தமிழ் புத்தாண்டு... சத்குரு வாழ்த்து!
சித்திரை முதலாம் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடும் நம் கலாச்சாரத்தின் பின்னணி குறித்து கூறி, தமிழ் புத்தாண்டை துவங்க நாம் கவனிக்கவேண்டிய சிறு சிறு விஷயங்களையும் நினைவூட்டுகிறார் சத்குரு!
இந்த பூமியில் நடப்பவற்றிற்கும் நம் மனதிலும் உடலிலும் நடப்பவற்றிற்கும் தொடர்பு உள்ளது. வசந்தகாலம் பிறக்கையில் புது உயிர்களும் இங்கு ஏற்படுகின்றன. இதனால்தான், இந்தக் கலாச்சாரத்தில் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடாமல், சித்திரை 1ஆம் தேதியினை வருடப் பிறப்பாக கொண்டாடுகிறோம்.
நம் கலாச்சாரத்தை நாம் மீட்டெடுப்பது மிக அவசியம். சிறு சிறு விஷயங்களிலிருந்து துவங்குவோம். உங்கள் தொலைபேசி அழைக்கிறது, எடுக்கிறீர்கள், “ஹாய், ஹலோ” தவிர்த்து, “வணக்கம், நமஸ்காரம்” சொல்லலாம். கடவுளை எப்படி வணங்குவீர்களோ அதைப் போலவே உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மனிதர்களையும் வணங்கிடுங்கள்.
இந்தப் புத்தாண்டினை இவற்றுடன் நாம் துவங்குவோம்.
Subscribe