பொதுவாக, உடல்-மனம்-உணர்ச்சி சார்ந்ததாகத் தானே அனைத்து உறவுகளையும் நாம் அறிகிறோம்! அதென்ன சக்திநிலையிலான உறவுமுறை?! சக்திநிலையிலான உறவிற்கும் மற்ற உறவுமுறைக்கும் என்ன வேறுபாடு? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது இந்த பதிவு! குரு-சிஷ்ய உறவில் நிகழும் அற்புதம் என்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்குரு, சக்திரீதியான உறவுமுறை என்பதன் அர்த்தம் என்ன?

சத்குரு:

மக்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவுமுறை என்பது உடல்ரீதியானதாகவோ, மனரீதியானதாகவோ, உணர்ச்சி ரீதியானதாகவோ இருக்கிறது. உங்களுடைய அலுவலகத்தில் யாரையாவது நீங்கள் சந்தித்தால், அது எண்ணங்களின் அடிப்படையில் இருக்கிறது. ஆனால், உடல் என்பது மற்ற மூன்று அம்சங்களுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது. ஏனென்றால், ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, மற்ற அம்சங்களும் நடக்கின்றன இல்லையா?

உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்திரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால், உங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெறத் துவங்குகிறது.

எனவே, உங்கள் உறவுமுறை என்பது இந்த மூன்று அம்சங்களின் கூட்டாகத்தான் இருக்கக்கூடும். சிலவற்றில் மனரீதியான அம்சம் ஆதிக்கமாக இருக்கலாம், சிலவற்றில் உணர்ச்சி ஆதிக்கம் இருக்கலாம், சிலவற்றில் உடல் ஆதிக்கமாக இருக்கலாம். ஆனால் இந்த மூன்றும் எங்கோ ஓர் இடத்தில் சம்பந்தப்படுகின்றன. எனவே உங்கள் உறவுமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்ச்சிரீதியாக அவை எந்த நிலையில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டி செல்ல முடியாது. இவை நல்வாழ்வுக்காகவும், சௌகரியத்துக்காகவும் உள்ளன. வாழ்க்கையில் நாம் செய்கின்ற எல்லாவற்றிலும் பங்குதாரர்களைக் கொண்டிருக்கிறோம். நீங்கள் தொழிலை தேடிச் சென்றால் ஒரு விதமான பங்குதாரர்களைத் தேடுகிறீர்கள். வீட்டில் நம்மோடு இருப்பதற்கு வேறுவிதமான பங்குதாரரைத் தேடுவீர்கள். மற்றொன்றுக்கு, அதற்கேற்றவாறு பங்குதாரரைத் தேடுவீர்கள். எனவே ஒவ்வொருவிதமான உறவுக்கும் ஒவ்வொருவிதமான பங்குதாரர்களை நீங்கள் தேடுகிறீர்கள்.

சக்தி அடிப்படையில் என்று சொல்லும்போது அது இந்த மூன்று விஷயங்களுக்கும் சம்பந்தப்பட்டது அல்ல. உங்களுடைய எண்ணம், உங்களுடைய உணர்ச்சி, உங்களுடைய உடல் இந்த மூன்றிலும் எதற்குமே இந்தப் பரிமாணங்களில் இடம் இல்லை. நீங்கள் ஒருவருடன் அமர்ந்திருக்கும்போது, உங்கள் உடல், மனம், உங்கள் உணர்ச்சிகள் கடந்த ஏதோ ஒன்று துடிப்புடன் செயல்படத் தொடங்குகிறது. நீங்கள் இதுவரை கற்பனையும் செய்திராத விதத்தில் அது நடக்கத் தொடங்குகிறது.

இப்போது பலரும் நம்மிடம் வந்து இந்த யோகாவில் அமர்ந்த சிறிது நேரத்தில், இந்த நோய் போய்விட்டது, அந்த நோய் போய்விட்டது என்று சொல்வார்கள். இவையெல்லாம் நடப்பது ஏன் என்றால், யாரோ ஒருவர் இங்கே அமர்ந்துகொண்டு அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதால் அல்ல.

உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்திரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால், உங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெறத் துவங்குகிறது. தீட்சை என்பதன் அடிப்படை என்னவென்றால் ஒரு மனிதனை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ இல்லாமல் சக்தி ரீதியாக நீங்கள் தொடுகிறீர்கள்.

ஆனால், உங்கள் மனதையும், உங்கள் உடலையும், ஓரளவுக்கு உங்கள் உணர்ச்சியையும் ஈர்க்காவிடில், உங்களைத் தொடுவது என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை. எனவே ஒரு குரு சிஷ்ய உறவு முறையில் வேறு எவராலும் தொடப்பட முடியாத பரிமாணத்தை சக்திரீதியில் நாம் செய்கிறோம். வேறு ஒருவராலும் தொடப்பட முடியாத இடம் அது. உறவுமுறைகள் இன்னொரு பரிமாணத்தில் வளர்வதற்கு இதுதான் நேரம்!