"பிறந்ததிலிருந்து அடிக்கடி உடைகளை மாற்றினீர்கள். வீடுகளை மாற்றினீர்கள். உணவை மாற்றினீர்கள்... ஆனால்எப்போதும் மாற்ற முடியாமல் உங்களோடு இறுதிவரை வரப்போவது உங்கள் உடல்தான். அதை கவனத்துடன் பராமரித்தால்தான்உங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள அது ஒத்துழைப்புத் தரும்.

அமைதியும், ஆனந்தமும் கடைத்தெருவிலும் கிடைக்காது, காட்டிலும் கிடைக்காது. அது உங்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது.

அடுத்தது உங்கள் மனம். நீங்கள் சொன்னபடியெல்லாம் கேட்காமல்அதன் போக்கிற்குமாறான சிந்தனைகளை வளர்க்கிறது. உங்கள் கனவுகள் நிறைவேறஉங்கள் மனமும் உறுதியுடன் ஒத்துழைப்புத் தர வேண்டும்.

உங்கள் மனமும்உடலும் நீங்கள் விரும்பியபடி செயலாற்ற வேண்டுமானால்அவற்றை உங்கள் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி வசப்படுத்திக் கொள்ளத்தான் யோகா".

அமைதியும்ஆனந்தமும் கடைத்தெருவிலும் கிடைக்காதுகாட்டிலும் கிடைக்காது. அது உங்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.