மனிதன் உருவாக்கும் அனைத்தும் முதலில் அவனது மனத்தில் உருவாக்கப்பட்ட பின்பே உண்மையில் உருவாக்கப்படுகிறது. எனவே நமது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது, நமது மனதை எப்படி ஒருங்கிணைக்கிறோம் ஒருநிலைப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. மனதை பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் விரும்பும் ஒன்றை உருவாக்குவதற்கு ‘சித் சக்தி’ எனப் பெயர்.

குறிப்புகள் மூலம் செய்யப்படும் நான்கு சித் சக்தி தியானப் பயிற்சிகளை சத்குரு வழங்குகிறார். இதன்மூலம் நீங்கள் அன்பு, ஆரோக்கியம், அமைதி மற்றும் வெற்றியை உங்கள் வாழ்வில் ஈட்டமுடியும். இது நமது வாழ்வில் நாம் விரும்பும் ஒரு செயலை, அதி தீவிர ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சாத்தியத்தை வழங்குகிறது. ஒருவரின் அதிதீவிர ஆசைகள் நிறைவேறும்போது அவர் உச்சபட்ச நல்வாழ்வை நோக்கிய பயணத்திற்கு திரும்புவார் எனும் நோக்கதில் சத்குரு இந்த தியானங்களை வழங்குகிறார்.