும் இந்த வீடியோவில் விவரிக்கிறார் சத்குரு.

யாத்திரை பற்றி சத்குரு பேசும்போது

“பல விஷயங்களுக்காக மக்கள் பயணம் செய்கிறார்கள். சிலர் தங்கள் தினசரி அலுவல்களில் இருந்தும், சிலர் தங்கள் குடும்பத்தின் தொந்தரவுகளில் இருந்து சிறிது விடுபட வேண்டும் என்றும் பயணம் செய்கிறார்கள். ஆனால் ஒரு புனித யாத்திரையின் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது. இது எதையோ அடையவேண்டும் என்றோ, எதையோ அறியவேண்டும் என்றோ, எதையோ பெறவேண்டும் என்றோ மேற்கொள்ளப்படுவது அல்ல. யாத்திரை என்பது உங்களைப் பணிவுள்ளவராக மாற்றும் ஒரு செயல்முறை. நீங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தால் ஒரு கொள்ளைக்காரன் போலத்தான் வாழ்க்கை நடத்துவீர்கள். அதேசமயம், ‘நான் எவ்வளவு சிறியவன்’ என்று கவனித்து, நன்றியுணர்வுடன், வாழ்வின் ஒவ்வொரு அடியையும் மென்மையாக எடுத்து வைத்து நடந்தால், உங்கள் வாழ்வே ஒரு புனித யாத்திரையாக இருக்கும்"

ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் சத்குரு வழங்கும் சக்திவாய்ந்த விரதமான 'சிவாங்கா' விரதம் மேற்கொண்டு, விரதத்தின் கடைசிநாளான 42வது நாளில் (அமாவாசையன்று) தன்னார்வத் தொண்டர்களின் வழிகாட்டுதலுடன் வெள்ளியங்கிரி மலையேறி சிவனருளைப் பெறலாம்!

இந்த ஆண்டு, மஹாசிவராத்திரி தினத்தன்று (பிப்ரவரி 17, 2015) வெள்ளியங்கிரி மலையேறி சிவனருள் பெரும் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்கான சிவாங்கா விரத தீட்சை ஜனவரி 4 ஆம் தேதியன்று உங்கள் ஊரிலேயே வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு:

மின்னஞ்சல்: info@shivanga.org / தொ.பே: +91-8300015111.
சென்னை: 8939954562
திருச்சி: 9976889077
மதுரை: 9442608738
ஈரோடு: 9865883311

குறிப்பு: சென்னை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள மையங்களைச் சேர்ந்தவர்கள் பிப்ரவரி 16ஆம் தேதியன்றும் திருச்சி மற்றும் கோவையைச் சுற்றியுள்ள மையங்களைச் சேர்ந்தவர்கள் பிப்ரவரி 17ஆம் தேதியன்றும் இரு குழுக்களாக வெள்ளியங்கிரி மலையேற்றத்தை மேற்கொள்வர்.