சீற்றம் கடந்து முன்னேற்றம் காண...!
எரிச்சலடையும் தகுதி உங்களுக்கு இருந்தால், கோபம், பொறாமை, விரோதம், குமுறியெழும் மனப்பான்மை இவையெல்லாம் அடுத்தடுத்த நிலைகளே. யாரோ ஒருவர் மீதோ, எதன் மீதோ சிறிதளவேனும் எரிச்சல் உண்டானால், அதனை சரிசெய்வது எப்படி என்று நீங்கள் பார்க்க வேண்டும்.

சத்குரு:
உங்கள் உடலமைப்பில் எதிர்மறையான உணர்வுகள் அங்கமாகிவிட்டால், அதனை வெளிப்படுத்த ஏதோவொரு காரணத்தை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள். அதன்மூலம், எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள் என்பது உங்கள் செயல்திறனை பொறுத்து மாறுபடும்.
எரிச்சலடையும் தகுதி உங்களுக்கு இருந்தால், கோபம், பொறாமை, விரோதம், குமுறியெழும் மனப்பான்மை இவையெல்லாம் அடுத்தடுத்த நிலைகளே. யாரோ ஒருவர் மீதோ, எதன் மீதோ சிறிதளவேனும் எரிச்சல் உண்டானால், அதனை சரிசெய்வது எப்படி என்று நீங்கள் பார்க்க வேண்டும்.
எரிச்சலில் வெடித்துச் சிதறும் வரை காத்திருக்க வேண்டாம். பிறரை ஒதுக்கி வைப்பதால் மட்டுமே சீற்றம் ஏற்படுகிறது.
நீங்கள் சீற்றத்தை கடந்த நிலையில் இருந்தால், நீங்கள் என்னுடைய ஒரு பகுதி ஆவீர்கள். சீற்றத்தை கடந்த நிலையில் இருந்தால், நீங்கள் கூலான ஒரு உயிர். நீங்கள் கூலான உயிராக இருக்கும்போது, உங்கள் இயல்பிலேயே சுகமான மனிதராய் நீங்கள் இருக்கும்போது, உங்களுக்குள் வஞ்சகம் இருக்காது. சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதைச் செய்வீர்கள். ஏனெனில், உங்களுக்குள் நீங்கள் சுகமான நிலையில் இருக்கிறீர்கள். பிறரிடமிருந்து சந்தோஷத்தை உறிஞ்சக்கூடிய நிலையில் நீங்கள் இல்லை. சீற்றத்தைக் கடந்த மனிதராய் நீங்கள் இருந்தால், இன்று மனித சமூகம் அடைந்துள்ள திறமைகளைப் பார்க்கும்போது, நீங்கள் ஒப்பற்ற சாத்தியமாய் இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் அப்படியொரு சாத்தியமாய் மாறவேண்டும் என்பதே என் ஆசியும் ஆசையும்!
Subscribe