Question: சத்குரு, ‘ஷம்போ’ என்பது சிவனின் ஒரு வடிவம் என்று சொன்னீர்கள்... அதை இன்னும் தெளிவு படுத்துங்கள். சிவா என்பது ஒரு மந்திரம் என்று நீங்கள் சொன்னீர்களே... சிவா என்பது ஒரு மந்திரமாக இருந்தால், அந்த மந்திரத்திற்கு எப்படி வடிவம் இருக்க முடியும்? எனவே ஷம்போ என்பது சிவனின் வடிவமா அல்லது மந்திரமா அல்லது அது ஒரு நிலையா?

சத்குரு:

இந்தக் கலாச்சாரமே, நீங்கள் முக்தி நிலையை அடைய ஏதுவாக, ஒரு அறிவியல் போல் உருவாக்கப்பட்டது. வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் - பாட்டு, நடனம், பாடம், உணவு இப்படி ஒவ்வொன்றும் முக்தியை குறிக்கோளாகக் கொண்டது. உங்கள் மதம், கல்வி, தொழில், குடும்பம் இவை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். முக்தி தான் முதன்மையான நோக்கம். முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது, இல்லையா?

உங்களிடம் ஒரு சாவியைக் கொடுத்தால், அதை நீங்கள் அணைத்து முத்தமிடலாம். அதனால் என்ன பயன்? அதை எங்கே பொருத்த வேண்டும் என்று அறிந்து எப்படித் திருப்ப வேண்டும் என்றும் அறிந்தால், ஒரு புது உலகமே திறந்து கொள்ளும். மந்திரமும் அதுபோன்ற ஒரு கருவி தான்.

முக்தி தான் ஒரே நோக்கம் என்றதால், எல்லா விஷயங்களுமே அதை நோக்கித்தான் இருந்தது. எனவே நடனம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. நீங்கள் அதில் மிகவும் ஆழமாக ஈடுபாடு கொள்ளும்போது, அதுவே உங்களை தியானநிலைக்கு கொண்டு போய்விடும். இப்படி ஒவ்வொன்றுமே உங்கள் வளர்ச்சியை நோக்கித்தான், முக்திக்கு இட்டுச் செல்வதாகத்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.

பல்லாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் இருந்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக என்று கூடச் சொல்லலாம். இந்த நோக்கத்திற்கு எந்த இடைஞ்சலும் இருக்கவில்லை. அது அமைதியோடு வாழ்ந்த சமூகம், முக்திக்கான வழிமுறைகளை அறிந்த சமூகம். மக்களை அந்த நிலைக்கு உயர்த்த வேண்டும் என்றால், எவ்வளவு அறிவுத்திறன் இருந்திருக்க வேண்டும்? இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆனது? அந்த மொத்த சமூகத்தின் திறனும் ஒரே நோக்கில் இருந்ததால் தான், அது சாத்தியம் ஆனது. உள்தன்மை குறித்த கவனத்தை ஏற்படுத்த அவர்கள் பல வழிமுறைகளையும் ஏற்படுத்தினார்கள்.

எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து பாருங்கள். உலகில் எங்கும் இதுபோல் நீங்கள் பார்க்க முடியாது. மனிதருடைய உள்தன்மையை இந்தக் கலாச்சாரம் புரிந்து கொண்டது போல் வேறு யாரும் புரிந்து கொண்டதில்லை. உள்தன்மையை மிகவும் ஆழமாக அணுகினார்கள். மேலோட்டமாக பார்க்காமல், உள்தன்மையின் வேர்வரை சென்று கண்டார்கள். அது சூட்சுமமான அறிவியலாக இருந்ததால், தர்க்கரீதியாக வெவ்வேறு அர்த்தங்கள் வந்துவிடாதபடிக்கு, அவற்றை குறிப்பிட்ட விதத்தில் வெளிப்படுத்தினார்கள், குறிப்பிட்ட சூத்திரங்களாக எழுதி வைத்தார்கள். தவறான விளக்கங்கள் யாரும் தந்துவிடக் கூடாது என்பதற்கு அத்தனை கவனம் கொடுத்தார்கள்.

