வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்?

அற்புதமான பல உயிர்கள், கடவுளும் பொறாமை கொள்ளக்கூடிய வகையில் வாழ்ந்தவர்கள், அத்தனை மாண்புடன் அருளுடன் இங்கு வாழ்ந்தவர்கள் இம்மலைகளில் தன் பாதங்களைப் பதித்திருக்கின்றனர். தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் இம்மலைகள் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் செயல் புரிந்திருக்கின்றனர்.
வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்?, Velliangiri malai yen yerugirom?
 

சத்குரு:

ஒரு மலை புனிதமடையுமா என்ன? நான் வெள்ளியங்கிரி மலைகளை புனிதம் என அழைக்கக் காரணம், அதில் ஏறுவது சிரமம் என்பதால் அல்ல; நான் உட்பட பல பேருக்கு இம்மலை மிகப் புனிதமானதாய் இருக்கக் காரணம், இங்கு நிலவும் சூழல்தான்!

அற்புதமான பல உயிர்கள், கடவுளும் பொறாமை கொள்ளக்கூடிய வகையில் வாழ்ந்தவர்கள், அத்தனை மாண்புடன் அருளுடன் இங்கு வாழ்ந்தவர்கள் இம்மலைகளில் தன் பாதங்களைப் பதித்திருக்கின்றனர். தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் இம்மலைகள் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் செயல் புரிந்திருக்கின்றனர்.

நாட்டின் தென்கோடி முனையிலே ‘சிவனையே மணப்பேன்’ என விடாப்பிடியாய் நின்ற ஒரு பெண், தன்னை ஈசனுக்கே உரியவளாய் ஆக்கிக்கொள்ள ஆயத்தப்படுத்திக் கொண்ட பெண், ஈசன் இந்நாளுக்குள் தன்னை அடைய வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்ட பெண், “ஈசன் வராது போனால், நான் உயிர் துறப்பேன்” என சூளுரைத்திருந்தாள். இதனை அறிந்த சிவன் அவளைத் தேடி தென்னிந்தியா நோக்கி வர, இடையில் சதி செய்யப்பட்டு, சிலதூரத் தொலைவில் அவளை அடைய முடியாமல் போனார். அந்தப் பெண்ணும் நின்றபடியே உயிர் துறந்தாள். இன்றுகூட அவள் கன்னியாகுமரியாய் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இதுவே, இந்தியாவின் தென்கோடியில் கன்னிகோவிலாய் உயர்ந்து நிற்கிறது.

தன்னால் குறித்த நேரத்தில் சென்றடைய இயலவில்லையே என மனஞ்சோர்ந்த சிவனுக்கு, தன் விசனத்தைக் கரைக்க ஓர் இடம் தேவைப்பட்டது. வெள்ளியங்கிரி மலை மீது ஏறியவன், அதன் உச்சியிலே வந்தமர்ந்தான். இங்கு அவன் ஆனந்தத்தில் அமரவில்லை, தியானத்தில் அமரவில்லை, ஒருவித கோபத்திலும் மனச்சோர்விலும் வந்தமர்ந்தான். இங்கு கணிசமான நேரத்தை அவன் செலவிட்டான். எங்கெல்லாம் சிவன் அமர்ந்தானோ அவ்விடத்தை எல்லாம் மக்கள் கைலாயம் என அழைத்தனர். அதனாலேயே, வெள்ளியங்கிரியை மக்கள் தென் கைலாயம் என அழைக்கத் துவங்கினர். இந்த மலையடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்திருப்பது நமது பாக்கியம்.

shivanga-sadhana-30-970x570

இதில் ஏழு மலைகள் உள்ளதாய் சொல்வார்கள். மலையேற்றம் செய்யும்போது, ஏழு ஏற்ற - இறக்கங்கள் இருப்பதனால், மலையேற்றம் செய்பவருக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஏழுமலை என்றார்கள். மலையில் சூறைக்காற்று விடாமல் வீசுவதால் இங்கு புற்களைத் தவிர வேறொன்றும் வளர்வதில்லை. பிரம்மாண்டமான மூன்று பாறைகள் கூடி ஒரு லிங்கத்திற்கு ஆலயமாய் மாறி நிற்கிறது. மிகச் சக்திவாய்ந்த ஓரிடம் அது.

அற்புதமான பல உயிர்கள், கடவுளும் பொறாமை கொள்ளக்கூடிய வகையில் வாழ்ந்தவர்கள், அத்தனை மாண்புடன் அருளுடன் இங்கு வாழ்ந்தவர்கள் இம்மலைகளில் தன் பாதங்களைப் பதித்திருக்கின்றனர். தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் இம்மலைகள் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் செயல் புரிந்திருக்கின்றனர். அவர்களது ஞானம் தொலைந்து போகாமல் இருக்குமே! இந்த மலையில் என் குரு தனது பாதங்களைப் பதித்திருக்கிறார். தன் உடலினையும் நீப்பதற்கு இம்மலைகளையே தேர்வு செய்தார். அதனால், எனக்கும் இங்குள்ள பிறருக்கும், இது வெறும் மலையல்ல, ஆலயம். நிறைய உன்னதங்களை உள்ளடக்கியதாக இந்த மலை உள்ளது. தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்யக்கூடிய வழிமுறை எனக்கு இங்கிருந்து நிரம்பக் கிடைத்தது.

 

வெள்ளியங்கிரி யாத்திரை வருகிறீர்களா?

புனிதம் வாய்ந்த வெள்ளியங்கிரி மலைக்கு சிவாங்கா விரதமிருந்து யாத்திரை செல்லும் வாய்ப்பு ஆண் சாதகர்களுக்கு உண்டு. 42 நாட்கள் சிவாங்கா விரதமிருந்து, கடைசி நாள் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் யாத்திரை நிறைவுறும்.

விபரங்களுக்கு:
தொலைபேசி: 83000 15111
இ-மெயில்: info@Shivanga.org

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1