“சத்குரு” என்பதன் அர்த்தம் என்ன?
“சத்குரு” என்ற வார்த்தை ஒரு பெயரல்ல! அது ஒரு தன்மை. சத்குரு என்றால் “எழுத்தறிவு அற்ற குரு”
சத்குரு: முறை சார்ந்த கல்வி மூலம் வந்தவரை வெவ்வேறு விதமாக குறிப்பிடலாம். ஒருவர் தன் உள் உணர்வு மூலம் உணர்ந்து வந்தால் அவரை சத்குரு என்று குறிப்பிடுவார்கள்.
சத்குரு என்பது பட்டமல்ல, அது ஒரு விவரிப்பு. சத்குரு என்றால் படிக்காத குரு. நான் ஏறக்குறைய நூறு சதம் ஆன்மீக கல்வியை பயின்றவனல்ல. நான் ஆன்மீகப் புத்தகங்கள் படித்ததில்லை, வேதங்கள் படிக்கவில்லை, பகவத் கீதையையும் படிக்க விழையவில்லை. நான் முழுக்க முழுக்க என் உள்-உணர்விலிருந்து வந்தவன். எனக்குத் தெரிந்ததெல்லாம் இந்த உயிர் ஒன்றே – இதன் ஆதியிலிருந்து அந்தம் வரை.
இந்த உயிரை நன்றாகத் தெரிந்து கொண்டால் இந்த அகிலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லாவற்றையும் புரிந்து கொள்ளலாம், ஏனென்றால் இந்த உயிரைப் போலத்தான் இந்த பிரபஞ்சமும் படைக்கப் பட்டிருக்கிறது. படைப்பின் ரகசியத்தை பிரபஞ்சத்தில் தேடிக் கண்டு பிடிக்கத் தேவையில்லை. சிறிது உள்நோக்கிப் பார்த்தால் இந்த உயிரின் அ முதல் ஃ வரையிலான பயணத்தை, எல்லா வகையிலும் புரிந்து கொள்ள முடியும்.
சத்குரு என்பது பட்டமல்ல, அது ஒரு விவரிப்பு. "சத்குரு" என்றால் படிக்காத குரு. நான் ஏறக் குறைய நூறு சதம் ஆன்மீக கல்வியை பயின்றவனல்ல.
நான் உயிர்த்தன்மையை கொண்டவன் – சொர்க்கம் சார்ந்தவனல்ல. சொர்க்கம் பிரபலமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமல்ல ஆனால் ஒரு குருவின் முழு முயற்சியும் ஒருவரின் தேடுதலை தீவிரப்படுத்துவதுதான் என நான் நம்புகிறேன், பதிலை கொடுப்பவர் அல்ல. ஒரு மனிதன் ‘எனக்குத் தெரியவில்லை’ என்று புரிந்து கொண்டால் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. ஆனால் ‘எனக்குத் தெரியும்’ என்று தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி நம்பினால், அது சீர்குலைவு. நான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தால், உங்களால் ஆனதெல்லாம் என்னை நம்பலாம் அல்லது நம்பாமல் இருக்கலாம். நம்பினால் நீங்கள் எந்த விதத்திலும் உண்மையின் அருகில் செல்லவில்லை, நம்பா விட்டாலும் எந்த விதத்திலும் அது உதவாது. நான் சொன்னதை உங்களால் ஒரு நல்ல கதையாக சொல்ல, அதைக் கேட்டவர் வேறு ஒருவருக்கு அந்த கதையை சொல்ல, இப்படி ஒருவரிலிருந்து பலருக்கு உருச்சிதைந்து போன கதை போய் சேரும். இதுதான் பல காலமாக நடந்து கொண்டு, கதைகளைக் கேட்டு மக்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால், உங்களுக்கு ஒழுங்குமுறையான படிப்பறிவு வேண்டுமென்றால் இந்த இடம் அதற்கு தகுந்தது அல்ல. ஆனால் உங்கள் இயற்கைத் தன்மையை உணர வேண்டுமென்றால், அதற்குண்டான நுட்பங்களை இங்கே பெறலாம்.