செருப்பை வீசிய தெனாலி ராமன்...! - கதை சொல்லும் செய்தி என்ன?
செருப்பை வீசிய தெனாலி ராமன்...! - கதை சொல்லும் செய்தி என்ன?
 
செருப்பை வீசிய தெனாலி ராமன்...! - கதை சொல்லும் செய்தி என்ன?, seruppai veesiya thenaliraman kathai sollum seithi enna?
 

சத்குரு:

அறியாமை என்பதற்கான அர்த்தம் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஒருமுறை தெனாலிராமன் ஒருசிலரோடு அமர்ந்து தத்துவக் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இக்கூட்டத்திற்கு வெளியில் இருந்த ஒருவர் மட்டும், நடந்து கொண்டிருக்கும் விவாதத்திற்கு சற்றும் பொருந்தாமல் ஏதேதோ கூறிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் பொறுமையிழந்த தெனாலிராமன் அம்மனிதரைப் பார்த்து, “நீ ஒரு முட்டாள்! எதற்கும் உதவாதவன்... நீ ஒன்றுமே இல்லை” என்றார். இந்த அவமதிப்பால் வெகுண்ட அந்த மனிதர், “நான் ஒன்றுமே இல்லை என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்று காட்டமாகக் கேட்டார்.

மீண்டும் தெனாலிராமன், “ஆமாம், நீ ஒன்றுமே இல்லை. உண்மையாகவே நீ ஒன்றுமே இல்லை” என்றான் நக்கலாய்.

“நான் ஒன்றுமே இல்லை என்று சொல்ல, என்ன துணிச்சல் உமக்கு? நான் இந்த ஊரின் செருப்பு தைக்கும் தொழிலாளி!”

இதைக் கேட்ட தெனாலிராமன், தன் செருப்பை எடுத்து அதைப் பிய்த்து, அம்மனிதரை நோக்கி எறிந்து, “உண்மையிலேயே நீ செருப்பு தைக்கும் தொழிலாளி என்றால், இந்தச் செருப்பை மீண்டும் புதிதுபோல் தைத்துக் கொடு பார்ப்போம்’’ என்றார்.

அம்மனிதரும் அச்செருப்பை எடுத்துக்கொண்டு அதைச் சரிசெய்யக் கிளம்பிவிட்டார்.

ஆனால், நீங்கள் செய்வது செருப்புத் தைக்கும் தொழிலோ அல்லது வேறு ஏதோ தொழிலோ - யாரோ ஒருவர் உங்களை நோக்கி இப்படிச் சொல்லும்போது அதனை அவமானமாக பார்ப்பீர்கள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே தியானத்தில் ஈடுபடுபவர் என்றால், “நீங்கள் ஒன்றுமே இல்லை” என்பதுதான் உங்களுக்கு நிதர்சனம். அறியாமை என்பது எப்போதும் பற்பல அடுக்குகளில் பற்பல எல்லைகளுக்கு உட்பட்டு இருக்கிறது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1