விளையாட்டில் ஏமாற்றுவது சரிதானா?
“ரோட்னி மார்ஷ்” அறுபதுகளில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர். சமீபத்தில் இங்கிலாந்திற்கு சத்குரு சென்றிருந்தபோது, திரளான மக்கள் கூட்டத்திற்கு இடையே, “விளையாட்டில் ஏமாற்றுவது சரிதானா?” என்னும் கேள்வியை அவர் கேட்க, அக்கேள்வி அங்கு கூடியிருந்தோர் இடையே பெருத்த வரவேற்பை பெற்றது. ரோட்டினியின் கேள்விக்கு, சுவையான சத்குருவின் பதில் உங்களுக்காக..!
 
 

“ரோட்னி மார்ஷ்” அறுபதுகளில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர். சமீபத்தில் இங்கிலாந்திற்கு சத்குரு சென்றிருந்தபோது, திரளான மக்கள் கூட்டத்திற்கு இடையே, “விளையாட்டில் ஏமாற்றுவது சரிதானா?” என்னும் கேள்வியை அவர் கேட்க, அக்கேள்வி அங்கு கூடியிருந்தோர் இடையே பெருத்த வரவேற்பை பெற்றது. ரோட்டினியின் கேள்விக்கு, சுவையான சத்குருவின் பதில் உங்களுக்காக..!

ரோட்னி மார்ஷ்விளையாட்டில் ஏமாற்றுவது தவறில்லை, அப்படிச் செய்வது சரிதான் என்று நம்புகிறேன். ஏமாற்றவில்லை என்றால் ஜெயிக்க முடியாது. நான் இப்படி ஒரு மனநிலையில் இருப்பதன் மூலம் ஏதாவது தவறு செய்கிறேனா? ஏமாற்றுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

சத்குரு:

ஏமாற்றுவது அல்லது ஏமாற்றாமல் இருப்பது என்ற கண்ணோட்டத்தில் இதை நான் பார்க்கவில்லை. விளையாட்டுக்கென்று இருக்கும் சில விதிமுறைகளால்தான் அது விளையாட்டாகவே இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கால்பந்துக்கென்று சில விதிமுறைகளும், கைப்பந்துக்கென சில விதிமுறைகளும் கிரிக்கெட்டுக்கென்று வேறு சில விதிமுறைகளும் இருக்கின்றன. எனவே விதிமுறைகள்தான் விளையாட்டை உருவாக்குகின்றன. கால்பந்து மைதானத்துக்குள் சென்று, பந்தை கைகளில் எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கு நீங்கள் ரக்பிதான் விளையாடப் போகவேண்டும்; கால்பந்து விளையாடக் கூடாது.

விதிமுறைகளை உடைக்க விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்வதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால் நான் விளையாட்டை சீரழிக்க விரும்புகிறேன் என்பதுதான்.

எனவே இந்த விதிமுறைகளை நீங்கள் உடைக்கும் கணத்தில், அந்த விளையாட்டின் அடிப்படையையே உடைத்து விடுகிறீர்கள். எனவே இது ஜெயிப்பது தோற்பது பற்றிய விஷயமல்ல; ஒரு விளையாட்டைச் சீரழிப்பதைப் பற்றிய விஷயம். நீங்கள் அந்த விளையாட்டை முற்றிலும் சீரழித்து விடுகிறீர்கள். அவன் அந்தப் பந்தை ஒருமுறை கையால் தொட்டால் பரவாயில்லை. ஆனால் நான் பந்தை எப்போதும் தொட்டுக் கொண்டே இருப்பேன், அதை கையில் எடுத்துச் சென்று கோல் போடுவேன், இதற்கு அடுத்தபடியாக ஒன்றுக்கு இரண்டாக பந்துகளை எடுத்துச் சென்று கோல் போடுவேன், இப்படி இருந்தால், பிறகு எதற்காக நாம் ஒரு விளையாட்டை விளையாட வேண்டும்? ஏனென்றால் அந்த விளையாட்டு ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை உடைக்க விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்வதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால் நான் விளையாட்டை சீரழிக்க விரும்புகிறேன் என்பதுதான். அப்படிப்பட்டவர்களுக்கு விளையாட்டில் இடமே இல்லை. அவர்களுக்கு தங்களது விளையாட்டின் மேல் எந்தக் காதலும் இல்லை. எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், அவ்வளவுதான்!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1