சத்குரு:

அறுவடைக் காலமாக இருக்கின்ற உத்தராயணத்தின் ஆரம்பத்தில் நாம் இப்போது இருக்கின்றோம். பூமிக் கிரகத்தோடு தொடர்புடைய சூரியனின் ஓட்டமானது, தெற்கு நோக்கிய ஓட்டத்திலிருந்து வடக்கு நோக்கிய ஓட்டத்திற்கு – அதாவது தக்ஷிணாயணத்திலிருந்து, உத்தராயணத்திற்கு மாறும். இதனால் சூரியன் இடம்பெயர்கிறது என்பதல்ல. குளிர்காலக் கதிர்த்திருப்ப நாளில் டிசம்பர் 21-ஆம் நாளன்று, சூரியன் மகர ரேகையின் மீது இருக்கிறது. அந்த நாளிலிருந்து சூரியோதயத்தையும், சூரியனின் இடப்பெயர்ச்சியையும் நீங்கள் கவனித்தால், மெல்லமெல்ல, அது தினமும் வடக்கு திசைக்கு மாறும்.

ஆன்மீக விழிப்புணர்வு இருக்கும் மனிதர்கள் இந்த மாற்றத்தை, மனித விழிப்புணர்வு மலர்வதற்கான ஒரு சாத்தியமாகவே எப்போதும் கண்டிருந்தனர். குறிப்பாக, உத்தராயணத்தின் முதல் பாதி, அதாவது மார்ச் மாதத்தின் சம நோக்கு நாள் (சம கால பகல் – இரவு)வரையிலும், அதிகபட்சமான அருள் கிடைக்கப்பெறுகிறது. மனித அமைப்பானது, மற்ற எந்த காலத்தையும் விட இந்த நேரத்தில் தெய்வீக அருளை அதிகமாக உள்வாங்கும் தன்மையில் இருக்கிறது.

பூமியின் வடகோளத்தில் சூரிய ஓட்டத்தின் இந்தக் கட்டத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மனிதர்கள் ஞானம் அடைந்ததை வரலாறு சுட்டிக்காட்டுகிறது.

 

பீஷ்மனின் கதை அப்படிப்பட்ட மிகப் பிரபலமான கதைகளுள் ஒன்று. பல வாரங்களாக அவர் அம்புப்படுக்கையில் தனது மரணத்திற்காகக் காத்திருந்தார். பீஷ்மர் மிக மோசமாக காயமடைந்திருந்தபோதிலும், உத்தராயணம் வரும்வரையிலும் தனது உயிரைப் பிடித்து வைத்திருந்தார். ஏனென்றால், இயற்கையின் இந்த மாற்றத்தை உபயோகித்து அவர் தன்னிலை மாற்றத்தை சாத்தியமாக்க விரும்பினார். கௌதமரும் கூட, உத்தராயணத்தின் மூன்றாவது பௌர்ணமியன்று முழுமை எய்தினார். இதற்கு உதாரணமாக, தென்னிந்தியாவில் இந்தக் காலகட்டத்தில் தன்னிலை மாற்றமடைந்துள்ள எண்ணற்ற துறவிகளும், ரிஷிகளும், சித்தர்களும் மற்றும் யோகிகளும் இருக்கின்றனர்.

சூரியனின் தென் திசை ஓட்டத்தின்போது, அனாகதாவுக்குக் கீழ் உள்ளதை மிக எளிதில் சுத்திகரிக்க முடியும். மாறாக, வடக்கு முகமான ஓட்டத்தின்போது, அனாகதாவுக்கு மேலே உள்ளதை மிக மிக எளிதாகக் கையாள முடியும். அதனால்தான் சாதனாவைப் பொறுத்தவரை, தக்ஷிணாயணம் தூய்மைப்படுத்துவதற்கானது. உத்தராயணம், ஞானமடைதலுக்கானது. இது உள்வாங்குதலுக்கான காலம், அருளைப் பெறுவதற்கும் ஞானமடைவதற்கும் உகந்தது, மற்றும் உச்சபட்ச தன்மையை எட்டுவதற்கான காலம். இந்த நேரத்தில் விவசாய அறுவடையும் நடைபெறுகிறது. பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். ஆகவே, இது உணவு தானியங்களை அறுவடை செய்வதற்கான காலம் மட்டுமன்றி, மனித ஆற்றலை அறுவடை செய்வதற்கும் உகந்த காலமாக இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உத்தராயணத்தின் தொடக்கத்தில், விழிப்புணர்வுடன் அருளை உள்வாங்கும் தன்மையை மக்களிடம் அதிகரிப்பதற்காக, நாம் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம். ஜனவரி மாத ஆரம்பத்திலிருந்து தொடங்கி, தமிழ் நாட்டில் “தன்ய பௌர்ணமி” அல்லது “தைப்பூசம்” என்று அழைக்கப்படும் நாள் வரை நீடிக்கும் 21-நாள் சாதனா பெண்களுக்கு வழங்கப்படும். இந்த சாதனாவை அவர்கள் எங்கிருந்தாலும் செய்து கொள்ள முடியும்.

ஆண்களுக்கான 42 நாட்கள் சாதனா, மஹாசிவராத்திரி அன்று முடிவடையும்.

மனித உடலானது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தீவிரத்தையும், உணர்தலையும் அடைந்துவிட்டால், அதுவே ஒரு பிரபஞ்சமாக இருக்கிறது. வெளிவட்டத்தில் நிகழ்கின்ற அனைத்தும், சூட்சுமமான விதத்தில், உடலில் வெளிப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது, பெரும்பாலான மக்கள் இதை கவனிப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் ஒருவர் வெளிப்புற இயக்கம் குறித்து அறிந்துணர்ந்து, அதனை மனித உடலமைப்புக்குள் நிகழும் இயக்கத்துடன் ஒரே இலயத்தில் ஒழுங்குபடுத்தினால், மனித அமைப்பின் இயக்கத்தை மேலும் ஒருங்கிணைப்புடனும், அதன் நோக்கம் நிறைவு பெறும் விதத்தில் மறுசீரமைப்பும் செய்துகொள்ள முடியும். சதை மற்றும் எலும்பினாலான இந்த உடலானது பிரபஞ்ச உடலின் தன்மையை கிரகிக்கவேண்டுமென்றால், உத்தராயணம் மற்றும் தக்ஷிணாயணம் ஆகிய இந்த இயக்கங்களைப் புரிந்துகொள்வதுடன், அவற்றுடன் இணக்கமாக இருப்பதும் மிகவும் அவசியமாகிறது.

குறிப்பு:

ஆண்களுக்கான சிவாங்கா சாதனா:

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 13 வரை

 

தொடர்புக்கு:

 

இ-மெயில்: info@shivanga.org

தொலைபேசி: 83000 83111

இணையதளம்: Shivanga.org

 

பெண்களுக்கான சிவாங்கா சாதனா:

 

ஜனவரி 10 முதல் ஜனவரி 31 வரை

 

தொடர்புக்கு:

 

இ-மெயில்: shivanga@lingabhairavi.org

தொலைபேசி: 83000 83111