உலகில் பெரும்பாலான மனிதர்களுக்குள் இருக்கும் ஒரு தவிர்க்க முடியாத கேள்வி, "உடலுறவில் ஏன் இத்தனை இன்பம்?" என்பது. இதற்கு சத்குரு தரும் விளக்கம் என்ன? படித்து அறிந்துகொள்வோம்...

Question: உடலுறவில் ஏன் இத்தனை இன்பம் இருக்கிறது?

சத்குரு:

இயற்கை உடல் உறவில் ஒருவித இன்பத்தை புகுத்தி இருக்கிறது. இன்பம் இல்லாவிட்டால் நீங்கள் பிள்ளைகுட்டி பெற்று உங்கள் சந்ததியை வளர்க்காமல் போய்விடுவீர்களே! இதில் சுகம் இல்லை என்றால் யாராவது அத்தனை வலியுடன் குழந்தை பெற்றுக்கொள்ள முன் வருவார்களா என்ன? சுகம், பிள்ளை இவை எல்லாவற்றிற்கும் மேல், உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று மற்றொன்றை உங்களுக்குள் ஒரு பாகமாக இணைத்துக் கொள்ள ஏக்கம் கொள்கிறது. இந்த ஏக்கம் உங்களுக்குள் வேரூன்றி இருக்கிறது. உடல் சேர்க்கையில் ஈடுபடும்போது, ஒரு சில ஷணங்களில் அந்த ஒன்றிணைதலை நீங்கள் உணர்கிறீர்கள். எப்போதும் அந்த ஒன்றிணைதல் நடக்காதா என ஏங்குகிறீர்கள். ஆனால் அது நடைபெறுவதில்லை. போதுமான அளவிற்கு இதனை உணர்ந்து உங்களுக்கு இந்த உறவின் மீது விரக்தி ஏற்பட்டால் அப்போது உங்களுக்கு தியானம் செய்யப் பிடிக்கும். மாட்டு வண்டியை பூட்டிக் கொண்டு நிலவிற்குச் செல்ல நினைத்தால் முடியுமா என்ன? வண்டியை வேகமாக செலுத்தி, பறக்க முயற்சி செய்யச் செய்ய விரக்திதான் மிஞ்சும். இந்த வண்டி என்னை எங்கும் கூட்டிச் செல்லாது என்று புரிந்துவிடும்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: இன்று பணமும் காமமும் மக்கள் நெறி பிறழ்வதற்கான மிக முக்கியக் காரணங்களாக உள்ளனவே?

சத்குரு:

இன்று மனித சக்தியில் 90 சதவிகிதம் காமத்திலும் பணத்திலும் தான் செலவழிகிறது என்று சொல்லலாம். நான் இதனை மிகைப்படுத்தவில்லை, இன்றைய சமூக சூழ்நிலை இவ்வாறுதான் உள்ளது. பணம் பையில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை, தலையில் ஏறிக் கொள்ளும்போது தான் பிரச்சனை துவங்குகிறது. அதே போல், காமம் உங்கள் உடலில் இருந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் அது உங்கள் மண்டையெங்கும் நிரம்பி வழிந்து துர்நாற்றம் வீசுகிறது, அதுதான் பிரச்சனை. பின்னர், மனிதர்கள் நெறிபிறழாமல் என்ன செய்வார்கள்?

நீங்கள் சில மலைவாழ் கிராமங்களுக்குச் செல்லுங்கள் அங்கே மக்கள் நிர்வாணமாய் அலைந்து திரிவதைப் பார்க்க முடியும். ஒருவரை ஒருவர் அவர்கள் திரும்பிப் பார்த்துக் கொள்வது கூட இல்லை. அவர்களுக்கு அது பெரிய விஷயமாகவே தெரிவதில்லை. ஆனால் மெத்த படித்த மனிதன் இச்சையால் அவஸ்தைபடுகிறான். நீங்கள் எதையாவது தடை செய்தால் நிகழப் போவது இதுதான். உங்கள் சந்தோஷத்தை உங்கள் பையில் உள்ள பணம் நிர்ணயிக்கும் வரை தடம் மாறுவதும், நெறிபிறழ்வதும் நிகழத்தான் செய்யும்.

Question: நாட்டில் பாலியல் பலாத்காரங்கள் அதிகமாகி வருகின்றனவே, இணையத்தில்கூட பாலியல் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது...

சத்குரு:

இணையத்தில் 80 சதவீதத்திற்கும் மேல் பாலியல் தொடர்பான விஷயங்கள் தேடப்படுவதாக நான் அவ்வப்போது கேள்விப்படுவதுண்டு. ஆனால் இதில் உண்மை உள்ளதா என்பதில் எனக்கு சந்தேகமே. ஆனால் விபரம் தெரிந்தவர்கள் எனக்கு இது சரியான தகவல்தான் என உறுதிப்படுத்துகிறார்கள். இவ்வளவு அதிகமான சதவீதத்தினர் இப்படிப்பட்ட மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான விஷயமாக தெரியவில்லை. ஒழுங்கான பாதையில் நடக்கக்கூடிய சூழ்நிலையில் மனிதர்கள் எப்போதும் வாழவேண்டும். நீங்கள் ஆன்மீகப் பாதையில் நடக்க வேண்டுமென்றால் கூட தைரியமும் வலிமையும் உங்களுக்குத் தேவை. மோசமான விஷயங்கள் உங்களைத் தாக்க வேண்டுமென்றால், உங்களைக் குறிவைத்து தாக்குதல் நடக்க வேண்டும் என்றுகூடத் தேவையில்லை. நீங்களாகவே தவறு ஒன்றும் செய்யாமல், வெறும் தவறான சூழ்நிலையில் மட்டும் இருக்க நேர்ந்தால்கூட, எதிர்மறை விஷயங்கள் உங்களைத் தாக்கிவிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றி, நல்ல வலிமையான சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.

Question: பாலியல் கல்வி முறையினால் மாணவர்களுக்கு பாலியல் அறிவு வந்துவிடும். ஆனால் ஒழுக்கமான வாழ்வு முறைக்கு இந்த கல்வி முறை உதவுமா?

சத்குரு:

பாலியல் கல்வியை யார் எவ்வாறு கற்றுத் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. பொறுப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் போதிக்கப்பட்டால் பாலியல் கல்வி சரியான தெளிவை ஏற்படுத்தும். அதுவே பொறுப்பில்லாமல் அலட்சியத்தோடு சொல்லித் தரப்பட்டால் தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல, மாணவர்களுக்கு எந்த வயதில் இந்த போதனைகளைத் தருவது என்பதும் தனியொருவரைப் பொருத்து மாறுபடக்கூடியது என்பதால் மிக கவனமாக பாலியல் கல்வி கையாளப்படவேண்டும்.