அப்படி அத்தனை கவனம் இருந்தபோதும், காலம் செல்லச்செல்ல, தவறாக அர்த்தம் கொள்வது நடக்கத்தான் செய்தது. தவறான புரிதல் ஏற்பட்ட பின், அந்த அறிவியலுக்கு புத்துணர்வு தேவைப்பட்டது. எனவே, இந்தக் கலாச்சாரத்தில் பல சக்தி வடிவங்களை உருவாக்கினார்கள். அவை மக்களின் வளர்ச்சிக்குத் துணை நிற்பதாக இருந்தன. இப்படி சக்தி வடிவங்களை உருவாக்குவதைத் தான் ‘பிரதிஷ்டை செய்தல்’ என்கிறோம். இந்த சக்தி வடிவங்களை அணுகி வளர்ச்சியும் நலவாழ்வும் பெறமுடியும். மிகவும் சக்தி வாய்ந்த வடிவங்களை பிரதிஷ்டை மூலம் உருவாக்கினார்கள்.

உதாரணத்திற்கு, தியானலிங்கம் ஒரு சக்தி வடிவம். அதை உருவாக்கும் முன், அதற்குரிய ஆயத்த வேலைகளைச் செய்யவே 18, 19 ஆண்டுகள் ஆயின. பின் பிரதிஷ்டை செய்ய மூன்றரை ஆண்டுகள் ஆயின. பிரதிஷ்டையின்போது அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் இருந்தனர். அங்கு பார்த்த பேரதிசயத்தை யாரிடமாவது அவர்கள் சொன்னால், அவர்கள் ஏதோ கதை கட்டுகிறார்கள் என்று நினைப்பார்கள். யாரும் அதை நம்பமாட்டார்கள். அத்தகைய நம்பமுடியாத நிகழ்வுகள் பிரதிஷ்டையின்போது நிகழ்ந்தன.

இதுதான் சக்திநிலையிலான பிரதிஷ்டை. அங்கு இருக்கும் கல்லால் ஆன லிங்கம், சக்தியை நிலைநிறுத்தும் பணிக்கு ஒரு கட்டுமானம் போல் பயன்பட்டது. பிரதிஷ்டை முடிந்ததும், அந்த லிங்கத்தை அகற்றி இருக்கலாம். அகற்றி இருந்தால் கூட சக்திநிலையில் எதுவும் மாறியிருக்காது. ஆனால் மக்களுக்கு கண்ணால் பார்க்க ஏதாவது வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் அதனோடு ஈடுபாடுகொள்ள முடியாது. மேலும் அந்தப் பெரிய லிங்கத்தை உருவாக்க நிறைய செலவு செய்திருக்கிறோம். எனவே அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டோம்.

நீங்கள் சுவாசிக்கும் காற்று உயிரோடு இருப்பதால் தான், அது உங்களை உயிரோடு வைத்திருக்கிறது. அது உங்கள் அளவிற்கு உயிர்ப்போடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதுவும் ஒருவிதத்தில் உயிரோடுதான் இருக்கிறது.

பொதுவாக லிங்கம் என்ற சொல்லுக்கு ‘வடிவம்’ என்று பொருள். ஒவ்வொரு நட்சத்திர மண்டலமும் ஒரு நீள்கோள வடிவில் தான் உள்ளது என்று நவீன விண்வெளியாளர்கள் கூறுகிறார்கள். நீள்கோளம் என்றால் தெரியுமா? நீள்வட்டத்தின் முப்பரிமாண வடிவம் நீள்கோளம். ஒவ்வொரு பால்வெளியின் மையமும் கூட நீள்கோள வடிவில்தான் உள்ளது. அதுதான் லிங்கத்தின் வடிவமும் கூட.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

படைத்தல் நிகழும்போது, அது உருவமற்ற தன்மையிலிருந்து உருவம் எடுக்கும்போது, அது எப்போதுமே ஒரு நீள்கோள வடிவமாகத்தான் இருக்கிறது. இதையும், நவீன விண்வெளியாளர்கள் கூறுகிறார்கள். நம் அனுபவத்தில் பார்த்தால், ஒருவருடைய சக்தியை அதிகமாக்கிக் கொண்டே போனால், அந்த சக்தி கரைந்து போகும் முன் எடுக்கும் இறுதி வடிவமும் நீள்கோள வடிவம்தான், அதாவது லிங்க வடிவம் தான். எனவே, லிங்க வடிவம் தான் முதல் வடிவமாகவும் இருக்கிறது, இறுதி வடிவமாகவும் இருக்கிறது. அதனால்தான் ‘லிங்க வடிவம்’, எல்லாவற்றையும் கடந்து, நாம் உண்மையை உணர ஒரு துவார வாசலாகக் கருதப்படுகிறது.

