புரிந்ததும் புரியாததும்
“மக்களில் இருவகையானவர்கள் தான் உள்ளனர்: ஞானிகள் மற்றும் முட்டாள்கள்” என சத்குரு சொல்கிறார். இப்படிச் சொல்வது சற்று எதிர்மறையாக இருக்கலாம், ஆனால் அபத்தங்களை திருத்திக்கொள்ளும் வாய்ப்புள்ளது! எனவே இந்த புத்தகம் ஆன்மீக சாதகர்கள் கையில் இருக்க வேண்டியது!
புரிந்ததும் புரியாததும்
நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆன்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம், தர்க்கம், ஆழ்மனம், பகுத்தறியும் மனம், உள்ளுணர்வு, யோகா, தியானம், ஒருமை இருமை, பற்று, ஆளுமை, முற்பிறவி, அமாவாசை பௌர்ணமி, பிரபஞ்சம் என்றெல்லாம் அனேக சொற்கள் உங்கள் முன் வந்து விழுகின்றன. இந்த வார்த்தைகளும் அதற்கான விளக்கங்களும் எப்போதும் புரிந்தும் புரியாததுமாகத்தான் நமக்கு இருந்திருக்கிறது. உண்மை என்பது ஒன்றுதான். ஆனால் அந்த உண்மையையும் எடுத்துச் சொல்லும் பாணி ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் கூட ஒரே பாடத்தை ஒரு ஆசிரியர் நடத்தும்போது மாணவர்கள் ‘புரிகிறது’ என்கிறார்கள். அதே பாடத்தை இன்னொரு ஆசிரியர் நடத்தும்போது, ‘சரியாக புரியவில்லை’ என்கிறார்கள். அதேபோல், இங்கே தன்னை உணர்ந்த ஞானியும் யோகியுமான சத்குரு அவர்கள் வாழ்வின் புதிரான பக்கங்களை நமக்கு விளக்கும்போது, இதற்குமுன் நாம் அறிந்ததைவிட, இப்போது ஒவ்வொன்றையும் தெள்ளத் தெளிவாக உள்வாங்க முடிகிறது. எனவேதான் சத்குருவிடம், மக்கள் தங்களுக்கு விளங்காத எந்த ஒரு விஷயத்தையும், அந்த விஷயம் எதைப் பற்றியதாக இருந்தாலும், திரும்பத்திரும்ப கேட்டு விடை பெறுகிறார்கள். அப்படி சத்குரு அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இந்த நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்த நூல் ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட‘Mystics and Mistakes’என்ற நூலின் தமிழாக்கம் ஆகும்.