வீடு & அலுலவகத்தில் ஒழுக்கம் உருவாவதற்கு

“உரிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் ஒழுக்கம் குறித்து ஒருவார்த்தை கூடப் பேசாமல், நீங்கள் விரும்பும் சூழலை உருவாக்கிட முடியும்.”
 
 

ஒழுக்கம் என்றாலே யாரையாவது கட்டுப்படுத்துவது கண்டிப்பது தண்டிப்பது தட்டி வைப்பது என்றெல்லாம் தவறான புரிதல்கள் உலவுகின்றன.

ஒழுக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற தவிப்பு, தலைமை நிலையில் இருக்கும் பலருக்கும் ஏற்படுகிறது. ஒழுக்கம் என்றால் என்ன என்ற புரிதலை முதலில் ஏற்படுத்திக் கொள்வது அவசியம். ஒரே இடத்தில் ஒருவர் வேலையில் இன்னொருவர் தலையிடாமல் அவரவர் வேலையை அவரவர் பார்த்தால், வேலை பார்க்கும் சூழலில் ஒரு ஒழுங்கு நிலையைக் கொண்டு வந்தால், அதுவே ஒழுக்கம் என்று பலரும் நினைக்கிறார்கள்.

உரிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் ஒழுக்கம் குறித்து ஒருவார்த்தை கூடப் பேசாமல், நீங்கள் விரும்பும் சூழலை உருவாக்கிட முடியும். இதை சிலருக்கு சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் மற்றவர்களை அந்தவிதமாக உருவாக்க முடியும். ஒரு நிறுவனத்திலோ பணியிடத்திலோ இந்தச் சூழலை உருவாக்குவது எளிதான விஷயம்தான். ஆனால் இது ஒருநாளில் நடக்கக்கூடிய விஷயமில்லை. விதிமுறைகளாலோ சட்டதிட்டங்களாலோ மட்டும் சாத்தியமாகக்கூடியதும் இல்லை. இது தொடர்ந்து கொண்டே இருக்கிற முயற்சி.

ஒழுக்கம் என்றாலே யாரையாவது கட்டுப்படுத்துவது, கண்டிப்பது, தண்டிப்பது, தட்டி வைப்பது என்றெல்லாம் தவறான புரிதல்கள் உலவுகின்றன. இதுவல்ல ஒழுக்கம் என்பது. ஒழுக்கம் என்பது திறந்த மனதுடன் இருந்து கற்றுக்கொள்வதையே குறிக்கிறது. யார் எந்த நிலையிலிருந்தாலும் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வகை ஒழுக்கம் வரவேண்டுமென்றால், செய்கிற செயல்களில் மனிதர்களுக்கு ஈடுபாடு மிகவும் அவசியம். ஈடுபாடு இல்லாதபோது ஒருவர் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டார். எந்த அளவுக்கு வேலை செய்ய வேண்டியுள்ளதோ அதை மட்டுமே செய்வார். எனவே செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபாடு கொள்கிற சூழல் உருவாக்கப்படும்போது அவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய யோசனைகளை உங்களுக்குச் சொல்ல வருவார்கள். இதுவரையில் தாங்கள் பார்த்து வந்த வேலைகளில் இதுவரை கண்டிராத புதிய சாத்தியங்களை அவர்கள் காண்பார்கள்.

தாங்கள் செய்துவரும் வேலையின் தன்மை என்னவென்று இன்னும் ஆழமாகப் பார்க்குமாறு நான் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எப்போதும் சொல்வேன்.
தாங்கள் செய்துவரும் வேலையின் தன்மை என்னவென்று இன்னும் ஆழமாகப் பார்க்குமாறு நான் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எப்போதும் சொல்வேன். பலப் பல ஆண்டுகள் அதே வேலையை செய்து வந்தாலும்கூட, அவற்றில் இருக்கக்கூடிய சின்ன சின்ன அம்சங்களை, மேம்படுத்தக் கூடிய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறீர்கள் என்று அப்போதுதான் புரியும். எல்லாவற்றையுமே மிகச்சரியாக செய்வதாய் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் ஒருவர் ஒரு சிறிய விஷயத்தை சுட்டிக் காட்டும்போது, “இதை எப்படித் தவறவிட்டோம்” என்று நீங்களே அதிசயிப்பீர்கள். ஓர் அறையைத் தூய்மை செய்யும் சிறிய விஷயமாகக் கூட இருக்கலாம். இப்படி கற்றுக்கொள்ளும் மனோபாவம் வந்துவிட்டால், நடைமுறைப்படுத்தவே முடியாதென்று நீங்கள் நினைத்தவற்றைக்கூட மிக எளிதில் நடைமுறைப் படுத்திவிடலாம்.