‘ஷம்போ’ என்ற சொல் இதனுடன் தொடர்புடையது. ஷம்போ என்றால் அது ஒரு மந்திரமா என்றால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். மந்திரம் என்றால் என்ன? பிரபஞ்சம் முழுவதுமே ஒருவிதமான அதிர்வுதான் என்று நவீன விஞ்ஞானம் சொல்கிறது. நீங்கள் கண்ணால் காணும் இந்த படைத்தல் எல்லாம், அதிர்வுகள்தான். அதாவது பலவிதமான ஒலிகளின் தொகுப்பு தான். அவற்றுள் சில ஒலிகள் மட்டும் முக்கியமானவை. அந்த ஒலிகள் உங்களுக்குப் புதிய பரிமாணங்களைத் திறந்து தரும் சாவிகள் போல் இருப்பவை. இவற்றைத்தான் மந்திரங்கள் என்கிறோம். உண்மையில் ஒவ்வொரு ஒலியுமே ஒரு மந்திரம்தான். ஆனால் குறிப்பிட்ட ஒலிகளை மட்டும் மந்திரம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அந்த ஒலிகள் மிகவும் முக்கியமானவை.

உங்களிடம் ஒரு சாவியைக் கொடுத்தால், அதை நீங்கள் அணைத்து முத்தமிடலாம். அதனால் என்ன பயன்? அதை எங்கே பொருத்த வேண்டும் என்று அறிந்து எப்படித் திருப்ப வேண்டும் என்றும் அறிந்தால், ஒரு புது உலகமே திறந்து கொள்ளும். மந்திரமும் அதுபோன்ற ஒரு கருவி தான். அதை உபயோகப்படுத்தத் தெரிய வேண்டும். விழிப்புணர்வுடன் அதை உபயோகித்தால் வாழ்வின் மிக முக்கிய பரிமாணத்தைத் திறந்துவிட முடியும்.

ஒரு மந்திரத்தோடு வெறுமனே உணர்வுப்பூர்வமாக நீங்கள் பிணைக்கப் பட்டிருந்தால், அதனால் எந்த பயனும் இல்லை. உணர்ச்சிகள் மிகவும் இனிமையானவை, சுவையானவை. ஆனால், அவை உங்களை எவ்விடத்திற்கும் வழி நடத்திச் செல்லாது. அதனால் நீங்கள் மந்திரம் என்று சொல்வது அடிப்படையில் ஒரு கருவி. அப்படியெனில், அதற்கு உருவம் உண்டா? ஆம். ஏனெனில், ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு உருவம் உண்டு. எனவே ஷம்போ என்னும் சொல்லும் அதற்குரிய வடிவத்தைக் கொண்டுள்ளது. அந்த வடிவம் ஒரு மனிதரா? ஆம். அவர் உயிரோடு இருக்கிறாரா? ஆம், நிச்சயமாக. ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் உயிரோடுதான் இருக்கிறது. மிகச் சிறிய அணு முதல், பாறை, மரம், செடிகொடிகள், மரங்கள், விலங்குகள் என எல்லாமே உயிரோடுதான் இருக்கின்றன. உங்களால் அப்படி உணர முடிகிறதோ இல்லையோ, அவை அனைத்துமே உயிரோடு தான் இருக்கின்றன.

நீங்கள் சுவாசிக்கும் காற்று உயிரோடு இருப்பதால் தான், அது உங்களை உயிரோடு வைத்திருக்கிறது. அது உங்கள் அளவிற்கு உயிர்ப்போடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதுவும் ஒருவிதத்தில் உயிரோடுதான் இருக்கிறது. எனவேதான் இந்தக் கலாச்சாரத்தில், மரங்களை வணங்கினார்கள். நடக்கும் மண்ணை வணங்கினார்கள். குடிக்கும் நீரை வணங்கினார்கள். உண்ணும் உணவையும் வணங்கினார்கள்.

