மிகப்பெரிய உயிர்
இந்த வார ஸ்பாட்டில், சத்குரு தான் ஓய்வு பெறுவது பற்றிய எண்ணங்கள் குறித்தும், ஆனால் அந்த எண்ணங்களை அவருடைய இதயம் ஏன் ஆள்கிறது குறித்தும் வெளிப்படுத்துகிறார்; மேலும் காகசஸ் (Caucasus) பகுதியில் ஒரு சப்தரிஷியின் கால்தடங்களை தொடர்கிறார், இன்னும் பல. இலையுதிர் கால கும்பர்லேண்டிலிருந்து (Cumberland) வெப்பமான கலிஃபோர்னியா வரை, வளர்ந்து வரும் அசர்பைஜானிலிருந்து (Azerbaijan) சண்டைகள் நிறைந்த உக்ரைன் வரை, சத்குருவின் சமீபத்திய நிகழ்ச்சிகள் மற்றும் பயணங்களின் புகைப்படங்களையும் பார்க்கலாம்.
அறையின் கொள்ளளவிற்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டு, காத்திருப்பவர் பட்டியலில் சில ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்க, அமெரிக்க ஈஷா மையத்தில் கர்ஜித்த பாவ-ஸ்பந்தனா நிகழ்விற்குப் பிறகு, கற்பனை செய்தும் பாராத அளவில் மக்களின் உள்நிலையில் மாற்றம் கொண்டு வரும் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகளை நிகழ்த்துவதிலிருந்து எப்போது ஓய்வுபெறப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கடந்த இரண்டு வருடங்களாக இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்கையில் இதுதான் என் கடைசி நிகழ்ச்சி என்ற எண்ணத்துடன் சென்று கொண்டிருந்தேன். ஆனால் பங்கேற்பாளர்களுக்குள் நிகழும் நம்ப முடியாத மாற்றத்தையும் தங்களுடைய திடமான கட்டமைப்புகளைக் கரைத்து, உருகி ஒரு மிகப்பெரிய உயிராக உருவெடுக்கும் சக்தியையும் காணும்போது, என்னுடைய இதயம் என்னுடைய எண்ணங்களை ஆள்கிறது.
வீழ்ச்சி
இலையின் வீழ்ச்சி
இந்த மண்ணிற்கு வளம்
இதுவே உயிர் கொடுக்கும் ஊட்டம்-
புழு, பூச்சி, மரம், பறவை, விலங்குகளுக்கு
மனிதர்களே, எப்போது கற்றுக்கொள்வீர்கள்
உயிர் செழிப்பது செய்வதெல்லாம் செய்து
விட்டு விடுவதால் அல்ல ஆனால்
Subscribe
உயிரை அதன்போக்கிலே விடுவதால்.
வீழ்பவர்களே அவர் காலத்தில் எழுபவர்கள்.
அழகான கும்பர்லேண்ட் (Cumberland) பீடபூமியின் தாவரங்கள் குளிர்காலத்திற்கு தயாராவதற்கு முன் தன்னுடைய இறுதி கிளர்ச்சியாக வண்ணமயமான இலையுதிர் காலத்தின் கண்கவர் காட்சியோடு இருக்க, 3500 பங்கேற்பாளர்களுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய ஷாம்பவி தீட்சைக்காக சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு இப்போது பயணிக்க வேண்டும். உண்மையைத் தேடும் அற்புதமானவர்களுடன் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இனிமையான மக்கள், அவர்களுடைய ஆர்வம், கவனத்தின் அளவு, ஒழுக்கம் - ஒரு பெரிய குழுவிற்கு இது மிகவும் தனிச்சிறப்புடையது. ஷாம்பவியின் மூழ்கடிக்கும் தன்மையே இதன் மூலம். பல நூற்றாண்டுகளாக இந்த மிகப்பெரிய வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருந்த ஆதியோகி மற்றும் அனைத்து யோகிகளுக்கும், முனிவர்களுக்கும் நன்றிகள். இந்த எளிமையான ஆனால் சக்திவாய்ந்த செயல்முறை தலைமைத்துவத்தை அடைந்து உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்தினால் இதுவே மனிதகுலத்தின் விதியையே மாற்றவல்லது. நாமும் இதில் இணைந்திருப்போம்…
தற்போது அசர்பைஜானிலுள்ள பாக்குவிற்கு (Baku, Azerbaijan), விமானத்தில் நான், அங்கிருந்து உக்ரைனிலுள்ள கீவ் (Kiev, Ukraine) நகரலிருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் அங்கிருந்து மறுபடியும் டில்லிக்கு, அனைத்தும் ஒரே வாரத்தில். பாக்கு (Baku) மற்றும் அந்த முழு பகுதியுமே ஒரு சப்தரிஷியின் கால்தடங்களைக் கொண்டுள்ளது. அவருடைய தாக்கம் இன்னும் அந்த பிரதேசத்தில் இருக்கிறது. பஞ்சபூதங்களின் வழிபாடு இதில் முக்கியமான அம்சம் வகிக்கிறது; அந்த நகரத்தின் ஜ்வாலாஜி (Jwalaji) கோவில் அனைவரையும் கவரும் ஒன்றாக அமைந்துள்ளது. பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய ஆன்மீகத் தாக்கம் அதன் முழு வீரியத்தில் இருந்தது. ஆதிக்கம் மிக்க வெறித்தனமான மத நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்பு அனைத்தையும் அணைத்துக் கொள்ளும் ஆன்மீக செயல்முறையின் கனிவான வாசனையை அழித்துவிட்டது. 20ம் நூற்றாண்டின் சோவியத் விரிவாக்கம் இந்த மதவாதத்தை ஒரு வகையில் சரிசெய்தது. ஆனால் மதங்கள் கொண்டுவந்த கலாச்சார மாற்றங்கள் அப்படியே உள்ளது.
