இன்றைய தரிசன நேரத்தில், சத்தங்கள் குறித்தும், மௌனம் குறித்தும் சத்குரு அவர்கள் பேசத்துவங்கி, அன்பர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதிலிருந்து சிலதுளிகள் இங்கே உங்களுக்காக...

6:27

நாள்முழுதும் அடித்த வெயிலின் சூட்டைத் தணிப்பது போல உள்ளம் குளிர்ந்தது சத்குருவைக் கண்ட அக்கணம். சத்குரு வந்தமர்ந்து "நாத பிரம்மா" பாடலைப் பாட, அவரைத்தொடர்ந்து அனைவரும் பாட, ஆங்காங்கே கூடியிருந்த மேகங்களும் மத்தளம் கொட்டத்துவங்கின.

6:32

"பிரபஞ்சத்தில் பொருள்தன்மையில் இருக்கும் அனைத்தும் வெவ்வேறு சப்தங்கள்தாம். இந்திய மொழிகளில் மௌனத்தைக் குறிக்க இரண்டு சொற்கள் உள்ளன, ஒன்று மௌனம், இன்னொன்று நிசப்தம். மௌனத்தில் துவங்கினால், மெள்ள மெள்ள நிசப்தத்தை நோக்கிச் செல்வீர்கள். இன்று நீங்கள் எவ்வளவு சதவிகிதம் சத்தம் செய்கிறீர்கள், எவ்வளவு சதவிகிதம் மௌனமாக இருக்கிறீர்கள் என்று பாருங்கள். ஏதோ ஒன்றைச் சொல்ல எவ்வளவு வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்களோ, அதில் 25 சதவிகிதம் குறைத்திடப் பாருங்கள். சொல்வதற்கு ஏதோ ஒன்று இருந்தால் சொல்லுங்கள், ஆனால் கட்டாயத்தால், வார்த்தைகளில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது போல பேசிக்கொண்டே இருக்கத் தேவையில்லை."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

6:45

"இனிப்புகள் மேல் இருக்கும் என் ஆர்வத்தைக் குறைக்க நான் பயிற்சி செய்யும் ஹடயோகா எப்படி உதவும்?" என்று ஒருவர் கேட்க, "நீங்கள் ஒருவிதமான இரசாயனக் கலவையாக இருக்கிறீர்கள். அது சிலசமயம் இனிப்பாக, சிலசமயம் கசப்பாக, என்று பல விதங்களில் இருக்கிறது. உங்கள் யோகப்பயிற்சி மூலம் உங்களை மிக இனிப்பாக மாற்றிவிட்டால், சாப்பிடும் இனிப்புகளில் நாட்டம் குறைந்துவிடும். இப்போது இனிப்புகளை தவிர்க்க முயலாதீர்கள். தனிமையில் இனிப்புகள் வைத்துகொண்டு தனிமையில் உண்பதைத் தவிர்த்து, பிறர் வழங்கும்போது கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள்." என்று சத்குரு தெளிவு தந்தார்.

6:56

சூர்யகுண்டம் முன்னிலையில் இருக்கும் நாகா பற்றி ஒருவர் கேட்க, "சூர்யகுண்டம் பிரதிஷ்டை செய்தபோது அதன் முன்னிலையில் இருக்கும் நாகரை நாம் பிரதிஷ்டை செய்யவில்லை. அவர் தானாக வளரும்விதமாக அவரை நாம் வடிவமைத்தோம். சூர்யகுண்டம், தியானலிங்கம், இவற்றின் தாக்கத்தால் நாகா தானாக சக்திநிலையில் வளரும், வளர்ந்துகொண்டும் இருக்கிறது. பாம்பு சிவனின் தலையில் இருப்பதற்குக் காரணம், அதற்கு ஆகாஷ் தன்மையை கிரகித்துக்கொள்ளும் திறமை அதிகமாக இருக்கிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இவ்வைந்தில் ஆகாயம் முக்கியமானது, அதிலிருந்துதான் மற்ற நான்கும் வந்துள்ளன. அதனாலேயே அது மேன்மையானதாகவும் இருக்கிறது. அதனால் பாம்பைப்போல அசைவின்றி கிரகித்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு ஒருநிமிடம் அசைவில்லாமல் இருந்துபாருங்கள், இறுக்கமாக இருக்கக்கூடாது, தளர்வாக அசைவின்றி இருந்துபாருங்கள், இது உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தும்." என்று சத்குரு கூறினார்.

7:21

"சத்குரு சிலகாலம் முன்பு நீங்கள் அதிகம் ஆசிரமத்தில் இருந்து ஆன்மீகப்பணியை அதிகரிப்பீர்கள் என்று சொன்னீர்கள். இதைப் பற்றி இன்னும் சொல்லமுடியுமா?" என்று ஒருவர் கேட்க, "வெளி செயல்களை நாம் பெரிதாகக் குறைக்காத போதிலும், ஆன்மீகப் பணி பலவிதங்களில் அடுத்தநிலைக்கு சென்றுகொண்டு இருக்கிறது." என்று சத்குரு பதிலளித்தார்.

7:35

"சத்குரு, பயிற்சியின்போது எனக்கு ஏற்படும் அனுபவத்தில் எது கற்பனை, எது உண்மை என்று நான் எப்படி அறிவது?" என்று ஒருவர் கேட்க, "கற்பனையா நிஜமா என்ற கணக்குகளைத் தவிர்த்து, உங்களுக்குள் உண்மையில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்று பாருங்கள். வாழ்க்கை ஒரு கனவு, ஆனால் அந்தக் கனவு நிஜம். நாம் இதற்குத்தான் எல்லாம் மாயை என்றோம். வாழ்க்கை நீங்கள் சொந்தமாகத் தயாரிக்கும் படம், அதை நன்றாகத் தயாரித்துக் கொள்ளுக்கள். யாரோடும் ஒப்பிடாமல் உங்களை நீங்களே பார்த்தால், இன்னும் சிறப்பான மனிதராக மாறியிருக்கிறீர்களா என்று பாருங்கள், அதுதான் முக்கியமானது." என்று சத்குரு பதிலளித்தார்.

7:47

இனிமையான பாடலொன்றை ஈஷா இசைக்குழு இசைக்க, சத்குரு வணங்கி விடைபெற்றுச் சென்றார்.