ஷம்போ மிகவும் மங்களகரமான வடிவம். அது சிவனின் மிக மென்மையான வடிவம். இந்த மென்மை மிகவும் அபூர்வமானது. சிவன் பொதுவாகவே முரட்டுத்தனமானவர். ஷம்போ மட்டும் தான், மென்மையான, அழகான வடிவம்.

பொதுவாக உலகின் பிற பகுதியில் எல்லாம், தங்கள் முன் உணவு வைக்கப்பட்டால், மக்கள் இறைவனை வணங்கி, பின்னர் உண்பார்கள். ஆனால் இந்தக் கலாச்சாரத்தில், யாரை வணங்குவது, எதை வணங்குவது போன்ற நாகரிகம் எல்லாம் நாம் பார்ப்பதில்லை. உணவையே வணங்கிவிட்டு உண்கிறோம். எந்தக் கடவுள் இந்த உணவை உருவாக்கினார் என்று தெரியுமா? உண்மையிலேயே நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம், இதை உண்ணாவிட்டால், உயிர் போய்விடும் என்று மட்டுமே. தட்டில் இருக்கும் உணவு, உண்ட சில மணி நேரத்தில் மனிதனாக மாறிவிடுகிறது, இல்லையா? எனவே உணவுதான் உங்களை உயிரோடு வைத்திருக்கிறது.

எனவே நீங்கள் உண்ணும் உணவை வணங்குகிறீர்கள். அப்படி வணங்கி உண்ணும்போது, எந்த உணவைச் சாப்பிட்டாலும், அது உங்களுக்குள் சென்று அற்புதமாக வேலை செய்கிறது. அதேபோல் நீங்கள் பருகும் நீரிடமும் ஒரு பக்தி உணர்கிறீர்கள். ஏனென்றால், உங்கள் உடலின் 70% நீர் தான். உங்கள் உடலுக்கு நீங்கள் எத்தனை மரியாதை கொடுக்கிறீர்கள்? அப்படியென்றால், அதை உருவாக்க பயன்பட்ட உணவுக்கும், நீருக்கும் கூட நீங்கள் அதே மரியாதையைத் தரவேண்டும் தானே?

உங்கள் கணவன், மனைவி, குழந்தை, தாய், தந்தை என்று எல்லோரிடமும் அன்பு கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் உடல்கள் எல்லாம் கூட இந்த உணவு, நீர் போன்ற மூலப்பொருட்களைத்தானே கொண்டுள்ளன? அப்படியென்றால், அந்த உணவு, நீர் ஆகியவற்றை வணங்காமல் நீங்கள் எப்படி இருக்க முடியும்? அந்த நீரோ, காற்றோ அவர்கள் உடலில் தாறுமாறாக செயல்பட்டால், அவர்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும் அல்லவா? எனவே உடலை உருவாக்கிய பஞ்சபூதங்களில், எதில் குழப்பம் ஏற்பட்டாலும், கணவன், மனைவி, குழந்தை என்று நீங்கள் கொண்டாடும் அவர்களின் உயிர் போய்விடும் அல்லவா?

ஒவ்வொரு கணமும், இந்தப் பஞ்சபூதங்கள் தான் உங்களைத் தாங்கி நிற்கின்றன. உங்களுக்கு போஷாக்கு அளிக்கின்றன. உங்களைச் செயல்பட வைக்கின்றன. எனவே அவற்றை நாம் வணங்கவேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் எதாவது சிறிது தாறுமாறாகப் போய்விட்டால், அடுத்த கணமே நாம் எல்லோரும் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து போய்விடுவோம் தானே?

இதனால்தான், இந்தக் கலாச்சாரத்தில் இதுபோன்ற சக்தி வாய்ந்த வடிவங்களை உருவாக்கினார்கள். சில யோக முறைகளில் இருந்தவர்கள், இதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். இதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காளியை அழைத்தபோது, காளி வந்தாள். அவர் தன் கையால் காளிக்கு உணவு தந்தார், காளியும் உண்டாள். இது உண்மையிலேயே நிகழ்ந்தது. காரண அறிவுடன் சிந்திக்கும் மனதிற்கு இது முட்டாள்தனம் போல் தோன்றும், இல்லையா? அவர் ஏதோ பிதற்றுகிறார் என்று நினைப்பார்கள். ஆனால் அவர் பிதற்றவில்லை. அவருடைய விழிப்புணர்வு எத்தகையது என்றால், அவர் எந்த வடிவத்தை நினைக்கிறாரோ அந்த வடிவத்தை அவர் தோற்றுவிக்கிறார்.

