உங்கள் வாழ்வில் நீங்கள் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், இதுவரை நீங்கள் தவிர்த்து வந்தவற்றைக் கூட இப்போது செய்ய வேண்டிவரும். நான் தற்போது விமானி ஆகி பறக்க விரும்புகிறேன். அதற்காக, என் வாழ்நாள் முழுவதும் நான் தவிர்த்து வந்திருந்த கணிதத்தை மீண்டும் நான் கற்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதனை நான் செய்துதான் ஆக வேண்டும். ஏனென்றால், நாம் விரும்பும் ஏதோ ஒன்றை நிகழ்த்த வேண்டுமானால் நாம் விரும்பாத பலவற்றையும் கூட செய்ய வேண்டியிருக்கிறது. இது வாழ்வில் அத்தனை விஷயங்களுக்கும் பொருந்தும்.

உங்கள் வாழ்க்கையில் மதிப்பு வாய்ந்ததாக நீங்கள் நினைக்கும் எந்த ஒன்றும் வெறும் கற்பனையில் நடந்துவிடாது. நீங்கள்தான் செங்கல் செங்கல்லாக வைத்து ஒவ்வொன்றாக கட்டி முடிக்க வேண்டும். அப்போதுதான் அது வேலை செய்யும், நிலைத்திருக்கும்.

நீங்கள் சுதந்திரத்தை விரும்புகிறீர்கள். அதைக் கொண்டு வருவதற்காக காவல் துறை, சிறைச்சாலை, பெருத்த மதில் சுவர்கள், வேலிகள் என எல்லாவற்றையும் நீங்கள் உருவாக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகுதான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தற்போது நாம் தியானம் செய்ய விரும்புகிறோம். அதற்கு ஒரு தியான மண்டபம் உருவாக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் விரும்புவதெல்லாம் அங்கு அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் அதன்பிறகு நீங்கள் தூங்க இடம் கட்ட வேண்டும். பிறகு ஒவ்வொன்றாக பல வசதிகள் செய்ய வேண்டியிருக்கும். அப்போதுதான் நீங்கள் விரும்பிய செயல் தங்குதடையின்றி நடக்கும்.

எனவே நீங்கள் விரும்பும் செயல் உண்மையாகவே உங்களுக்கு முக்கியமாக இருந்தால்தான், நீங்கள் விரும்பாத செயல்களையும் செய்யக்கூடிய சக்தியும், மனவலிமையும் உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் மதிப்பு வாய்ந்ததாக நீங்கள் நினைக்கும் எந்த ஒன்றும் வெறும் கற்பனையில் நடந்துவிடாது. நீங்கள்தான் செங்கல் செங்கல்லாக வைத்து ஒவ்வொன்றாக கட்டி முடிக்க வேண்டும். அப்போதுதான் அது வேலை செய்யும், நிலைத்திருக்கும்.

அன்பும் அருளும்,