ஜூலை 16 ஆதியோகி முன்னிலையில், சத்குருவுடன் குரு பௌர்ணமி கொண்டாட்டத்தில் இணையுங்கள்! ஈஷா யோகா மையத்தில் நேரடியாகவோ அல்லது நேரடி இணைய ஒளிபரப்பு மூலமாகவோ கலந்துகொள்ளுங்கள்!

நேரடி ஒளிபரப்பில் இணைந்திடுங்கள்

இன்றைய நடைமுறை உலகத்தில், பல நிலைகளில் தொடர்பு கொள்வதிலிருந்து, வர்த்தகம் மற்றும் எந்த விதமான துறைகளிலும் சிறந்து விளங்குவதாகக் கூறப்படுபவர்களை “குரு” என்ற வார்த்தையால் குறிப்பிடுவது மிகவும் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு உண்மையான குரு என்பவர் யார்? அப்படி ஒருவர் நம் வாழ்வில் கடக்கும்போது நாம் எப்படி அடையாளம் காண முடியும்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குருவைப் பற்றி எங்கெங்கும் அதிகம் பேசப்படுகிறது. இன்றைக்கு எல்லா விதமான குருவும் இருக்கின்றனர்: கணிணி குரு, நிர்வாகவியல் குரு போன்றோர். “குரு” என்ற வார்த்தையின் பயன்பாடு நீர்த்துப்போனதால், இதன் முக்கியத்துவம் உலக அளவில் காணாமல் போய்விட்டது.

“கு” என்றால் இருட்டு, “ரு” என்றால் விலக்குவது. இருட்டு என்பது அறியாமை. உங்களது அறியாமையின் அடித்தளமாக இருப்பது தவறான அடையாளங்கள். நீங்கள் அல்லாத விஷயங்களுடன் நீங்கள் அடையாளம் கொண்டிருக்கிறீர்கள். இது வழக்கமாக, பைத்தியக்காரத்தனம் என்று அழைக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு, நீங்கள் மன நலக் காப்பகத்திற்குச் சென்றால், அங்கே தோட்டத்தில் நிலைமாறாமல் நின்றுகொண்டிருக்கும் ஒரு மனிதனை நீங்கள் காணக்கூடும், ஏனென்றால் அவர் தன்னை ஒரு மரம் என்று நம்புகிறார். தினமும் மாலையானதும், பணியாளர்கள் அவரை உள்ளே தூக்கிச்செல்ல வேண்டும், இல்லையென்றால் அவர் போகமாட்டார் – நாள் முழுக்க அவர் தோட்டத்திலேயே நின்றுகொண்டிருக்கிறார். காலையில் கதவு திறக்கும் கணமே, அவர் தோட்டத்திற்கு நடந்து சென்று ஒரு மரத்தைப்போல் நின்றுகொள்வார். இது பைத்தியக்காரத்தனம் என்றழைக்கப்படுகிறது, அப்படித்தானே?

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கு மாறாக, வேறெதுவாகவோ இருப்பதாக நீங்களாகவே நம்பிக்கொள்வது, பைத்தியக்காரத்தனம். இப்போதைய நிலையில், அதுதான் உங்களுடைய பிரச்சனையாகவும் இருக்கிறது. இந்த உடல்தான் நீங்கள் என்று எண்ணுகிறீர்கள். மன நலம் பாதிக்கப்பட்டதற்கு இணையான மோசமான நிலைதான் இது. உங்களுடைய கருத்துக்கள், உங்கள் உணர்ச்சிகள், மற்றும் உங்கள் எண்ணங்களே நீங்கள் என்று நினைத்துக்கொள்கிறீர்கள். எதனுடனும், எல்லாவற்றுடனும் நீங்கள் அடையாளம் கொள்கிறீர்கள். அதுதான் அறியாமை. இதனை அகற்றும் ஒருவர் குருவாக இருக்கிறார்.

அவருடைய இருப்பில் நீங்கள் அமரும்போது, என்ன பேசுவது அல்லது நினைப்பது என்பதை நீங்கள் அறிவதில்லை. நீங்கள் உணர்வுமேலிட இருக்கிறீர்கள். ஒரு அடிமுட்டாள் போல் நீங்கள் உணர்கிறீர்கள். அது நல்லதுதான் – அப்படியென்றால் அது செயல்படுகிறது. சட்டென்று அவரது அருகாமையில் உங்களது அத்தனை அடையாளங்களையும் முட்டாள்தனமாக உணர்கிறீர்கள். எங்கோ வீதியில் நடக்கும்போது நீங்கள் மிகவும் பெருமிதமாகவும், மகத்தானதாகவும் உணர்ந்த எல்லா விஷயங்களையும், அவைகள் எல்லாமே அவ்வளவு அர்த்தமற்றதாக திடீரென்று நீங்கள் உணர்கிறீர்கள். அது நல்லது.

நீங்கள் அவரை அளவுகடந்து விரும்பினால், அவர் உங்கள் குரு அல்ல, ஏனென்றால் நீங்கள் அவருடன் வசதியாக உணர்ந்தால், பாதுகாப்பாக ஒடுங்கிவிடுவீர்கள். மாறாக, அவரிடமிருந்து விலகி ஓடவிரும்பும் அளவுக்கு நீங்கள் அவ்வளவு உணர்ச்சிமேலிடக் கண்டால், ஆனால் உங்களுக்குள் ஏதோ ஒன்று அவரை நோக்கி உங்களை இழுத்தால், அப்போது அவரே உங்களுடைய குரு. அவரால் நீங்கள் இடையறாது அச்சுறுத்தப்படுகிறீர்கள், இருப்பினும் உங்களுக்கு அங்கே இருக்கவேண்டும் என்றால் – அப்போது அவர் உங்களுடைய குரு.

ஆசிரியர் குறிப்பு: எல்லா வரையறைகளையும் கடந்து செல்வதற்கான அரிய வாய்ப்பை அருளும் சத்குரு, உச்சபட்ச விடுதலையை நோக்கி சாதகரை ஒரு மறைஞானப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார். குரு உங்களை சாதுர்யமாகவே கையாளுகிறார் என்ற இணைய புத்தகத்தில், குரு – சிஷ்ய உறவின் ஆழ்ந்த அரிய உணமைகளை சத்குரு வெளிப்படுத்துகிறார். உங்களுடைய விலையைக் குறிப்பிட்டு, பிறகு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

சத்குரு App... இப்போது தமிழில்! இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்... இலவசமாக