ஒருவரை நாம் யோகி என்று குறிப்பிடும்போது, அவர் தன் தலை மீது நிற்கிறார், தன் மூச்சை அடக்கி வைக்கிறார் என்றெல்லாம் பொருள் அல்ல. யோகி என்பவர் தன் உருவாக்கத்தை பிரித்துப் போட்டு, மீண்டும் இணைக்கும் திறன் கொண்டவர். இது யோகத்தின் அடிப்படை.

காளி வேண்டும் என்றால் காளி தோன்றுவாள். இதுபோல் எந்த வடிவம் வேண்டுமோ அந்த வடிவம் தோன்றுகின்றது. ஏனென்றால், அவை எல்லாமே ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன. வெவ்வேறு விதமான யோகிகள் வெவ்வேறு விதமான வடிவங்களை உருவாக்கினார்கள். அவற்றுள் மிக அழகான வடிவங்கள் உண்டு, மிக கோரமான வடிவங்களும் உண்டு.

இவற்றுள், ஷம்போ மிகவும் மங்களகரமான வடிவம். அது சிவனின் மிக மென்மையான வடிவம். இந்த மென்மை மிகவும் அபூர்வமானது. சிவன் பொதுவாகவே முரட்டுத்தனமானவர். ஷம்போ மட்டும் தான், மென்மையான, அழகான வடிவம். பிறர் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே முன்னர் இதை உருவாக்கி வைத்தார்கள். எப்போதுமே நிலைத்திருப்பது போல் உருவாக்கினார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அந்த வடிவங்களை அழைத்து, நம் அனுபவத்தில் அவற்றை உணரலாம். அப்படியானால் இது உண்மையிலே இருக்கிறதா? படைப்பிலேயே இருக்கிறதா? இல்லை. இவை படைப்பில் இல்லை. தம் சக்தியின் மீது ஆளுமை உள்ளவர்கள் உருவாக்கிய படைப்புகள் இவை.

ஒருவரை நாம் யோகி என்று குறிப்பிடும்போது, அவர் தன் தலை மீது நிற்கிறார், தன் மூச்சை அடக்கி வைக்கிறார் என்றெல்லாம் பொருள் அல்ல. யோகி என்பவர் தன் உருவாக்கத்தை பிரித்துப் போட்டு, மீண்டும் இணைக்கும் திறன் கொண்டவர். இது யோகத்தின் அடிப்படை. யோகா, ‘பூதசுத்தி’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் பஞ்சபூதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இயற்கையில், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன. உங்கள் உடலும் பஞ்சபூதங்களால் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பஞ்சபூதங்களின் மீது முழுமையான ஆளுமை இருந்தால், உங்களை நீங்களே பிரித்துப் போட்டு, மீண்டும் பழையபடி ஒன்று சேர்த்து விடலாம். யோகா என்றால் இதுதான்.

யோக அறிவியல் என்பது, உங்களை அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருப்பது. நீங்கள் யார் என்பதை எல்லா நிலைகளிலும் உணர்ந்திருப்பது; உடல் நிலையில், மனநிலையில், சக்தி நிலையில், இன்னும் ஆழமான நிலைகளிலும் நீங்கள் யார் என்பதை நீங்கள் தெரிந்திருந்தால், அதுதான் யோக அறிவியல். உங்களுக்குள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கிறது என்பதை இப்போது நீங்கள் நன்றாக அறிந்துவிட்டீர்கள். அந்தப் புரிதலோடு இருக்கிறீர்கள். ‘நான்’ என்று நீங்கள் அழைப்பது ஒரு சிறிய பிரபஞ்சம். இந்த சிறிய பிரபஞ்சத்தை நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டால், பிறகு நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டவர் ஆகிறீர்கள்.