சமுதாயத்தில் மாற்றம்

இத்திட்டம் மூலம் 7 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து இருக்கிறார்கள். 4200 கிராமங்கள் பலனடைந்துள்ளன. 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மூலிகைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 10,000 மக்களுக்கு யோகா வகுப்புகள் நடைபெற்றுள்ளன.

பல்வேறு சமூக நலத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான கிராமப் புத்துணர்வு இயக்கம் 2003ல் சத்குருவால் துவங்கப்பட்டது. கிராமப்புற ஏழை மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட இத்திட்டம், தன்னார்வத் தொண்டின் மூலம் சிறந்த ஆரோக்கியமான சமுதாயத்தையும் சமூகப் புத்துணர்வையும் உருவாக்க செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அர்ப்பணிப்பு உணர்வுள்ள சிறந்த பயிற்சி பெற்ற கிராம மக்களின் வாழ்க்கையில், கிராமப் புத்துர்ணவு இயக்கம் புதிய நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியம், விளையாட்டுகள், யோகா, சமூக முன்னேற்றம் மற்றும் சமுதாய நல்லுறவு என பலதளங்களில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் அணுகுமுறையே இந்த வெற்றிக்கு காரணம். சமூக ஈடுபாடுகொள்ளச் செய்தல் மற்றும் திட்டத்தை தாங்களாகவே செயல்படுத்தும் உணர்வை வழங்குதல் போன்றவற்றின் மூலம், கிராம மக்களின் குறைந்த கால நல்வாழ்வு என்ற வகையில் மட்டுமல்லாமல், தொலை நோக்குப் பார்வையுடனும் இத்திட்டம் செயல்படுகிறது. இதன் முக்கிய குறிக்கோளாக சமூகம் தங்கள் நல்வாழ்விற்கான உத்திரவாதத்தைப் பெறுவதாக உள்ளது.

ஈஷா அறக்கட்டளை நடத்தும் கிராம மக்களுக்கான ஈஷா யோகா மற்றும் ஈஷா கிரியா பயிற்சிகள் அவர்களின் ஆரோக்கியம், மன மற்றும் உடல் நலனை உறுதி செய்ய உதவி செய்கிறது. அதோடு ஆழ்ந்த ஆனந்த உணர்வை தங்களுக்குள் இதன்மூலம் உணர்கிறார்கள். இந்த யோகா நிகழ்ச்சிகள் மூலம் ஈடுபாடு மிக்க தன்னார்வத் தொண்டர்கள் உருவாவதோடு, அவர்களோடு கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமுதாய விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றனர்.

குறிப்பாக பெண்கள் இத்திட்டத்தில் பெரும்பங்காற்றுகின்றனர். கிராமப்புறங்களில் பெண்கள் வீட்டு வேலைகள் மட்டுமல்லாது, வேலைக்குச் சென்று சம்பாதித்தல், குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

உதாரணத்திற்கு உணவு தயாரித்தல் அவர்கள் கையில் இருக்கும்போது, அந்தப் பெண் தனது உணவுமுறையில் தினமும் ஒரு பழத்தை சேர்க்கும்போது அந்த குடும்பத்தில் ஊட்டச்சத்து பெறும் தரம் அதிகமாகிறது. குறிப்பாக குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை நல்லபடியாக அமையும். மொத்தத்தில் சமூக முன்னேற்ற திட்டங்கள் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதோடு, நிலையான வளர்ச்சிக்கான உதவியை வழங்குவதாகவும் உள்ளது.

பேணிக்காக்கும் கலாச்சாரம்!

கிராம மக்களின் மன நலனிலும் ARR அக்கறை எடுத்துக்கொள்கிறது. விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு ‘கருணைக் கருவறை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி ARR ன் உதவியுடன், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நபர் கிராம ஆலோசகராக பயிற்சி அளிக்கப்படுவார். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துரைப்பதற்கும் அதற்கான தீர்வு என்ன என காண்பதற்கும் வழிசெய்யப்படுகிறது.

ஏய்ட்ஸ் HIV/AIDS பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் அக்கறை கொண்டு செயல்படுகிறது. ஈஷா நடமாடும் மருத்துமனைகளில் எய்ட்ஸ் நோய்க்கான பாதிப்புடன் வரும் நபர்கள் அருகிலுள்ள பரிசோதனை மையத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஈஷா கிராம மருத்துவமனைகளிலும் கூட எய்ட்ஸ் நோயைக் கண்டறியும் வசதி உள்ளது. TANSAC எனப்படும் எய்ட்ஸ் நோய்க்கான தமிழ்நாடு அரசின் அமைப்புடன் இணைந்து செயல்படும் ARR, கோவையை அடுத்த பல்லடத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் வகையிலான சமூக நல மையத்தைக் கொண்டுள்ளது.