மதுரையில் சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட ஈஷா யோகா மெகா நிகழ்ச்சியில் தன்னார்வத் தொண்டு புரிந்த அனுபவத்தை ஒரு தன்னார்வத் தொண்டர் பகிர்ந்துகொள்கிறார்!

ஒரே மாலைப்பொழுதில் 10,000 பேருக்கு சத்குரு தீட்சை வழங்கும் காட்சியை நான் காண்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.

நிகழ்ச்சியின் இறுதிநாளில், தீட்சை செயல்முறை நடைபெறும் நேரத்தில், நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் நான் பரபரப்பாக நிகழ்ச்சிக்கு தேவையானவற்றை ஒருங்கிணைக்கும் விதத்தில் அங்குமிங்கும் சென்றபடி தன்னார்வத் தொண்டு புரிந்துகொண்டிருந்தேன். ஆயிரக்கணக்கான மக்களுக்கு தீட்சை வழங்குகையில் சத்குருவின் அருள் அதிர்வுகள் மேடையிலிருந்து சுற்றிலும் பரவியதை காண்பது, பார்ப்பதற்கு அரிய ஓர் நிகழ்வாக இருந்தது.

முதல்நாளன்று, இவ்வளவு பேருக்கு எப்படி நிகழ்ச்சியை வழங்கும் சூழலை உருவாக்குவதுஎன்று ஆச்சரியப்பட்டேன். ஆனால் நான் கவலைகொள்ள தேவையில்லாத படி, சத்குருவின் இருப்புநிலை அந்த சூழலை கவனித்துக்கொண்டது. அந்த அதிர்வுகளால் பங்கேற்பாளர்கள் நிகழ்ச்சியின் ஒவ்வொரு கணத்திலும் மூழ்கடிக்கடிக்கப்பட்டனர் என்பது மட்டும் உறுதி! அந்த இரண்டரை நாட்களில் அவர்கள் நடக்கும் விதத்திலும், பேசும் தன்மையிலும், புன்னைக்கும் விதத்திலும் அவர்கள் பரிமாற்றம் அடைந்துள்ளதை நான் பார்க்கமுடிந்தது!

அதனை இப்போது திரும்பிப் பார்க்கையி9ல், மனித வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத ஒரு மாபெரும் நிகழ்வு அங்கு நிகழ்ந்ததை என்னால் உணரமுடிகிறது. அந்த இடத்தில் இருந்ததும், எனது சிறியதொரு பங்களிப்பை அந்நிகழ்விற்காக வழங்கியதும் எனது பெரும்பாக்கியமாகும்.