Question: சில ஆசனங்களில், வேகமாக சுவாசம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு, சூரியக் கிரியாவில் செய்யப்படும் புஜங்காசனா, அல்லது சர்வாங்காசனா, மத்ஸியாசனா போன்றவற்றைச் சொல்லலாம், எதனால்?

சத்குரு:

எங்கெல்லாம் வேகமாக சுவாசம் செய்யச் சொல்கிறோமோ அங்கெல்லாம் உடல் சார்ந்த செயல்முறையை சக்தி சார்ந்த செயல்முறையாய் ஆக்க விழைகிறோம். ஆபத்தில்லாத வாய்ப்பு கிட்டும்போது, அதனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். கிரியா பயிற்சிகளை ஒரு குறிப்பிட்டவிதமான அக்கறையுடன் செய்வது மிக அவசியம். சரியான ஆயத்தப் பயிற்சிகள் இல்லாமல், நீங்கள் தவறான உடல்தோற்ற அமைவில் இருந்தால், நீங்கள் தவறான மனப்பான்மையில் இருந்தால், தவறான சூழ்நிலையில் இருந்தால், அதாவது வயிற்றில் உணவுடன் அல்லது இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இருந்தால், அந்நிலையில் உங்கள் சக்தி தூண்டப்பட்டால், நீங்கள் பேரற்புதமானவராய் மாறவேண்டிய சூழ்நிலை பேரழிவுடையதாய் மாறிப்போகும். விண்ணிலிருந்து வந்த ஒரு பானை தங்கம், உங்கள் கைகளில் வந்திறங்காமல் தலையில் விழுந்த கதையாகிவிடும்.

மலையிலிருந்து பாறை உருண்டு விழுந்து அதனால் நீங்கள் இறந்தால், அது ஒருவகையான சோகம். அதுவே அதனை கையில் பிடிக்கப் போய் அது தலையில் விழுந்து இறந்தால் அதனை பேரழிவு என்றுதான் சொல்ல வேண்டும். அதனால், ஒருசில ஆசனப் பயிற்சிகள் செய்யும்போது மட்டும், பாதுகாப்பாய் இருக்கும் பட்சத்தில், அந்த ஆசனங்களை நாம் கிரியா பயிற்சியாக மாற்றுவிக்க விரும்புகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.