விழிப்புணர்வோடு வாழ்வது என்கிறீர்களே? அதைக் கொஞ்சம் விரிவாக விளக்குங்களேன்?

சத்குரு: உங்கள் உயிர் ஏதோவொன்றிற்காக எல்லா நேரமும் ஏங்கிக் கொண்டே இருக்கிறது. அது குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய வேண்டும் என்கிற ஏக்கம். அதை நோக்கி விழிப்புணர்வோடு நகர்கிறீர்களா? விழிப்புணர்வின்றி நகர்கிறீர்களா? என்பதுதான் உங்களுக்கிருக்கிற ஒரே தேர்வு. விழிப்புணர்வில்லாத நிலையில் நீங்கள் சொர்க்கத்தை நோக்கி இழுக்கப்பட்டால் கூட அது உங்களுக்கு துன்பமயமாகத்தான் இருக்கும். இப்போது உங்களை தரதரவென்று இழுத்துச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்கே போகிறோம் என்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் அது மிகப்பெரிய வேதனையாகத்தான் இருக்கும். உங்களைக் கொண்டு போய் விடுகிற இடம் ஓர் அழகிய கடற்கரையாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தப் பயணம் நரக வேதனையைக் கொடுக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அறியாமையில் இருக்கிறபோதெல்லாம் நீங்கள் துன்பத்திற்கு ஆளாகிறீர்கள்.

வீதியில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்பக்கமாக என்ன வருகிறது என்று விழிப்புணர்வு இல்லையென்றால் நீங்கள் துன்பப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம். உடலுக்கு என்ன நேர்கிறது என்பது தெரியாவிட்டால் ஒருவகை துன்பம். மனதிற்கு என்ன நேர்கிறது என்பது தெரியாவிட்டால் இன்னொருவகை துன்பம். குடும்பத்திற்கு என்ன நேர்கிறது என்று தெரியாவிட்டால் வேறு வகையான துன்பம். எனவே, அறியாமையில் இருக்கிறபோதெல்லாம் நீங்கள் துன்பத்திற்கு ஆளாகிறீர்கள்.

pirate-sketchஒரு கடல் கொள்ளையன் இருந்தான். ஒரு மதுபானக் கடைக்கு வழக்கமாக வருவான். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அவன் வந்தான். "எப்படியிருக்கிறீர்கள்?" என்று மதுபானக் கடைக்காரன் கேட்டார். "நலமாக இருக்கிறேன்" என்று பதிலளித்தான். ஆனால் மரத்தால் ஆன செயற்கைக்கால் பொருந்தியிருந்தான். "இது என்ன?" என்று கேட்டதற்கு, "எதிரிகளோடு சண்டையிட்டபோது பீரங்கி குண்டு தாக்கி கால் போய்விட்டது. ஆனால் நன்றாக இருக்கிறேன்" என்றான். இடது கைக்கு பதிலாக இரும்பு கொக்கி பொருத்தப்பட்டிருந்தது. "விளையாட்டாக வாள் வீச்சில் ஈடுபட்டபோது இடது கை துண்டாகிவிட்டது. ஆனால் நன்றாக இருக்கிறேன்" என்றான். அவனுக்கு ஒரு கண்ணும் போயிருந்தது. அதுபற்றிக் கேட்டபோது "பறவையின் எச்சம் விழுந்துவிட்டது" என்றான். மதுபானக் கடைக்காரர் ஆச்சர்யத்துடன் "பறவை எச்சம் விழுந்து கண் குருடாகுமா? என்று கேட்டார். "இல்லை. அன்றுதான் கைக்குப் பதிலாக இரும்புக் கொக்கி பொருத்தியிருந்தேன்" என்று பதிலளித்தான். என்ன நடக்கிறதென்ற விழிப்புணர்வு கூடுகிறது. உங்கள் ஆளுமை குறையும்போது உங்கள் இருப்பு அடர்த்தியாகிறது.

tamil-app-banner