ஷாம்பவி மஹாமுத்ரா

21 நிமிட பயிற்சியாக சத்குருவால் வழங்கப்பட்டுள்ள ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவை தொடர்ந்து செய்துவருவதால் ஒருவர் அடையப்போகும் பலன் என்ன... ஷாம்பவி பயிற்சியின் சூட்சும தன்மைகள் என்ன? தொடர்ந்து படித்தறியலம்!
 

சத்குரு:

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் படைத்தல் செயலின் மூலத்தை நீங்கள் தொடும் வாய்ப்பு ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியில் இருக்கிறது. ஆனால் இதை நீங்களே நிகழ்த்திக் கொள்ள முடியாது. உங்களுக்குள் அது நிகழ்வதற்கேற்ற சூழ்நிலையை மட்டுமே நீங்கள் உருவாக்க முடியும். ஷாம்பவிவை நாம் எப்போதும் பெண் தன்மை கொண்டதாகவே பார்க்கிறோம். ஒரு பக்தி உணர்வுடன் அணுகும்போது ஷாம்பவி உங்களுக்கு பலனளிக்கும். எது படைப்பிற்கு மூலமாக இருக்கிறதோ அதனுடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும் -ஆனால் அதனுடன் நீங்கள் செய்வதற்கு என்று ஏதுமில்லை. பிரணாயாமத்தின் அம்சமும் ஷாம்பவி கிரியாவுடன் சேர்ந்து இருப்பதால், தொடர்ந்து பயிற்சி செய்துவர மற்ற பல பலன்களும் சேர்ந்தே கிடைக்கும்.

ஷாம்பவி கிரியாவின் முக்கிய அம்சம், நம் உயிர் சக்தியையும் தாண்டி இருக்கும் படைப்பின் மூலத்தை தொட ஒரு கருவியாக, அது இருப்பது தான். முதல் நாளிலேயே உங்களுக்கு அது நிகழலாம் அல்லது ஆறு மாதங்கள் பயிற்சி செய்தும் எதுவுமே நடக்காதது போல இருக்கலாம். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்துவர, இந்த பரிமாணத்தை நீங்கள் தொடும் அந்த நாள் வரும், அப்போது அனைத்தும் மலரும்.

அடுத்து வரும் ஷாம்பவி மஹாமுத்திரா - ஏழு நாள் ஈஷா யோகா வகுப்புகள் 

உங்கள் ஊரிலும், அருகாமையிலும் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறும் ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களைப் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.​