தியானலிங்கத்தின் கட்டிடக்கலை
ஒரு எளிய வடிவமைப்புகளின் கலவையாக தியானலிங்க வளாகத்தின் கட்டமைப்பு அமைந்துள்ளது. பார்வையாளர்களை தியானநிலைக்கு அழைத்துச்செல்லக்கூடிய வகையில், இதிலுள்ள ஒவ்வொரு அம்சங்களிலும் சத்குருவின் வடிவமைப்பும் கோணமும் அமைந்துள்ளது.
தியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே! முதலில் ஒருவர் தியானலிங்கத்திற்குள் நுழையும்போது நிலமட்டத்திலிருந்து தாழ்ந்த இடம் வழியாக நுழைவார். அங்கே 17 அடி உயர ‘சர்வ தர்ம ஸ்தம்பம்’ எனப்படும் ஒற்றை வெள்ளைக்கல் தூண் இருக்கிறது. இந்த ஸ்தம்பம் உள்ள பகுதி மூன்று பக்கங்கள் அடைக்கப்பட்டுள்ள ஒரு யந்திரம் , போல் அமைக்கப்படுள்ளது. இங்கே பார்வையாளர் தனது கைகள் திறந்த நிலையில் இருக்கும்படியான மனநிலையைப் பெறுகிறார். தனது மூன்று பக்கங்களிலும் உலகிலுள்ள 9 பெரிய மதங்களின் சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ள ஸ்தம்பம், அனைத்து தரப்பினரையும் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. ஸ்தம்பத்தின் நான்காவது பக்கத்தில் ஏழு தாமரைகள் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிக்கும் விதமாக அல்லது வெவ்வேறு விழிப்புணர்வு அளவுகளின் நிலைகளைக் குறிக்கும் விதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. சக்கரங்களின் விளிம்புகளிலிருந்து தொடரும் பாம்பு வடிவ சிற்பங்கள் ஈடா மற்றும் பிங்காளா நாடிகளை, பெண்தன்மை மற்றும் ஆண்தன்மையைக் குறிப்பதாகவும் அல்லது உள்நிலை ஞானத்தை மற்றும் பகுத்தறிவினை குறிப்பதாகவும் அமைந்துள்ளது. ஸ்தம்பத்தின் உச்சியிலுள்ள சூரியன் ஒரு புதிய உதயத்தைக் குறிப்பதாய் அமைந்துள்ளது. சூரியனிற்கு கீழே விழும் இலைச் சருகுகள் கடந்த காலங்களைக் குறிக்கிறது.
‘தோரணா’ எனப்படும் கல்லால் ஆன நுழைவயில் பாரம்பரிய இந்திய கலாச்சாரத்தின் கட்டிடக்கலை விதிகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அது புனித ஸ்தலத்தின் பாதுகாப்பு அரணாகவும், பிரதான நுழைவாயிலாகவும் விளங்குகிறது. தோரணாவைக் கடந்து பரிக்கிரமாவுக்குள் நுழைவதற்கு முன் உள்ள மூன்று படிகள் மனத்தின் மூன்று குணங்களான ரஜஸ், தமஸ், சத்துவ குணங்களைக் குறிக்கிறது. வழக்கத்திற்கு மாறான உயர அளவுகளில் அமையப்பெற்றுள்தால், பார்வையாளார்கள் மேற்பரப்பில் கூழாங்கற்கள் பரப்பியது போல் உள்ள படிக்கட்டுகளில் பாதங்களை அழுத்துவார்கள். இதனால் நரம்பு மண்டலங்கள் தூண்டப்படுகின்றன; தியானலிங்கத்தை உணர்வதற்கு ஒருவரை தயார்படுத்தும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.