ஈஷாகைவினை – நேசத்தின்வெளிப்பாடு


ஈஷா யோகா மையத்தின் கலையுணர்ச்சி பொருந்திய பாங்கை உலகின் எல்லா பாகத்தினரும் பாராட்டுகின்றனர். அங்குள்ள மேஜை நாற்காலிகளோ அல்லது அலங்காரப் பொருட்களோ, அல்லது சத்குருவின் சத்சங்கங்களில் செய்யும் பூ அலங்காரங்களோ, ஆழ்ந்த ஒரு அழகுணர்வையும், தனித்துவமான அமைப்புக்ளையும் யாருமே உணராமல் இருக்க முடியாது.

ஈஷா கைவினையில் உருவான பொருள்கள் பல பெரிய கண்காட்சிகாளில் பங்கு கொண்டு, நகர்புர மனை அலங்காரம் செய்பவர்கள் மற்றும் வாங்குவோர் என எல்லா தரப்பினராலும் பேரளவில் தெளிவாக விமர்சனிக்கப் பட்டுள்ளது.

மக்களின் வாழ்விற்குள் தமது இந்த நோக்கத்தை கொண்டு செல்வதே ஈஷா கைவினையின் முயற்சி. தமிழ் நாட்டிலுள்ள கிராமப் புற தொழிலாளிகளுக்கு அதிகாரமளித்து அவர்களின் பரம்பரை கலை மற்றும் கைவினைப் பொருட்களை உருவாக்க ஊக்கமளித்து, அவர்களின் வாழ்வாதார்த்தை உயர்துவதே ஈஷாவின் நோக்கம். பல சுற்றுப்புர சூழலுக்கு உகர்ந்த மர சாமான், பைகள், கல்லில் செதுக்கிய சிற்பங்கள் மற்றும் பலவிதமான பொருளகளை ஈஷா கைவினையில் உருவாக்கி ஈஷா ஷாப்பியில் விற்கிறார்கள். நேர்த்தியான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பைகள், பணப்பைகள், இயற்கை நாறுகளை கொண்டு செய்த கூடைகள், பலதரப்பட்ட உலோகத்திலான கலை பொருட்கள், இயற்கை முறையில் தயாரித்த எண்ணை கொண்டு செய்யப்பட்ட சோப்புகள், ஷாம்பூக்கள் மற்றும் வாசனை தைலங்களையும் தயார்க்கின்ற்னர். தனித்துவம் வாய்ந்த கல்லில் செதுக்கிய உருவங்கள் மனையலங்காரம் செய்பவர்கள் மற்றும் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கருங்கல்லில் தேர்ந்த சிற்பிகளால் கையால் செதுக்கப் பட்ட உருளிகள் தமது இயற்கையான அழகை தக்க வைத்துக் கொள்ளுமாறு வேலைப்பாடுகள் அமைக்கப் பட்டுள்ளன.

ஈஷா கைவினையில் உருவான பொருள்கள் பல பெரிய கண்காட்சிகாளில் பங்கு கொண்டு, நகர்புர மனை அலங்காரம் செய்பவர்கள் மற்றும் வாங்குவோர் என எல்லா தரப்பினராலும் பேரளவில் தெளிவாக விமர்சனிக்கப் பட்டுள்ளது. 2006ல் ஸொசாயிடி ஆஃப் இன்டீரியர்ஸ், ஆர்ட்ஸ் அண்ட் க்ராஃப்ட் கண்காட்சியகம், சென்னையின் சிறந்த விற்பனை அரங்கிற்கான விருதினை பெற்றது.

ஈஷா ரேமண்ட் – இயற்கை முறையில் உடுப்பு


ஈஷாவின் உயிரோட்டமுள்ள நாரிழைகளாலான உடுப்பு வகைகள் தினந்தோறும் உடுக்கவும், சௌகரியமாக உடுக்கவும், லினென் மற்றும் பட்டுத் துணிகளில், ஆண் பெண் இரு சாராருக்காகவும் உருவாக்கப் பட்டவை. மூங்கில், சணல், ஃப்லெக்ஸ் போன்ற நார் வகைகளாலான, இயற்கை நிறங்கள் தோய்த்த உடுப்புகளும் உள்ளன. கண்களை கவரும் நூல் வேலைப்பாடுகளுடன் கூடிய இவ்வுடுப்புகள் ஒவ்வொரு நாளையும் அழகூட்டுகின்றன.

ஈஷா ருசி


நீங்கள் உண்ணும் உணவு உங்கள் உடல் நிலையை மட்டுமல்லாமல், உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகளையும் கூட நிர்ணயிக்கின்றது. இதன் அடிப்படையில்தான் ஈஷா ருசி உருவானது.

உணவும், ஊட்டச் சத்தும் இந்தியாவின் பழமை வாய்ந்த, விசாலமான பண்பாட்டில் ஒன்றாக இருந்தது. உணவு உடல் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தது. யோகிகள், ஞானிகளின் ஆழ்ந்த புரிதலலிருந்து எடுக்கப் பட்ட இந்த விஞானம், மனித உடலின் மொத்த செயல் திறனையும் புரிந்ததிலிருந்து வந்தது. ருசி, ஊட்டச்சத்து மற்றும் வசதி என்று எல்லாமும் தரும் முழுமையான நொறுக்குத் தீனி, பானங்கள், துரிதமாக பரிமாறும் சிற்றுண்டி மாவு வகைகள், மற்றும் சுவையான ஊறுகாய்கள் ஈஷா ருசியின் உற்பத்திப் பொருட்கள். உயர்தரமான, தூய கூட்டுப் பொருட்களால் ஆன ஈஷா ருசி பொருட்கள் எல்லாமே ஊட்டமும் மற்றும் சுவையானது.