ஹோல்னஸ் பகிர்வுகள்

இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி சென்றேன். அங்கே என்ன நிகழப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அங்கே செல்வதற்கு முதன்மையான காரணம், சத்குரு அங்கே இருக்கிறார், மேலும் அவர் அங்கு எங்களுடன் இருக்கப்போகிறார் என்பதுதான்!

ஒவ்வொரு நாளும் நாள் முழுக்க குறிப்பிட்ட விதமான கால அட்டவணையை சத்குரு எங்களுக்கு வகுத்திருந்தார். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நாங்கள் எங்கிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியாது. சில நேரங்களில் சத்குருவை எப்படி புரிந்துகொள்வது என்பதும் எங்களுக்குத் தெரியாது. ஆனால், அதே சமயத்தில், அவர் ஒரு தோழனுக்கும் மேலானவர், நாங்கள் அதுவரை அறிந்திருந்த மென்மையான மனிதர் என்ற தோற்றத்தைவிட மேலானவர் என்பதை உணரத்துவங்கினோம். நாங்கள் அவர் ஒரு குரு என்பதை உணரத்துவங்கினோம். அவரிடம் அதுவரை பார்த்திராத முகங்களைக் கண்டோம், அப்படியொரு தன்மை இருக்கிறது என்பதைக் கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பலவிதமான அனுபவங்களையும் பல அற்புதங்கள் நிகழ்வதையும் கண்டோம். பங்கேற்பாளர்கள் பற்பல புதிய அனுபவங்களைப் பெற்றனர். ஹோல்னஸ் நிகழ்ச்சியில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் நான் அதுவரை பார்த்திராதது, அதன்பிறகும் பார்க்கவில்லை!

- மா கம்பீரி

அந்த 90 நாட்களில் முதல் முப்பது நாட்கள் மிக முக்கியமானவை. சத்குரு அந்த 30 நாட்களும் தூங்கவில்லை என நான் நினைக்கிறேன். எப்போதெல்லாம் நாங்கள் கண்விழுத்து பார்க்கிறோமோ அப்போதெல்லாம் அவர் எங்களைச் சுற்றியே இருப்பார். அந்த மூன்று மாதங்களும் நாங்கள் பலவிதங்களில் சத்குருவிற்கு மிக அருகில் இருந்தோம். அவர் எங்கள் ஒவ்வொருவருக்காகவும் தன்னை முழுமையாக வழங்கினார். பல பரிமாணங்களில் எங்களுடன் இருந்தார். ஒவ்வொரு கணமும் அவர் எங்களுடன் இருந்தார்.

- பெயர் அறியவில்லை