சத்குருவின் அன்னையர் தின வாசகங்கள் (Mother’s Day Quotes in Tamil)

தாய்மையின் அழகு, தாயாகும் தகுதியில் இல்லை, இன்னொரு உயிரை தன்னுள் இணைத்துக்கொள்ள விருப்பமாக இருப்பதில் உள்ளது.
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
தாயாக இருப்பது இனப்பெருக்கத்தைப் பற்றியது அல்ல, நீங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறீர்கள். இது ஒரு அளப்பரிய பொறுப்பு.

Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்

உங்களை நீங்களே உண்மையாகவே அற்புதமான ஒருவராக மாற்றிக்கொண்டால், உங்கள் குழந்தைகள் உங்களை மதிப்பார்கள், நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். 
 Alt Text: Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
இவ்வுலகிற்கு உண்மையான பங்களிக்கும் விதமாக நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இனிவரும் தலைமுறை நம்மைவிட சிறந்ததாக இருக்க வேண்டும். 
Parenting Tips in Tamil
என் தாய், எனக்கு உகந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தார், அது இல்லாமல் நான் இன்று இருக்கும் விதமாக இருந்திருக்க மாட்டேன். தாய்மை என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயமல்ல, நிபந்தனைகளின்றி இணைத்துக்கொள்ளும்‌ நிலை. 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
உங்கள் குழந்தை நல்லபடியாக வளர நீங்கள் அதிபுத்திசாலியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் அவர்களிடம் அன்பாகவும் ஆனந்தமாகவும் நேர்மையாகவும் இருந்தால் போதும். 
அன்பு, ஆனந்தம், நேர்மை
உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு ஒரு மனித உடல் கொடுத்தார்கள். அதன்பிறகு அவர்களால் வளர்க்கப்பட வேண்டுமா அல்லது நீங்களாகவே வளர வேண்டுமா என்பது உங்கள் தேர்வாக இருக்கவேண்டும். 
குழந்தை வளர்ப்பு
குழந்தைகளைப் பெற்றால் குழந்தைகள் வளரும் காலம்தான் மிக இனிமையானது. அது நீங்கள் இனிமை பொங்க இருக்கவேண்டிய காலம். 
குழந்தை வளர்ப்பு
சமுதாயத்தில் நேர்மை தழைத்தோங்க, நேர்மையை நமக்குள்ளும் நம் குழந்தைகளுக்குள்ளும், நம் கல்விமுறைக்குள்ளும் நாம் பேணி வளர்க்கவேண்டும். 
நேர்மை, honesty
குழந்தைகள் நீங்கள் சொல்வதை கேட்கமாட்டார்கள், அவர்கள் நீங்கள் செய்வதை கவனிப்பார்கள். 
குழந்தை வளர்ப்பு
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒரு மகத்துவமான விஷயம், அவர்களை வெளியே இயற்கை சூழ்நிலைக்குள் அழைத்துச்செல்ல சிறிது நேரம் ஒதுக்குவதே. 
குழந்தை வளர்ப்பு
குழந்தைப்பருவம் என்பது கனவுலகில் உலாவும் பருவமில்லை. பெரியவர்கள் தேவையான சூழ்நிலையை உருவாக்கினால் மட்டுமே குழந்தைகளால் தங்கள் குழந்தைப் பருவத்தை இரசித்திடமுடியும். 
குழந்தை வளர்ப்பு
உங்கள் பிள்ளைகள் மீது நீங்கள் அதிகாரம் செய்யும்போது, அவர்களது நட்பை இழந்துவிடுகிறீர்கள். 
குழந்தை வளர்ப்பு
உங்கள் வாழ்க்கைக்குள் ஒரு குழந்தை வரும்போது, அது கற்பதற்கான நேரம், கற்றுக்கொடுப்பதற்கான நேரமல்ல. 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், முதலில் உங்களுக்குள் நேர்மையை நிலைநிறுத்த வேண்டும். உங்கள் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும். 
குழந்தை வளர்ப்பு, நேர்மை
உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், ஒரு அன்பான, ஆதரவான, உற்சாகமான சூழ்நிலையை உருவாக்குவது மட்டுமே. 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
அன்பு, பிரியம் மற்றும் மரியாதை, சம்பாதிக்கப்பட வேண்டும், எதிர்பார்க்கப்படக் கூடாது. குறிப்பாக பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவில் இது முக்கியமானது. 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
உங்களைக் காட்டிலும் ஒரு குழந்தை உயிருக்கு நெருக்கமாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கைக்குள் ஒரு குழந்தை வரும்போது, அது வாழ்க்கையை புதிதாய் கற்பதற்கான நேரம், உங்கள் வழிகளை கற்பிக்கும் நேரமல்ல. 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
பெற்றோர் தங்களது பீடத்திலிருந்து இறங்கிவந்து குழந்தைகளை சரிசமமானவர்களாக நடத்தவேண்டும். இது குழந்தைப்பருவத்தின் முற்பகுதியிலிருந்தே நிகழவேண்டும். 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
உங்கள் குழந்தை உண்மையாகவே மலரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் உங்களை நீங்களே அன்பான, ஆனந்தமான, அமைதியான மனிதராக மாற்றிக்கொள்ள வேண்டும். 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
நம் குழந்தைகள்தான் உலகின் எதிர்காலம். இது நாம் அவர்களிடமிருந்து எதைப் பெறமுடியும் என்பதைப் பற்றியது இல்லை, நாம் அவர்களை எப்படி வல்லமையாக்க முடியும் என்பதைப் பற்றியது. 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
நம் குழந்தைகளை நாம் விரும்பும் விதமாக மாற்ற முயல்வதை நிறுத்தி, அவர்களுக்கு உறுதுணையாக ஒரு அன்பான, ஆனந்தமான, புத்திசாலித்தனமான சூழ்நிலையை உருவாக்கத் துவங்கவேண்டும்.
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்
குழந்தைகளை நீங்கள் 'வளர்த்திட' வேண்டியதில்லை. அவர்கள் வளர்வதற்கான இடம், அன்பு மற்றும் உதவியை வழங்கினால் போதும். ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு தனித்துவமான சாத்தியத்திற்கான திறமை இருக்கிறது. 
Mother’s Day Quotes in Tamil, அன்னையர் தினம், அன்னையர் தின வாசகங்கள்

குறிப்பு:  அன்னையர் தினம் என்பது, நம் நன்றியுணர்வையும் வாழ்த்துக்களையும் நம் தாய்மார்களுக்கு மட்டுமல்லாமல், படைப்பின் ஒவ்வொரு அம்சத்திற்கும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் என்பதை சத்குரு விளக்குகிறார். ஏனெனில் நீங்கள் கவனமாகப் பார்த்தால், படைப்பில் எந்தவொரு அம்சமும் இல்லாமல் நம்மால் உயிர்வாழ முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.