வாழ்வெனும் பிரம்மாண்டத்தின் அர்த்தம்...
என் வாழ்வின் அர்த்தம் இதுதான் எனச் சிலர் சொல்லி பலரும் பலவிதமாக தங்கள் வாழ்வை நிகழ்த்திக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்! இதெல்லாம் வெறும் மனதின் விளையாட்டுக்களா...? வாழ்வின் அர்த்தம் தேடும் பலருக்கும் சத்குருவின் பதில் உண்மையை உணர்த்துகின்றன!
சத்குரு:
வாழ்வெனும் பிரம்மாண்டத்திற்கு அர்த்தம் எதுவும் இல்லை. மனிதனின் மனத்தோற்றத்தில்தான் அர்த்தங்கள் வாழ்கின்றன. உதித்தெழும் சூரியன், மென்காற்றின் அரவணைப்பு, நீரின் குளுமை, நட்சத்திரங்களின் மினுமினுப்பு, உங்கள் இதயத்துடிப்பு என எவற்றிற்கும் அர்த்தமில்லை. அனைத்திற்கும் உங்கள் மனமே அர்த்தம் கற்பித்துக் கொள்கிறது. நாம் உயிர் என அழைக்கும் அந்த உயிர்ப்பான ஒன்றினால் ஒருவர் தொடப்பட்டிருந்தால், ஒருவர் முழுக்க முழுக்க அர்த்தமில்லாத ஒரு வாழ்வினை மிக சந்தோஷமாக உணரலாம். வாழ்க்கை வழங்கியுள்ள தாராள கொடைக்கு திறந்தவராய் இருக்கலாம்.
Subscribe