மந்திரம் என்பது என்ன?
மந்திரங்களின் அறிவியல் பற்றி பேசும் சத்குரு, எப்படி அதனை நம் நலனிற்காக உபயோகப்படுத்துவது என்பதையும் சத்குரு விளக்குகிறார்!
ArticleNov 3, 2017
மந்திரம் என்பது என்ன?
சத்குரு:
மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான அதிர்வுகளாகக் காண்கிறது. எங்கே ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கே கட்டாயமாக ஒரு ஒலி இருக்கிறது. அதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு படைப்பும் ஒருவிதமான ஒலியாக அல்லது படைப்பு என்பது ஒலிகளின் கூட்டுக் கலவையாக இருக்கிறது - அதாவது படைப்பு எண்ணற்ற மந்திரங்களின் கலவையாக இருக்கிறது. இவற்றுள், ஒரு சில மந்திரங்கள் அல்லது ஒரு சில ஒலிகள், சாவிகள் போல் செயல்படக்கூடியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட விதமாக நீங்கள் அவற்றைப் பயன்படுத்தினால், வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைத் திறப்பதற்கும் உங்களுக்குள் உணர்வதற்கும் அவை ஒரு திறவுகோலாகின்றன.