இதில் இன்னொன்றும் இருக்கிறது. கற்றுக்கொள்ளும் விதமாகத் திறந்த மனநிலையை நீங்கள் பணிபுரிபவர்களிடம் ஊக்குவித்தால் அவர்களிடமிருந்து விதம்விதமான யோசனைகள் வரும். நூறு யோசனைகள் வந்தால் நடைமுறைப்படுத்தக்கூடிய யோசனைகள் இரண்டுதான் இருக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறீர்கள் என்பதுதான் விஷயம். ஒன்று நீங்களே கேட்கிறீர்கள் அல்லது யாரையெனும் கேட்கச்செய்து உங்களுக்குத் தகவல் தரச் செய்கிறீர்கள். இவை எவ்வளவு முக்கியம் என்று பலருக்கும் தெரிவதில்லை. உங்கள் நிறுவனத்தில் எல்லா நிலைகளிலும் இத்தகைய கற்றுக் கொள்ளல் நிகழ்கிறதா என்று கண்காணிப்பது வளர்ச்சி நிகழ வேண்டுமென்றுதானே தவிர சந்தேகத்தின் பெயரிலான கண்காணிப்பு அல்ல என்பதையும் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்வையும் ஏன் கண்காணிக்கிறீர்கள் என்றால் அங்கே நடக்கிற விஷயத்தை எப்படி மேலும் மேம்படுத்த முடியுமென்று பார்க்கிறீர்கள். எனவே யார் வேண்டுமானாலும் உங்களிடம் பேசலாம் என்கிற நிலை உருவானால் இதுவே ஒரு திறந்த நிலையை ஏற்படுத்தி எல்லோரும் ஒரே விஷயத்துக்காக ஒருமித்த மனதோடு பாடுபடும் சூழலை உருவாக்கிவிட முடியும்.

பணிச் சூழலில் ஈடுபாட்டைக் கொண்டு வாருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா ஒழுக்கங்களும் தாமாக வரும்.

ஒரே ஒருவர் மட்டும் மற்றவர்களிடத்தில் ஒழுக்கத்தை உருவாக்க நினைத்தால், அது சர்வாதிகாரத்தில் போய் முடியும். மாறாக ஒவ்வொருவரும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால், ஒழுக்கம் என்ற சொல்லை உச்சரிக்காமலேயே உருவாக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிட முடியும். எனவே முழு ஈடுபாட்டைக் கொண்டு வருவதுதான் ஒரு குழுவிற்குள் ஒழுக்கம் கொண்டு வருவதற்கான வழி. ஈடுபாடு இல்லாத சூழலில் ஒருவகையில் நீங்கள் ஒழுக்க நடைமுறைகளைக் கொண்டுவந்தால் அதனை உடைக்க ஒரு லட்சம் வழிமுறைகளை மற்றவர்கள் கண்டுபிடிப்பார்கள். சரியான சூழலை ஏற்படுத்தி சரியான முறையில் எல்லோரையும் ஈடுபடுத்தினால் பல நல்ல மாற்றங்கள் உருவாக முடியும். திருமண வாழ்வில் சேர்ந்திருப்பவர்களை விட பணிபுரியும் இடத்தில் சேர்ந்திருப்பவர்கள் மத்தியில்தான் அதிக அளவில் புரிதல்கள் ஏற்பட வேண்டியிருக்கிறது.

பணிச் சூழலில் ஈடுபாட்டைக் கொண்டு வாருங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா ஒழுக்கங்களும் தாமாக வரும். “குழந்தை நோயுற்றிருந்தால் சற்று தொலைவிலிருந்தே கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்காதீர்கள்.”

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1