Thanimai Quotes in Tamil: தனிமையை இனிமையாக்கும் சத்குருவின் வாசகங்கள்!
தனிமை பலருக்கு கொடுமையாக, வெகு சிலருக்கு அதுவே இனிமையாகிறது; ஆன்மீகப் பாதையில் இருப்பவருக்கு அது பெரும் வரமாகிறது. தனிமை பற்றி சத்குரு கூறியுள்ள வாசகங்களின் இந்த தொகுப்பு, தனிமையின் வேறு பரிமாணங்களை நமக்கு திறக்கிறது.
ArticleMar 11, 2023
தனிமை பற்றிய சத்குருவின் வாசகங்கள் (Thanimai Quotes in Tamil)
நான் ஒருபோதும் தனிமையில் இருந்ததில்லை, ஏனென்றால் படைப்பின்
மூலமானது என்னை ஒருக்கணமும் பிரிந்ததில்லை, அது யாரையும்
ஒருக்கணமும் பிரிந்ததில்லை.
மூலமானது என்னை ஒருக்கணமும் பிரிந்ததில்லை, அது யாரையும்
ஒருக்கணமும் பிரிந்ததில்லை.
துணையோடு இருப்பது இனிமையானது, ஆனால் தனியாக இருப்பதே
முழுமையானது.
முழுமையானது.
தனிமையில் இருக்கும்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள் என்றால்,
மோசமான துணையுடன் இருக்கிறீர்கள் என்பது தெளிவு.
மோசமான துணையுடன் இருக்கிறீர்கள் என்பது தெளிவு.
800 கோடி மக்களில் ஒருவர் இல்லாவிட்டால் தனிமையில் தவிப்பீர்கள்
என்றால் அது அன்பு அல்ல, அது சிக்கிப்போதல்.
என்றால் அது அன்பு அல்ல, அது சிக்கிப்போதல்.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அடிப்படையாக, நீங்கள் தனியொரு நீர்க்குமிழி அல்ல - நீங்களே ஒரு பிரபஞ்சம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்வதுதான் தியானம்.
தனித்துவமாக இருக்க விரும்புவதால் படைப்பிலிருந்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள். பிறகு தனிமையில் இருப்பதாக வருத்தப்படுகிறீர்கள்.
சிந்தனையிலும் உணர்விலும் எந்த அளவிற்கு உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு வாழ்க்கையிலிருந்தும் உங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள்.
மனிதர்கள் தனியாக இருக்கும்போது ஆன்மீகமாய் ஆகிறார்கள். பலருடன் இருக்கும்போது மதச்சார்புடையவராய் ஆகிறார்கள்.
ஆன்மீகப் பாதையில் இருப்போருக்கு, தனியாக இருப்பதும், மக்களிடமிருந்து இடைவெளி காப்பதும், மௌனமாக இருப்பதும் பிரச்சனைகள் இல்லை - இவையனைத்தும் வாய்ப்புகள்.
நான் கோடி மக்களுடன் இருந்தாலும் எப்போதும் தனியாகவே இருக்கிறேன். நான் மக்களை மக்களாக பார்ப்பதில்லை, அவர்களை நான் என்றே பார்க்கிறேன்.
அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வருகிறது. உங்களை தனியொரு மனிதராக அல்லாமல் பிரபஞ்சத்தின் அங்கமாக உணரும்போதுதான் நீங்கள் முற்றிலும் இலகுவான நிலையில் இருக்கமுடியும்.
உடல் தனிப்பட்டது. மனமும் அப்படித்தான். ஆனால் விழிப்புணர்வு தனிப்பட்டதல்ல, அது அனைத்தையும் இணைத்துக்கொள்வதாய் மட்டுமே இருக்கமுடியும்.