சத்குரு சந்நிதி சங்காவில் அங்கமாவதன் மூலம் ஒருவர் தங்கள் வீட்டை கோவிலாக எப்படி மாற்ற முடியும் என்பது பற்றி சத்குரு கூறுகிறார். சத்குரு சந்நிதி என்பது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு உருவமாகும். இது ஒருவரின் வீட்டை உள்நிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த இடமாக மாற்றுகிறது. அருள் அதிர்வுகளை பிரதிபலிக்கும் இது, ஓர் அருட்சூழலை உருவாக்குகிறது. ஒருவரின் வீட்டிற்குள் சந்நிதியைப் பிரதிஷ்டை செய்வதென்பது, ஆன்மீகப் பாதையில் ஒருவரின் முன்னேற்றத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட முறையில் சந்நிதி பராமரிக்கப்பட்டால், அதன் எல்லைக்குள் வரும் அனைவரின் உள்நிலை மற்றும் வெளிப்புற நல்வாழ்வில், ஓர் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆன்மீக சாத்தியத்தை சத்குரு சந்நிதி வழங்குகிறது.
video
May 7, 2024
Subscribe