யக்ஷா

இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தில் தலைசிறந்த கலைஞர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகளுடன், மஹாசிவராத்திரி இரவிற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஓர் வண்ணமயமான கொண்டாட்டம் யக்ஷா! இந்தியாவின் தனித்துவமும் கலை நுணுக்கங்களும் நிறைந்த பல்வேறு கலைவடிவங்களை காக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைகிறது. நம் பாரம்பரிய கலைகளின் சிறப்பினாலும் உயிரோட்டத்தினாலும் இந்த கலை நிகழ்ச்சியானது வார்த்தைகளில் வர்ணிக்க இயலா அழகினைக் கூட்டுகிறது.