ஜ்வாலாஜிக்கு (Jwalaji) கண்டிப்பாக செல்லவேண்டும். இந்திய ஆன்மீகம் மற்றும் யோகத்தின் கால்தடம் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தப் புனித இடத்தில் உயிர்ப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மனித இறப்பை விழிப்புணர்வுடன் கையாளும் முக்கியத்துவத்தை இதற்கு மேலும் முன்னிலைப்படுத்திக் கூற முடியாது. சம்ஸ்கிருத உச்சாடனைகள், அணையாது எரியும் நெருப்பின் அடையாளத்துடன் தேவனகிரி கல்வெட்டெழுத்துகளும் பாரதத்தின் மென்மையான தாக்கத்தை வெளிப்படுத்தும் மிக முக்கியத்துவமான (மைல்கல்) இடமாக இதனை ஆக்குகிறது. மண்ணெண்ணெய் வியாபாரத்தால் பாக்கு (Baku) நகரத்தின் பொருளாதாரம் வெற்றியின் பாதையில் நடையிடுகிறது. இப்போதுள்ள இந்த நகரத்தின் நிர்வாகம் மிகுந்த அழகுணர்வுடன் பல அற்புதமான கட்டமைப்புகளை அமைத்து வருவது இந்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது. பாக்குவில் (Baku) மக்கள் நிறைந்த அரங்கம்; மதிப்புமிக்க அழகான ஹைடர் அலிவ் (Heydar Aliyev) மையம் உலகத்திலேயே மிகச் சிறந்த அரங்களின் ஒன்றாகத் திகழ்கிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இந்த சிறிய நாடு அதன் உள்கட்டமைப்புகளில் போற்றத்தக்க பணிகளைச் செய்து வருகிறது; நல்ல தரம்வாய்ந்த பெரிய கோல்ஃப் ஸ்தாபனமும் இங்குள்ளது.
உக்ரைனினுள்ள கீவ் (Kiev, Ukraine) என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன். ஒன்றாம் மற்றும் இரண்டாம் உலகப் போர், பொதுவுடைமைப் புரட்சி மற்றும் சோவியத் ஐக்கியத்தின் பிரிவு ஆகியவற்றினை தாங்கிய நிலம் இது. உக்ரைன் தன்னார்வத் தொண்டர்கள் பல செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர்; நிகழ்ச்சிகள் அனைத்தும் முழுதாக நிரம்பிவிட்டது. அரங்கம் நிறைந்த உயிர்பான நிகழ்ச்சி; மாரத்தான் வேகத்தில் புத்தக கையொப்பமிடும் நிகழ்வு. உக்ரைனில் (Ukraine) செல்வாக்கு படைத்தவர்களுடன் சில சந்திப்புகள், அதன்பிறகு ஆசியா’விற்கான "நிலைத்தன்மை" உச்சிமாநாடு (தி எகொனாமிஸ்ட் பத்திரிக்கை - Sustainability Summit Asia, The Economist magazine) சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய ஊர்களுக்கு பயணம். கீவ்’ல் (Kiev) வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் இருக்க, சிங்கப்பூர் சூடான ஆசியாவிற்கான வருகையாக அமையும்.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், உலக அமைதியின் நோக்கங்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உலக அமைதியின் கலாச்சாரம் இன்னும் வரவில்லை. தனிநபரின் மனங்களை அமைதியான சாத்தியமாக மாற்றம் கொண்டுவரும் வரை உலக அமைதி வெறும் கருத்தாகவே இருக்கும். நாம் இதனை நிகழச் செய்வோம்.